சிவமயம்........ இந்தப் புதினம் ஒரு தெய்வீக தொடர் இதில் பல அமானுஷ்யங்களும் அதிசயங்களும் நிறைந்திருக்கிறது ரசவாதம் (எதையும் தங்கமாக்கும் சித்த ரகசியம்) இச்சாதாரி நாகம், நாகமாணிக்க கல், பதினெட்டு சித்தர்களை பற்றியும். குறிப்பிட்டு சுவர்ண சித்தர், நாக சித்தர், பிரம்ம சித்தர், குரங்கு சித்தர் என்று பல சித்தர்களைப் பற்றிய தொகுப்பாகும். பக்தி, ஆசை, பாசம், பந்தம், பலிஉணர்ச்சி மற்றும் பல உணர்வுகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று இதில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்
இந்திரா சௌந்தர்ராஜன்..... இவர் தென்னிந்திய இந்துமத பாரம்பரியம் மற்றும் புராண இதிகாசங்களைக் கலந்து எழுதுவதில் வல்லவர். இவருடைய கதைகள் பொதுவாக அமானுட நிகழ்வு, தெய்வீக தலையீடு, மறுபிறவி, பேய்கள் போன்ற விஷயங்களை உள்ளடக்கியிருக்கும். இவர் கதைகள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளன.