Jump to ratings and reviews
Rate this book

நூலக மனிதர்கள்

Rate this book
நூலகத்திற்கும் எனக்குமான உறவு மிக நீண்டது. பள்ளிவயதில் நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். எனது கிராம நூலகம் துவங்கி உலகின் மிகப்பெரிய நூலகங்கள் வரை நூற்றுக்கணக்கான நூலகங்களுக்குச் சென்றிருக்கிறேன். நான் கண்ட நூலக மனிதர்கள். சிறந்த நூலகங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. நூலகங்கள் குறித்தும் நூலகத்தில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றிய நினைவுக்குறிப்புகளும் கொண்ட புத்தகம். - எஸ்.ரா

208 pages, Paperback

Published December 1, 2021

6 people are currently reading
94 people want to read

About the author

S. Ramakrishnan

163 books664 followers
S. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)

is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.

Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.

His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
43 (70%)
4 stars
15 (24%)
3 stars
3 (4%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 14 of 14 reviews
Profile Image for Praveen (பிரவீண்) KR.
228 reviews33 followers
August 19, 2024
Check out the detailed review @ https://kalaikoodam.blogspot.com/2024...

எஸ்.ரா-வின் கட்டுரை தொகுப்புகளுக்கென்று ஒரு தனி அழகு உண்டு. நேர்த்தியான சிந்திக்க வைக்கும் எழுத்து நடை. இதில் வரும் சில தொகுப்புகள் என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. படிப்பின், வாசிப்பின் முக்கியத்தை உணர்த்தும் கட்டுரைகள் அவை. சில கட்டுரைகளினூடே அவர் சில கருத்துக்கள் மற்றும் திட்டங்களை கூறியுள்ளார். அது அமல்படுத்தினால் நன்றாக தான் இருக்கும். சற்று பொறாமையாக தான் இருந்தது எஸ்.ரா-வின் அனுபவங்களை வாசிக்கையில். எத்தனை பயணங்கள் அதில் தான் எத்தனை நூலக அனுபவங்கள்.

என்றுமே எஸ்.ரா-வின் புதினங்களை விடவும் அவரின் கட்டுரை தொகுப்புகளை நேசிக்கும் எனக்கு இது ஒரு சிறந்த வாசிப்பாக அமைந்தது. நூல்கள் மற்றும் நூலகங்களை நேசிக்கும் அனைவரால் வாசிக்க படவேண்டிய புத்தகம்.
Profile Image for Dhulkarnain.
80 reviews2 followers
February 13, 2025
எஸ்.ராமகிருஷ்ணன் அவரது நாவல்களை விட அனுபவக் கட்டுரைத் தொகுப்புகள் மிக ஈர்ப்புடையதாக இருக்கும். இந்தப் புத்தகமும் அந்த வகையில் சேர்ந்ததுதான். பல விஷயங்கள் மிக உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்டிருந்தது. நூலகத் தொடர்பு அடியோடு விடுபட்டிருந்த நிலையில் மீண்டும் நூலகத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆவலாய் தூண்டிவிட்டது இந்தப் புத்தகம்.
Profile Image for Sruthi.
24 reviews
May 31, 2024
✨ நூலக மனிதர்கள் – எஸ். ராமகிருஷ்ணன் ✨

📚 இந்த வருடம் நான் வாசித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் எனக்கு வாசிப்பில் மன நிறைவு தந்த ஒரு புத்தகம்.

📚 நூலகங்கள் மற்றும் அங்கு வரும் மனிதர்கள் பற்றிய 32 கட்டுரைகள் கொண்ட ஒரு நல்ல புத்தகம்.

📚 நூலகம் எப்படி பலரின் வாழ்க்கையில் ஒரு பெரும் பங்காற்றுகிறது, எப்படி சாதாரண மனிதர்களுள் நூலகம் பற்றிய புரிதல் இருக்கிறது என்றெல்லாம் அழகாக ஐயா இந்த புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

📚 நூலகங்களுக்கு வரும் விசித்திரமான மனிதர்களும் அவர்களுக்குப் புத்தகங்களின் மீதான விசித்திரமான அணுகுமுறைகளும் வாசிக்கும்போது சுவாரசியமாக இருந்தது.

