ஒருவேளை, அவளது பங்கைக் கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தினால்தான், இடத்தை இப்படியே வைத்திருக்கிறார்களோ என்று கூட, அவ்வப்போது சௌமிக்குத் தோன்றும். ஆனால் அவர்கள் என்னதான் தடையற்றுப் பேசினாலும் அவர்களிடம் பணி புரிகிறவள், அப்படி நேரடியாக எதையும் கேட்க முடியாதல்லவா?
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.
She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.
She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.
மனம் ஆசைப்படும் அனைத்திற்கும் வார்த்தைகளால் வடிவம் கொடுக்கவும் எவ்வித தயக்கமும் இல்லாமல் எதிராளியை வசப்படுத்திச் செயல்முறை படுத்தவும் குழந்தைகளால் இயலும்.
வாங்கும் சம்பளத்திற்கு மூளையைக் கசக்கி பிழிந்து பல புதிய உத்திகளைச் சொல்லும் சௌமித்ராவின் சொற்கள் முதலாளிகளான வயதான இரு பாட்டிகளின் காதில் போய்ச் சேர்ந்தாலும் எதுவும் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் கிடக்க... பாட்டியின் பேரன் சுதர்மன் வந்து சேர்கிறான்.
மேற்பார்வை என்ற பெயரில் வெட்டியாக இருக்கிறாள் என்று கத்துபவன் பல மாற்றங்களைச் செய்து பாட்டிகளுக்கு இலாப கணக்கை காட்டியதுடன் சௌமித்ராவின் முயற்சிகளைத் தெரிந்த பின்னர் நட்பு பாராட்டி அவளின் அக்கா மகளின் நண்பனாகிறான்.
விபத்தில் அக்காவை இழந்த பிறகு அவளின் மகள் அபியை தானே வளர்க்க எடுத்த முடிவால் சௌமித்ராவின் திருமணம் தடைப்படுவதைக் கேள்விப்பட்ட அபி, சுதர்மனை தன் சித்தி மணந்தால் அனைத்திற்கும் சாதகமான சூழல் உருவாகும் என்று அவள் தொடங்கும் முயற்சி வெற்றிப் பெறுகிறது.