Jump to ratings and reviews
Rate this book

Veerapandiyan thalai konda koparakesari Aaditha karikalan / வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்

Rate this book
அன்பு,காதல், வீரம், விவேகம், வாகை, பாசம், பகை, துரோகம், பழி!!! பொன்னியின் செல்வனுக்கு முன்னால் நடந்தது என்ன? மறக்கப்பட்ட சோழ இளவரசன் உத்தமசீலியைக் கொன்றது யார்? வீரபாண்டியன் தலையைக் கொய்ய காரணம் என்ன? சேவூரில் செங்குருதி குடித்த ஆதித்த கரிகாலனின் வீரக்கதை! "வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்"

Kindle Edition

Published October 7, 2021

24 people are currently reading
158 people want to read

About the author

Inba Prabhanjan

3 books8 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
39 (43%)
4 stars
30 (33%)
3 stars
14 (15%)
2 stars
5 (5%)
1 star
2 (2%)
Displaying 1 - 22 of 22 reviews
7 reviews
Read
November 30, 2021
புத்தகம். : ஆதித்த கரிகாலன்
எழுத்தாளர்: இன்ப பிரபஞ்சன்
பக்கங்கள்: 267
நூலங்காடி : பனுவல் புத்தக நிலையம்

🖋️ பொன்னியின் செல்வனையும் , உடையாரையும் படித்து முடித்தவர்களுக்கு இக்கதையும் , கதைமாந்தர்களும் மிகவும் பரிச்சயமாக இருப்பார்கள்.

🖋️ உத்தமசீலி என்ற சோழ அரசனை கொன்றவர்களை பழிதீர்க்க அவதரித்த ஆதித்த கரிகாலன் என்னும் சோழ சிங்கத்தின்‌ கதை ‌.

🖋️ அருள்மொழி , குந்தவை, நந்தினி, வந்தியத்தேவன், பூங்குழலி,ரவிதாசன்‌ போன்றவர்களை‌ கதையில் படிக்க பொன்னியின் செல்வன் நினைவுகளை அசைபோட வைத்து உள்ளார் எழுத்தாளர்.

🖋️சேவூர் போர்க்களம் பற்றிய வர்ணனை அருமை (ப.எ: 163).இதுவரை கேள்விப்பட்டாத தகவல் . சோழர்களின் போர் வியூகத்தை படித்த பின் மினி பாகுபலியின் போர்க்களம் கண்முன்னே வந்து சென்றது.

🖋️ஆதித்த கரிகாலன் , நந்தினியின்‌ காதல் தோல்வியின் வலிகள் வரிகளில் எதிரோழித்து‌.

🖋️ஆதித்த கரிகாலனின் வீரம் , வந்தியத்தேவனின் வாள் திறன்‌ -அழகு .

🖋️ எழுத்தாளரின் பலம் எழுத்துகளின் வலிமையில் உள்ளது.பல வலிமை மிக்க வரிகளுக்கு இடையில் வலிகள் நிறைந்த வரிகளையும் எழுதியுள்ளார்.
ப.எ : 154 " இலங்கையில் வாசிக்கும் மக்களுக்கு துன்பமே என்ன என்று தெரியாதாம் " இவ்வரிகளை படித்த பின்‌ கண்கள் குளமாகியது.

🖋️ ஆதித்த கரிகாலனின்‌ மரணத்தை பற்றிய மர்மம் இதுவரை களைய பட வில்லை .

அருமையான படைப்பு படிக்க மறவாதீர்கள்.எழுத்தாளரின் முதல் படைப்பு வாழ்த்துக்கள்.ஆதரவும் , ஊக்கமும் தருவோம் .
Profile Image for Elankumaran.
141 reviews25 followers
March 9, 2022
ஆதித்த கரிகாலன் ❤️

ஆதித்த கரிகாலனின் தீவிர பற்றாளன் என்ற வகையில் இப்புத்தகம் கிடைத்ததே மிக்க மகிழ்ச்சி. கதை பொன்னியின் செல்வனை தழுவி அதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை, ஆதித்த கரிகாலனை மையமாக கொண்டு புனையப்பட்டிருக்கிறது.

இன்ப பிரபஞ்சனின் எழுத்து முதல் புத்தகம் என்ற எண்ணமே எழாத வண்ணம் சிறப்பாகவும் கதை சொல்லல் விறுவிறுப்பாகவும் ஆவலாகவும் பக்கங்களை புரட்ட வைத்தது.

