வெற்றி என்பது முடிவு அல்ல அது அடுத்த பயணத்திற்கான தொடக்கம். இதன் முதல் பாகத்தில் சொன்னது போல பூமியில் தோன்றியது முதல் இறுதி வரை ஒவ்வொரு நாளின் தொடக்கமும் Survival-கான முன்னேற்பாடுதான்.
வெற்றி தோல்விகளை விட எனக்கு முதன்மையாக தோன்றிய ஒன்று அடையாளம், நன்றோ தீதோ அடையாளம் இல்லாவிடில் வாழ்ந்ததற்கான சரித்திரம் இன்றி போகும்.
அப்படி இழந்த அடையாளத்தை மீட்க துடிக்கும் மீராவிற்கும், கிடைத்த அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள போராடும் மித்ராவிற்குமான போராட்டமே இந்த புத்தகம்.
விளையாட்டிலும் சரி வாழ்க்கையிலும் சரி வெறும் ஒற்றை வெற்றி மட்டுமே போதாது.. பெற்ற வெற்றியை தக்க வைக்க தேவைப்படும் உழைப்பு அபரிமிதமானது.