அத்தாரோ மலையின் அடியாழத்தில் உறைந்து துளிர்விடுகிற, அறிந்தேயிராத கிழங்கொன்றின் கண்களை நோக்கி முண்டித் துளைத்துப் போகிற விலங்கொன்றின் கதை. அறியாதவைகள் குறித்த பிரமைகளோடு நுழையும் ஒருவன் தன்னை வனமகனாய் உணரும் கணத்தில் என்னவாக மாறுகிறான்? இந்த ஒட்டுமொத்தத்தின் மேல் நின்று ஓயாத கேள்விகளை எழுப்புகிறது அத்தாரோ நாவல். ஒட்டுமொத்தமும் மிதக்கிற பந்தில், பரவியிருக்கிற அதனதன் எல்லைகளை மறுவிசாரணை செய்து, பிரபஞ்ச ரகசியமொன்றைக் கண்டறிய முயல்கிறார் சரவணன் சந்திரன்.