எழுதிய முதல் சிறுகதை ’மண்குடம்’. பலரும் பாராட்டினார்கள். எழுத்தாளர்கள் கந்தர்வன், தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மைப் பொன்னுச்சாமி, தமிழ்ச்செல்வன், எஸ்.வி.வேணுகோபால் போன்றவர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ‘இலக்கியச்சிந்தனை’ அமைப்பால் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. கணையாழியின் கடைசிப் பக்கத்தில் எழுத்தாளர் சுஜாதா அந்தக் கதையைப் பாராட்டி எழுதி இருந்தார். கொஞ்சநாள் கிறுகிறுத்துத்தான் போனேன்.
’ஞானப்பால்’ சிறுகதையை எழுத்தாளர் ஜெயகாந்தன் ‘கவிதை போலிருக்கிறது’ என பாராட்டியதும், மீனாட்சி புத்தக நிலையத்தால் வெளிவந்த ‘இராஜகுமாரன்’ சிறுகதைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதியதும் என் எழுத்துக்களĬ
பூர்வீகம் திருச்செந்தூர் அருகே செங்குழி என்னும் சிற்றூர்.
இதுவரை இராஜகுமாரன் (மீனாட்சி புத்தக நிலையம்) , போதிநிலா (வம்சி பதிப்பகம்)என்னும் இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
சேகுவேரா (சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில்), காந்தி புன்னகைக்கிறார், ஆதலினால் காதல் செய்வீர், மனிதர்கள் நாடுகள் உலகங்கள், என்றென்றும் மார்க்ஸ் என்னும் Non-fiction நூல்கள் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
புத்தரைப் பார்த்தேன் என்னும் சொற்சித்திர தொகுப்பும், , உடைந்த முட்டையும் தலையெட்டிப் பார்த்த டைனசரும் என்னும் அரசியல் கட்டுரைகள் தொகுப்பும் அமேசானில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
பள்ளம், இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய மூன்று ஆவணப்படங்கள் இயக்கப்பட்டு இருக்கின்றன.
மண்குடம் என்னும் சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது.
இரவுகள் உடையும் ஆவணப்படம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஜான் ஆபிரகாம் தேசீய விருதுக்கான திரைப்பட விழாவில் பங்கு பெற்றது.