📚 நூலகம் பற்றிய புத்தகத்தில் நூலகர்கள் இடம்பெறாமலா! இதில் வரும் சிவானந்தம் என்னும் நூலகரின் கனிவான குணம் என் மனதை நெகிழவைத்தது. அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.

📚 ராமகிருஷ்ணன் ஐயா அவரின் நூலக அனுபவங்களை வைத்து நிறைய புதிய திட்டங்களை ஆங்காங்கே சொல்லியிருக்கிறார். அது எல்லாம் அரசாங்கம் மேற்கொண்டால் அது ஒரு நல்ல வாசிப்பு சமூகம் உருவாக உறுதுணையாக இருக்கும்.

📚 இதில் வரும் நிறைய மனிதர்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, வேலை இடைவேளையில் புத்தகம் வாசிக்கும் சிறுவனை அடித்து கொண்டுபோகும் மாமா, தவறாமல் நூலகம் வரும் தந்தை மகன், படிப்பறிவு இல்லாத நிலையிலும் வாசிப்போர் பேசுவதைக் கேட்க நூலகம் வரும் மெக்கானிக், லா.ச.ரா.வின் ரசிகை, புத்தகத்தின் வாயிலாக அக ஒளியை காண உதவும் கண் பார்வையற்றவரின் நண்பன், என இவ்வாறாக நிறைய விந்தை மனிதர்கள்.

📚 தன் சிறு வயது முதல் நூலகம் செல்ல வாய்ப்பு கிட்டிய ராமகிருஷ்ணன் ஐயாவை பார்க்கும்போது பொறாமையாக உள்ளது. எனது நீண்ட நாள் கனவான நூலக மனிதி ஆகும் ஆசை இந்த நூல் வாசித்த பின்பு மேலும் அதிகமாகி விட்டது. புத்தகங்கள் மீது ஆழ்ந்த காதல் உள்ள எல்லா வாசகர்களும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
2 reviews1 follower
January 6, 2022
நூலகம் பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றியது. நூலகங்களின் மூலம் பலர் அரசாங்க அதிகாரிகளாகவும், நாட்டின் மிகப்பெரிய தலைவர்களாகவும் உருவாகியுள்ளனர். அந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தன் வாழ்க்கையில் போன நூலகத்தைப் பற்றியும் சந்தித்த நூலக மனிதர்கள் குறித்த நினைவுகளும் மிக எளிமையான எழுத்துக்களில் இக்கட்டுரையின் மூலம் பதிவு செய்துள்ளார்.
Profile Image for Jo.
26 reviews3 followers
January 21, 2025
புனைவிற்குள் சந்திக்கிற மனிதர்களை விடவும் நிஜத்தில் சந்திக்கிற மனிதர்கள் இன்னும் சுவாரசியமனவர்கள் போல என எண்ண வைக்கும் அளவிற்கு நூலகம் எனும் சிறு பிரபஞ்சத்திற்குள் புழங்குகிற வித்தியாசமான மனிதர்களின் கதைகளை தனக்கேயுரிய கவித்துவ நடையில் கட்டுரைகளாக்கி இருக்கிறார் எஸ்.ரா

நூல்களின் மீதும் வாசிப்பின் மீதும் தீராக்காதல் கொண்ட இம்மனிதர்களின் கதைகளை புத்தகங்களின் கதைகளோடு கோர்த்த்தெடுத்து படைக்கிற கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சுவாரசியமானவை.

வாசிப்பை எஸ்.ரா பொதுவாகவே ஓவர் ரொமாண்டிசைஸ் செய்வதாக, வாசிப்பை முன்வைத்து அவர் எழுதுபவற்றை வாசிக்கும்போதெல்லாம் நமக்குத் தோன்றலாம். ஆனால் வாசிப்பின் மீதான பித்தேறிய ஒருவராய் நாமும் இருக்கையில்தான் அவ்வெழுத்து நம்மையும் குழந்தைகளுக்கே உரிய வியப்பின் எல்லைக்கு இழுத்துச் சென்று கரங்கள் பற்றி ஆனந்தமாய் தட்டாமாலை சுற்றுவதை அனுபவிக்க முடியும்.