இதுவரை பெரிதும் அறிந்திராத உத்தமசீலியின் கதையையும் அழகாக களமேற்றியிருக்கிறார். போர்க்காட்சிகளும் சிறப்பு. நான் மிகவும் ரசித்தது வீர பாண்டியனை தாழ்த்தி வர்ணிக்காமல் கடைசிவரை வீரனாகவே காட்டியது. பாராட்டத்தக்கது. பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்கள் சிலர் இங்கும் வருவது சுவாரஸ்யமாகவும் ஒரு பிணைப்பையும் உருவாக்குகிறது.

இறுதிப்பக்கம் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்க வேண்டியது தான் இனி!
Profile Image for Ram Gokhul  R.
9 reviews
December 11, 2021
It's a kind of Prequel to Ponniyin Selvan🔥🔥
Fully Statisfied with Part 01😍
Waiting for Part 2❣🔥🔥
Profile Image for Monica.
28 reviews
December 9, 2021
Most thriving book.. hooked from the start
7 reviews1 follower
December 1, 2021
ஆதித்தகரிகாலனுக்கு எப்படி வீரபாண்டியனை கொன்று உத்தமசீலியின் கனவை நிறைவேற்றினார் என்பதே இந்நூல் ,போர் சூழல் அனைத்தும் நன்கு விவரிக்கப்பட்டுள்ளதால் போர்க்களத்தில் நாம் இருந்து பார்க்கும் உணர்வை தருகிறது..நிறைய பழங்கால வழக்கங்களும் இந்நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது...
1 review
May 17, 2022
This book is a prequel to Kalki's ponniyin selvan where the author describes the life of Aditya Karikala and his war against Veerapandian. The author has written in such a way that the readers would not get bored throughout the entire reading. The war scenes are depicted in a great way. i would suggest all the history or historical fiction lovers to give this book a read.
Profile Image for Dean.
39 reviews1 follower
March 12, 2022
என்ன? இன்னொரு பொ.செ தொடர்ச்சி நூலா? ஓம். அதே தான். ஆனால், இதன் தனித்துவமான சிறப்புகள் பல. இது வரை நாவல்களில் எழுதப்படாத உத்தமசீலி இக்கதையில் வருகிறார். சோழ - பாண்டிய தீராப் பகையின் தொடக்கப் புள்ளி அது. அதிலிருந்து கதை ஆரம்பித்தது அபாரம்.

ஆதித்த கரிகாலன். நம் கதாநாயகன். பொ. செவில் கண்டு வியந்த நாம், இதிலும் அவரைக் கண்டு வியக்கிறோம்.

கதையைச் சுருக்கமாக கூறினால் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியன் தலையை எப்படி கொய்தார் என்பது தான். ஆனால், அப்போர் நடவ முதல் நடந்தவற்றை அழகாக சுவாரசியமாக தந்தது எழுத்தாளரின் வெற்றி.

நம் மனம் கவர்ந்த வந்தியத்தேவனும் அறிமுகமாகிறார். அவர் ஆதித்த கரிகாலரை முதன்முதல் சந்தித்த காட்சி அழகு. வந்தியத்தேவனின் புளியஞ்சோறு காட்சிகளும் அதி நகைச்சுவையானவை.

நவகண்ட காட்சியோ ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் காட்சியை நினைவூட்டியது.

நந்தினியின் ஆரம்ப கால வரலாறும் விவரிக்கப்பட்டுள்ளது.

வீரபாண்டியன் பார்த்துக் கொண்டிருக்க புலி, குளத்தில் இருந்த மீனைப் பதுங்கிப் பிடிக்கும் காட்சி மனம் கவர்ந்தது.

நமக்கு ஏற்கனவே அறிமுகமான சிலரும் வருகின்றனர். கருவூர்த்தேவர், ஆழ்வார்க்கடியான், ரவிதாசன் மற்றும் பலர்.

கடைசி நூறு பக்கங்களும் போரை களமாக கொண்டமைகிறது. போருக்கான விதிமுறைகளை அமைக்கும் காட்சிகள் சுவாரசியமானவை.

வீரபாண்டியனையும் சளைத்தவனாக காட்டவில்லை எழுத்தாளர். அவனும் ஒரு வீரனாகவே புனையப்பட்டுள்ளான்.

