Jump to ratings and reviews
Rate this book

கோள் வேந்தன் மயன் [Koal Vendhan Mayan]

Rate this book
குமரிக்கண்டத்தில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, நிலமனை, வானசாத்திரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாமுனி மயன் யாளிகளைக் கொண்டு பாதுகாத்து வந்த பெருவள நாட்டை ஆண்ட மன்னர் திருவிற் பாண்டியன் தலைநகர் கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச்சங்கப் பெருவிழா நடத்திய நிகழ்வில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார். அப்பொழுது, இதனை சீர்குலைக்க எண்ணி வந்த பெரும் எதிர்ப்பை, பேராபத்தை அவர்கள் சமாளித்தார்களா? அல்லது வீழ்ந்தார்களா?

504 pages, Paperback

Published January 7, 2022

11 people want to read

About the author

Samura - சமுர

6 books91 followers
SAMURA, an avid follower of Dr.APJ Abdul Kalaam, has released his first book SILICONPURAM, an anthology of short stories in 2016.

He released SEMMAARI novel which is based on Aadu Puli aattam (Lambs and Tiger Game) in Fictional genre. It sold more than 1000 copies.

Later, he released Vaseegaranadu in Fantasy genre and Kanavu Siragugal, a motivational novel.

SAMURA hails from Chennai and was an IT Professional. He worked with Microsoft & Oracle companies before pursuing 'JEYIKKALAM' Initiative to empower students to
fulfill their dreams.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (66%)
4 stars
1 (16%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
1 (16%)
Displaying 1 - 5 of 5 reviews
122 reviews19 followers
February 10, 2022
தமிழில் ஒரு அற்புதமான நாவல். கதை அருமை. கதை பல திருப்பங்களை பெற்றுள்ளது. உங்களை கவர்ந்திழுக்க துணை அடுக்குகள் உள்ளன. வலிமையான சண்டைக் காட்சிகள் உங்களை பிரமிக்க வைக்கும். மொழிக்கான ஆசிரியரின் தாகம் அற்புதமான காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது. இது புராண பின்னணி மற்றும் பழங்கால காலத்தை சுற்றி நடக்கும் கதை.

கட்டிடக்கலை போன்ற பல கலைகள் கதையில் சுவாரஸ்யமாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை வாசிப்பை அற்புதமாக்க பல விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பல கதாபாத்திரங்கள் கதையை அனைத்து சக்தியுடனும் வலிமையுடனும் அலங்கரிக்கின்றன. போர் உத்திகள் மற்றும் வெற்றி தோல்விகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.


தமிழ் மொழியில் ஆர்வமும் அதன் அருமையும் தெரிந்தவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. அது தமிழ்த் தாய்க்கு புகழைச் சேர்க்கிறது.

மதிப்பீடு:4.5/5

Profile Image for Mohan.
14 reviews18 followers
March 3, 2022
“கோள் வேந்தன் மயன்” நாவலை இன்றுதான் படித்து முடித்தேன். பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டமான நாவல். இதை ஒரு திரைப்படமாக எடுத்தால் நிச்சயம் வெற்றிதான்.

கதைக் கரு குமரிக்கண்டத்தையும், பாண்டிய மன்னர்களையும் மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. கதையின் ஆரம்பத்திலேயே குமரிக்கண்டத்தைப் பற்றி வர்ணிக்கப்பட்டிருப்பது அழகு.

புத்தகத்தின் தலைப்பு “கோள் வேந்தன் மயன்” என்று இருந்தாலும், கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துவிடுகிறது.

மயன் மட்டுமில்லாமல் “திருவிற் பாண்டியன்”, “தமிழ்மதி”, “முடத்திருமாறன்”, மற்றும் மேருக்குடி கதாபத்திரங்கள் எல்லாவற்றையும் மிகவும் நேர்த்தியாக வடித்திருக்கிறார் சமுர.

500 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகமாக இருந்தாலும், படிக்கும்போது ஒருமுறைகூட சலிப்பாக உணரவில்லை. அவ்வளவு விறுவிறுப்பாக கதை நகர்கிறது.

தமிழ்ச்சங்கப் பெருவிழா, தொல்காப்பியர், அகத்தியர் என சுவாரசியமாக கதை செல்லும்போது, நாம் சற்றும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நம்மை ஆச்சிரியப்பட வைக்கிறது.

சமுர அவர்கள் கணிப்பொறியாளர் என்பதாலோ என்னவோ , வாசகர்களின் உணர்ச்சிகளை சரியாக கணித்து பல ஆச்சிரியப் பொறிகளில் நம்மை சிக்கவைப்பதில் வல்லுநராக இருக்கிறார்.