பேரானந்தத்தில் திளைக்கவைத்த ஒரு விளையாட்டை விளையாடி முடித்த திருப்தியைத் தருவதாக இருக்கிறது இத்தொகுப்பின் வாசிப்பனுபவனம். முதன்முறை வாசிப்பிற்குள் நுழைகிற எவருக்கும் வாசிப்பின் காந்தவிசையை இன்னும் வலுவாக்கவும், வாசிப்பின் மீதான காதல் இன்னும் ஆழப்படவும் இத்தொகுப்பை வாசிக்குமாறு பரிந்துரைக்கலாம். ❤️
Profile Image for Sriram Mangaleswaran.
175 reviews3 followers
February 3, 2022
This is such a fantastic book, which gives a ride of the library experience of the author. This gives a lot of our own library memories too. This is such a sweet book and a mus read for all bookworms.
Profile Image for Preethi Sri.
19 reviews
March 19, 2025
இது நூலகம் பற்றிய புத்தகமல்ல; நூலகங்களைத் தன் வாழ்வின் முக்கியமான பகுதியாகக் கொண்டிருக்கும் மனிதர்களின் தனித்துவமான கதைகளின் கட்டுரைத் தொகுப்பு. அனைத்து கதைகளும் அருமையாக இருந்தன.

நினைவில் உறைந்த சில மனிதர்கள்:
• ஒரு மனிதர் தன் படித்த புத்தகங்களை திருப்பிக் கொடுக்கும்போது, அதற்குள் ஒரு ரூபாய் நோட்டை வைத்து கொடுப்பார்.
• இன்னொருவர் சாப்பாட்டுப் பிரியர்; நளன் சமையல் குறித்த புத்தகத்தைத் தேடிக்கொண்டிருப்பார்.
• இன்னொருவர் ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கி முடிக்காமல் திருப்பிக் கொடுத்துவிடுவார்; பல ஆண்டுகளாக அவர் மீண்டும் அந்தப் புத்தகத்தைத் தேடி அலைவார்.
• மேலும், ஒரு தனிப்பட்ட மனிதர், ஒரு கதையின் முடிவு பிடிக்கவில்லை என்றால், அந்தப் புத��தகத்தின் கடைசி பக்கத்தைக் கிழித்து விடுவார்.