கதை முடிவில் ஒரு சின்ன ஆச்சரியம். அது சுவாரசியமாகவும் வியப்பாகவும் இருக்கும்.

உத்தமசீலியின் கொலையைப் பழி தீர்க்கப் பிறந்த அவதாரமே ஆதித்த கரிகாலன். அந்த அவதாரத்தை முடித்து மறு அவதாரமாக மீண்டும் பிறந்து சாதனைகளைப் படைத்தார். அந்த மறு அவதாரம் மதுராந்தக இராஜேந்திர சோழன் தான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

இந்நூல் முதற் பாகம் மட்டுமே. இரண்டாம் பாகம் எப்படி இருக்கப்போகிறது என்ற ஆவல் அதீதம் எனக்கு!

விரைவில் வெளியிடும் எழுத்தாளரே!
49 reviews3 followers
Read
December 26, 2023
குறுகிய காலத்தில் 800க்கும் மேற்பட்ட படிகள் விற்ற இந்நூல் தம்பி இன்பனின் முதல் படைப்பு. பொ.செ.(பொன்னியின் செல்வன்) வாசகர்களைக் கவர்வது கடினம் என்றுணர்ந்தே நூலைத் தொடங்குகிறார் தம்பி. 27 படலம் (அத்தியாயம்) கொண்ட இந்நூலை ஒருநாளைக்கொரு படலம் என்று 27 நாளில் முடிக்கலாம் என்ற கணக்குடன் தொடங்கினேன். ஆனால் முடித்ததோ 4 நாளில். நூலைப் படிக்கும்போதே ஆ���ிரியருடன் கலந்துரையாடும் வாய்ப்பைத் தந்ததிந்நூல். படிக்கப்படிக்க அவ்வப்போது தம்பியுடன் உரையாடி வந்தேன்

வரலாற்றுத் திரைப்படம் பார்த்த உணர்வைக் கொடுக்கிறது இந்நூல் எழுதப்பட்ட பாங்கு. கதைமாந்தர்களின் அறிமுகத்தில் தொடங்குகிறது இந்தத் திரைக்கதை உத்தி. தொடக்கமே ஒரு போர்க்களத்தில். தொடங்கும்போது புதிய கதை மாந்தர்களுடன் தொடங்கிப் பொ.செ வாசகர்களுக்குத் தம் வாழ்வோடு ஒன்றிவிட்ட கதை மாந்தர்களைக் காட்டிப் படிப்போரைக் தன்னுடன் ஒன்றச் செய்கிறது இந்நூல்

கதையின் முன்கள ஆட்டக்காரர்களான உத்தமசீலி, வீரபாண்டியன், ஆதித்தகரிகாலர், வந்தியத்தேவர் போன்றோரின் அனல் பறக்கும் அறிமுகத்தின்பின், சோழகுல விளக்கான குந்தவை, எதற்கெடுத்தாலும் மயங்கிவிழும் வானதியுடன் அரசர்க்கரசர் அருள்மொழித்தேவருடைய நகைச்சுவையான அறிமுகம் படிப்போரைச் சற்று அமைதிப்படுத்த, ஆழ்வார்க்கடியானின் அறிவுக்கூர்மையும், வழக்கம்போல் வலியச் சென்று வம்பில் சிக்கும் வந்தியரின் என்றும் மாறா வாடிக்கை விளையாட்டுக்களும் படிப்போரை இழுத்துச் செல்கின்றன

வீரபாண்டியனை வெல்ல எண்ணும் கரிகாலரின் கடுஞ்சினத்தால் மறைந்த மாவீரர் உத்தம சீலியாகவே அவர் தோன்றும் காட்சி உணர்ச்சிப் பிழம்பின் உச்சம். அழிக்கும் சினம் கொண்ட கரிகாலருக்குக் கருப்புக் குதிரை, காக்கும் குணம் கொண்ட அருள்மொழித்தேவருக்கு வெள்ளைக் குதிரை என்ற ஆசிரியரின் குறியீடு உணரத்தக்கது