கட்டிடக்கலை, நிலமனை சாத்திரம், சிற்பங்கள், வானசாத்திரம் என பல ஆச்சிரியமூட்டும் விசயங்களை மிகவும் தெளிவாக புரியும்படி விளக்கியிருக்கிறார்.

தாய்மொழியாக “தமிழ்” இருந்தும், தமிழ் பேசுவதை அவமானமாக நினைப்பவர்கள் யாராவது இந்த புத்தகத்தை படித்தால் நிச்சயமாக தமிழை நேசிக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

இது புனைவுக் கதையாக இருந்தாலும், இந்நாவலை வாசிக்கும்போது நம் முன்னோர்கள் பலர் தமிழை எவ்வளவு நேசித்தனர், தமிழை காக்க எவ்வளவு அரும்பாடுபட்டனர் என்பதை உணர முடியும்.

இவரது முதல் நாவலான “செம்மாரி”யிலிருந்து “மயன்” வரை அனைத்தையும் படித்ததிலிருந்து நான் உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால் “சமுர” அவர்கள் ஒரு கற்பனைப் பறவை. ஒவ்வொரு நாவலிலும் இந்தப் பறவை தன் சிறகுகளை விரித்து உயரத்தை நோக்கி பறந்த வண்ணம் இருந்தது.

“மயன்” நாவலில் இந்தப் பறவை விண்வெளியை அடைந்துள்ளது. அடுத்து வரும் நாவல்களில் விண்வெளியையும் தாண்டி இந்தக் கற்பனைப் பறவையின் எழுத்து பல கோள்களை ஆட்சி செய்யட்டும்.

சமுர அவர்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
Profile Image for Prabhu R..
Author 3 books34 followers
April 23, 2022
தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் சேர்ந்து இழைக்கப்பட்ட ஒரு கற்பனை புதினம். கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது, தொல்காப்பியம், தொல்காப்பியர், யாளி போன்ற ஸ்வாரஸ்ய கதாபாத்திரங்கள் கொண்ட அருமையான படைப்பு. முடிவுரையில் தமிழுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை பற்றிய குறிப்பு அருமை. கதையும் நல்ல விறுவிறுப்புடன் நகர்கிறது.
Profile Image for Tamil Isai (தமிழிசை).
34 reviews4 followers
April 15, 2022
அருமையான புத்தகம். சமுரவிற்கு எனது வாழ்த்துக்கள். கற்பனை கதைக்களமாக இருந்தாலும் தமிழையும் சாஸ்திரங்களையும் அழகாக புனைந்துள்ளார்.
Profile Image for Saravanan.
356 reviews20 followers
May 18, 2023
முதல் அத்தியாயமே இராமன் இலங்கை போர் (அப்பவே இலங்கை தீவு இருந்ததா?) என்ற கட்டுக் கதையில் வரும் மாளிகைகளை கட்டிய மயன், அவர் அடக்கும் கஜயாளி (அந்த காலத்திலேயே சமஸ்கிருத 'ஜ'?) , அரக்கர்கள் போல் என்ற உவமை (ஆரியர்கள் நம்மைத்தானே அரக்கர்கள் என்றார்கள்?) என்று ஏமாற்றம் அளித்தது. நாகங்களை நாக மாணிக்கத்திற்காக வேட்டையாடியவர்கள் ஓலைச் சுவடிகளை வைத்திருந்தார்கள் என்பதால் நாகவாசிகள் ஓலைச் சுவடிகளை, அதை வைத்திருப்பவர்களை தேடித் தேடி அழித்தார்களாம். வேட்டையாடியவர்களுக்கு இரு கண்கள், இரு கைகள் இருந்தது என்று பார்ப்பவர்களை எல்லாம் அழிக்காதது ஆச்சரியமே! அந்த குமரி கண்டம் காலத்தில் நீர் நாகங்கள் இல்லை போல.

தமிழுக்காக குமரி கண்டத்தையும், அதில் வாழ்ந்த எல்லா உயிரினங்களையும் மயன், அகத்தியர் சேர்ந்து அழித்தார்கள் என்பது தமிழுக்கு பெருமையல்ல, இழுக்கு. செம்மாரி நன்றாக இருந்ததே என்று இந்த e-novel யை வாங்கியதற்கு வருத்தப்பட போகிறேன் என்று நினைத்தேன். நினைத்தது நடந்தது.
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.