வாசகப் பெருமக்களுக்கு என் இதயங்கனிந்த அன்பு வணக்கங்கள்.
அச்சுலகில் மட்டுமே கால் பதித்த என்னை இணையத்திலும் கால் பதிக்க வைத்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்!!
பலருக்கும் கிரிக்கெட் பிடிக்கும் என்ற பொது அபிப்பிராயத்தை வைத்து ஆன்லைனில் நான் எழுதிய இரண்டாம் கதையான “நெஞ்சைப் பூப் போல் கொய்தவளே!” என்னும் என் அடுத்த முயற்சி தான்.. தற்போது “காதல் கிரிக்கெட் !” என்ற புது நாமம் பெற்று உங்கள் கை வசத்தில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.
காதல் மண்ணவர்களை மட்டுமல்ல.. விண்ணவர்களை கூட விட்டு வைப்பதில்லை.. விண்ணவர்களே காதலில் ஆட்படும் போது.. தன் துடுப்பு மட்டையால் பந்தை விண்ணுக்கு தூக்கி தூக்கி அடிக்கும் கிரிக்கெட்டையுமா அது விட்டு வைக்கும்?