கோயிலை விட்டுச்செல்ல மனமின்றிக் கரிகாலர் மனம் தேவியின் திருவடிகளேலேயே தங்க அவருடல் மட்டும் வெளிச்செல்லும் ஒரு காட்சி, இதைப் படித்ததும் கரிகாலருக்கும் எனக்குமான இந்த ஒற்றுமையை எண்ணி அறிவற்ற மனம் ஆடிக்களித்தது. வேள்வி செய்து பகையை அழிக்க எண்ணும் நம்பிக்கையைப் பற்றிய ஆசிரியரின் விளக்கம் அருமை. கடல் அலையில் ஆடும் கப்பலைத் தொட்டிலில் ஆடும் குழந்தைக்கு ஒப்பிடும் உவமை அழகு

இன்னும் பல எதிர்பார்த்த, எதிர்பாராத திருப்பங்களுடன் அடுத்த பாகத்திற்கு ஒரு முன்னீடுடன் முதல் பாகம் நிறைவடைகிறது

இறுதியாக நூலில் இருந்து ஒரு வரி,

"வந்திருப்பது பொந்துகளில் ஒளிந்து கொள்ளும் எலி அல்ல. யானைகளைக் கூட கொன்று அதன் மேல் ஏறி நின்று உறுமும் புலி"
Profile Image for Khiya_view.
20 reviews2 followers
June 10, 2022
பொன்னியின் செல்வன் படித்த பிறகு (கல்லூரி நாட்களில்) ஆதித்த கரிகாலன் கதாபாத்திரமே என்னுள் உன்றிப்போனது. காரணம் என்னில் உள்ள சில குணங்களை அந்த கதாபாத்திரம் சுமந்துநின்றதால். ஆனால் ஒரு குறை அதை கல்கி இன்னும் சற்று விரிவாய் எழுதி இருக்கலாமே என்று. அதை தொடர்ந்து உடையார் வாசிக்க நேர்ந்தது அதன் பிறகு அந்த கதாபாத்திரம் குறித்து இன்னும் கதைகளை தேடத்தொடங்கினேன். தேடலின் விடையாய் இன்பா'வின் "வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்" நாவல்.

கல்கி பொன்னியின் செல்வனில் விட்டுச்சென்ற வெற்றிடங்களை இந்நாவல் நிரப்புகிறது. நாமே ஒரு கதை அதன் பாதை அமைப்பதை காட்டிலும் சவாலானது வேறு ஒருவர் கதையை தொடர்வது, அந்த கதையின் திருப்பங்களை உடைக்காமல் சுவாரசியமா எழுதுவது. அதை எழுத்தாளர் இன்பா திறம்பட எழுதியுள்ளார். சிறு சிறு கதாபாத்திரங்களும் என்னை மிகவும் கவர்ந்தது குறிப்பாக மலையன் கதாபாத்திரம். அதை தவிர்த்து இந்த நாவல் முடிந்த விதமும் அடுத்து என்ன என்ற ஆவலை தூண்டிற்று.

பின் குறிப்பு: சரித்திர நாவல் வாசகர்கள் சரித்திர நிகழ்வையும் புனைவையும் பிரித்தறிந்து மேலும் பல புனைவுகள் வர வழிவகை செய்ய வேண்டும் (which im actively trying). அவ்வாறு பிரித்தறிவதின் மூலமாகவே harry potter போன்று பல தமிழிலும் நாவல்கள் பெருகி எழுத்தாளர்களையும் செழிக்க வைக்கும். மேலும் அரசர்கள் வீர தீர செயல்கள், பொதுவாழ்க்கை குறித்து மட்டுமே நாம் அறிவோம் ஆகவே மாற்று அரசன் மேல் வெறுப்புகளை தவிர்ப்போம். a king of any dynasty could have been good or bad but only actual people lived there would know so, let's praise all of them for their achievements and support writers for giving a view to the past.(i can hear your mind voice saying "ithellam engalukku theriyum ne kelambu" but felt like sharing )

எழுத்தாளர் இன்பா'விற்கு - சில இடத்தில் வாக்கிய அமைப்பிலும், வார்த்தை பிரயோகத்திலும் மேலும் சிறு கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பான படைப்புக்களை படைக்கலாம் . வாழ்த்துக்கள்.
3 reviews
November 30, 2021
நண்பர் எழுதிய முதல் கதையைப் படித்து விட்டேன் மிகவும் சிறப்பாக இருக்கிறது பொன்னியின் செல்வனுக்கு சிறந்த முன்கதை எனக்கு தெரிந்து இது தான், பொன்னியின் செல்வனுக்கு முன் கதையாக மலர்ச்சோலை மங்கை மற்றும் சண்டே டிஸ்டர்பர்ஸ் யூடியூப் சேனலில் ஆதித்த கரிகாலன் என்ற கதை உள்ளது ஆனால் அது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்,
மலர்ச்சோலை மங்கை கதையில் எதுவும் தெளிவாக கூறப்பட்டிருக்காது அவருக்கு ஏற்றவாறு கதையை மாற்றி சற்று வேறு விதமாக கூறியிருப்பார் அதேபோல் சண்டே டிஸ்டர்பர்ஸ் யூடியூப் சேனலில் இருக்கும் ஆதித்த கரிகாலனின் கதை மொத்தமும் போர்க் களத்தை மையப்படுத்தி இருக்கும் அதில் கல்கி கூறிய விடயங்கள் பெரிதும் இருக்காது, ஆனால் இக்கதை அதை அதிலிருந்து மாறுபட்டு சிறப்பாக இருக்கிறது கல்கி தன் கதையில் முன் கதையாக மேலோட்டமாக கூறியிருப்பதை இக்கதை விரிவாகக் கூறி இருக்கிறீர்கள் மேலும் சேவூர் போர்க்களம் பற்றி தங்களின் விவரிப்பு அருமையாக இருந்தது வீரபாண்டியன் குறித்த இறுதி திருப்பம் எதிர்பார்க்கவேயில்லை அருமையாக இருந்தது, இறுதியாக கதையை முடித்த விதமும் சிறப்போ சிறப்பு குறை கூற எதுவுமில்லை ஆனால் ஒன்று மட்டும் உள்ளது, இது குறையல்ல ஒரு சின்ன எதிர்பார்ப்பு நிறைய பக்கம் எழுதினால் நன்றாக இருக்கும் சீக்கிரமாக முடிந்துவிட்டது அடுத்த பாகம் நிறைய எழுதுங்கள் உங்களின் பணி தமிழுக்கு தேவை
Profile Image for Thuriii Kumanan.
41 reviews
November 19, 2025
#25 of 2025
Read on: 19/11/2025
வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்
By Inba Prabhanjan

This is a historical fiction based on the story including the events that happened when Aditya Karikalan killed Veera Paandian. Such an amazing narration where the reader has this urge to turn the page and finish it in one sitting. The inclusion of some other historical details and the war techniques and their descriptions were too good. If you have already read Ponniyin Selvan, this is an amazing story to follow up with.

But for me, the major doubt is whether Vandhiyathevan was a part of the Sevur War. Though Vandhiyathevan is a fictional character created by Kalki, the writer said that he is not disturbing the plot of Kalki. But Vandhiyathevan participating in the war and Periya Paluvettarayar’s complete absence raise questions for the reader throughout. But still, this can be a good try and a good read for sure.
Profile Image for Gautami Raghu.
229 reviews23 followers
March 21, 2022
பொன்னியின் செல்வன்-ஐ வாசிக்கத் தொடங்கலாம் எனும் பொழுதே இப்புதினத்தைப் பற்றி அறிந்தேன். கதைக்களம் பொன்னியின் செல்வனுக்கு முன்னர் நடந்ததை விவரிப்பதால், இப்புதினதையே வாசிக்கத் துவங்கினேன்.
இராஜா இராஜா சோழனை போற்றும் பல்வேறு புதினங்களும் புத்தகங்களும் இருக்க, ஆதித்த கரிகாலன் எனும் மாவீரனை இவ்வுகலகிற்கும், இத்தலைமுறைக்கும் விமர்சையாக எடுத்துரைத்த ஆசிரியருக்கு நன்றிகள்! சோழ கதாபாத்திரங்களை முன்னராகவே அறிந்ததனால், பொன்னியின் செல்வன்-ஐ வாசிக்கத் தகுந்த அடித்தளம் கிடைத்ததாகவே எண்ணுகிறேன்.
வேள்பாரி-ஐ வாசித்து, அதிலிருந்து மீள முடியாமல் இருக்கும் நான், பாரியை பற்றி கரிகாலன் கூறியது ஒரு பத்தியானாலும் வெகு மகிழ்ச்சி அளிக்கிறது❤
ஆசிரியரின் முதல் புதினம் என்ற போதும் விவரிப்புகள் சற்று பேச்சு வழக்கு போலுள்ளதால் கதையின் மேலுள்ள ஈர்ப்பு குறைகிறது.
வாசிக்க சுவாரசியமாகவும், பண்டைய காலத் தகவல்களோடும் இருக்கும் இப்படைப்பின் இரண்டாம் பாகத்திற்காகக் காத்திருக்கிறேன்😊
1 review
December 17, 2021
The story is a compilation of few incidents from the life of Aaditha Karikalar. Being a prequel of Ponniyil Selvan, PS lovers can connect more with the story, while Non PS readers can also go for it, as there won't be any spoilers of former. The plot is intriguing. The bond between Aadithar and Arulmozhi is presented in a tidy way. Thus an authentic potrayal of Aadithar's life with the aesthetic toppings of contemporary insights. Best wishes to the author💙
Profile Image for Pravin Rajh.
3 reviews
October 16, 2022
படவரியில் பார்த்த உடன் ஈர்த்தது..
ஆதித்த கரிகாலன் பொன்னியின் செல்வனில் கதைக்கு கருவாக இருந்தாலும் கதாநாயகன் இல்லையே எனவும், அந்த காதல் பிரிவை பற்றி வரும் இடங்களில் அவனின் வீர செயலை குறைவாக சொல்லிவிட்டாரே கல்கி என தோன்றும் அதை முழுவதுமாக நிறைவேற்றி இருக்கிறார் இன்ப பிரபஞ்சன்..
எளிமையாக எழுதி இருந்தாலும் கதையின் விறுவிறுப்பு குன்றவில்லை..
கதையில் அங்கங்கே பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் எட்டி பார்க்கும் போது முக மலர்ச்சி
2 reviews
December 3, 2021
This is one of the wonderful books I've read, written by Dr.Inba prabanjan. The book is all about the unknown important character of chozha king "Utthamaseeli". When I was reading the book it feels like the book was written by the grand grand grand son of the Great Amarar. Kalki Krishnamoorthy.
History lovers must read this book💙
Profile Image for Aswin Balamurali.
41 reviews
July 11, 2023
We all know Nandhini, Poonguzhali are fictional and already been said enough in PS, felt a bit boring since already read PS, how ever some factual events are been added into this book which made it somewhat interesting. The way Aadithya karikalan handled the wat with Veera pandiyan was given much importance. Lets hope for part 2 and 3
Profile Image for Farhana Thamiz.
43 reviews5 followers
February 13, 2023
This is the second book which I am reading on Tamil history. I found myself very engaged while reading history books by English authors. But I never knew I will become crazy for my Tamil history. I felt so much satisfied after reading this.
2 reviews
December 3, 2021
பொன்னியின் செல்வன் படித்த பிறகு ஆதித்த கரிகாலனை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள உதவியாக இருந்த புத்தகம்.... பொன்னியின் செல்வனின் முன்னுரையின் வெளிபடு இத்த புத்தகம்
2 reviews
January 28, 2022
Great One!

Very good book! Written in a very simple way for everyone to understand well. Great work. Waiting for part 2.
Profile Image for R.Naresh.
1 review
May 26, 2022
பொன்னியின் செல்வனின்😍 தீவிர ரசிகராக இருந்தால் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். இந்நூல் ஆதித்த கரிகாலனைப் பற்றியது. இது அவரது துணிச்சலான மற்றும் தொழில்நுட்ப போர் உத்திகள், அவரது நாடு, குடும்பம் மற்றும் அவரது அன்புக்குரிய உடன்பிறப்புகள் மீதான அவரது அன்பை வெளிப்படுத்துகிறது. அதைவிட முக்கியமாக தன் கொள்ளுத்தாத்தா "உத்தமசீலி"யை கொன்ற வீரபாண்டியனை பழிவாங்குவது. போர் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. அனைத்து கதாபாத்திரங்களையும் நேர்த்தியுடன் அழகாக சித்தரித்த எழுத்தாளர் @written_by_inba பாராட்டுகளும் வாழ்த்துகளும்🎉.

A must read book if you are an ardent fan of Ponniyin Selvan. This book is about Aaditha karikalan. It showcases his daring and technical war strategies, his love towards his country, family and his beloved siblings. More importantly to avenge Veerapandian for killing his great-grandfather "Uthamaseeli". War sequences are so interesting. Kudos & best wishes🎉 to the Author @written_by_inba who beautifully portrayed all the characters with elegance.
Displaying 1 - 22 of 22 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.