“நூலக மனிதர்கள்” ஒரு அழகான புத்தகமாக அமைந்துள்ளது; மனிதர்களின் வாழ்க்கையில் நூலகம் மற்றும் புத்தகங்களின் முக்கியத்துவத்தை மிக நெகிழ்வான முறையில் விளக்குகிறது.
Profile Image for Vashti .
26 reviews1 follower
March 17, 2025
One of the best books I've read...
1 review
February 2, 2025
ஆசிரியர், தான் இதுவரை நூலகத்தில் சந்தித்த மனிதர்களையும், அங்கு நிகழ்ந்த அற்புத நிகழ்வுகளையும் படம்பிடித்துக் காட்டுவதாக அமைகிறது இந்நூல்.
புத்தகத்தின் தலைப்பில் கவரப்பட்டு வாங்கிய எஸ். ரா -வின் மற்றுமொரு புத்தகம்.
புத்தகம் நிறைய ஒளிந்திருக்கிறார்கள் வியப்பூட்டும் நூலக மனிதர்கள்.
📕 தான் படித்த முடித்த புத்தகத்தை, வாசிக்கும் அடுத்த வாசகருக்கு, புத்தகத்தின் உள்ளே ஒரு ரூபாய் தாளை வைத்து, பரிசளித்து செல்கிறார் மஞ்சள்ப் பைக்காரர்.
📕திருவிழாவிற்குச் செல்வதுபோல் குடும்பமாக நூலகம் வந்து, தங்களின் விருப்பப்படி புத்தகம் எடுத்துச் சென்று, வார விடுமுறையை கொண்டாடுகிறது ஒரு அதிசயக் குடும்பம்.
📕சமையல் குறிப்புப் புத்தகங்களை மட்டும் எடுத்துச் செல்வதோடு, பீமனின் சமையல் இரகசியம் குறித்த புத்தகங்களைக் குறி வைத்து தேடுகிறார் ஒரு கான்ஸ்டபிள்.
📕 தான், என்றோ பாதியில் முடித்த புத்தகம் ஒன்றின் கதைக்களத்தை மட்டும் நினைவில் கொண்டு, சக-வாசிப்பாளரிடம் அது குறித்து விசாரித்து தேடுதல் வேட்கையில், சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக உலாவுகிறார் ஒரு வாசகர்.
📕 தேசம் இழந்து, உரிமை இழந்து, உடைமை அனைத்தும் இழந்து அகதிகளாக வந்திருந்த போதும், வாசிப்பின் மீதும், புத்தகத்தின் மீதும் கொண்ட ஈடுபாட்டால், நூலகத்தில் சிறுசிறு உதவிகள் செய்து, புத்தகங்களுக்கும் தனக்குமான உறவை புதுப்பிக்கின்றனர் ஈழத்துச் சொந்தங்கள்.
📕 படிப்பறிவு இல்லாத போதும், நூலகம் வந்து, படித்தவர்கள் மத்தியில் நின்று செவிக்குணவு அளிக்கிறார் ஒரு மெக்கானிக்.
இப்படியாக இந்தப் பட்டியல் நீள்கிறது. விந்தையூட்டும் புத்தகங்களால் மட்டுமல்ல, பல வியப்பூட்டும் மனிதர்களாலும் நிரம்பி வழிகிறது நூலகங்கள். இப்புத்தகமெங்கும் உலா வருகின்றனர் அந்த அதிசய மனிதர்கள்.
இப்புத்தகத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் நானுமோர் அங்கமாகிப் போனேன்.. வாய்ப்பளித்ததுஆசிரியரின் சொல்லாடலும், கதையாடலும்.
நன்றி!
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Rajesh Arumugam.
144 reviews3 followers
January 10, 2022
புத்தகம் வாங்கி படிப்பதாக இருந்தாலும் நூலகத்திற்கு அவசியம் சென்று படிக்க வேண்டும், நூலகத்திற்கு குழந்தைகளை குடும்பத்தை வாராவாரம் கூட்டிச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் அழகிய ஆழமான கட்டுரைகளை கொண்ட நூல். மேலும், பணம் படைத்தவர்கள் வாசிப்பின் மீதும் நூலகத்தின் மீதும் ஆர்வம் இல்லாமல் இருப்பதும். வறுமையில் இருப்பவர்கள் நூலகத்தை நாடுவதும் முரண். அதுமட்டும் இன்றி நூல்களின் மீது தீரா காதல் கொண்ட மனிதர்களைப் பற்றியும் நூலகத்தை ஒரு பண்பாட்டு வெளியாக காட்டும் முக்கியமான கட்டுரைகள்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Kamali Joe.
20 reviews
December 18, 2025
எஸ். ரா-வின் நூலக மனிதர்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று சிறு வயது முதல் நூலகம் செல்லும் அனுபவமும் பழக்கமும் உள்ள என்னை போன்றவர்களுக்கு இந்த புத்தகம் நல்ல அறிமுகமாக இருக்கும்.
மிக அற்புதமான மனிதர்கள் எத்தனை விதமான கதைகள் வாழ்க்கைகள் ஏராளமான அனுபவங்கள் ஒரு சேர வாசிக்க முடியும். அனைவரும் படிக்க வேண்டிய ஒரு சிறந்த கட்டுரை தொகுப்பு
Profile Image for Balaji Asokan.
34 reviews4 followers
January 22, 2024
எஸ்.ரா வின் கட்டுரைகளை படிப்பது சுவையானது. வித்தியாசமான மனிதர்களை பற்றி படிப்பது சுவாரசியமானது. நூலகத்தில் தான் சந்தித்த மனிதர்களை பற்றி எஸ்.ரா எழுதியதை பற்றி படித்தது அலாதியான அனுபவம். நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
Profile Image for Happyme.
18 reviews1 follower
January 9, 2025
நூலக மனிதர்கள் உண்மையிலே ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவம். வாசிப்பு ஒருவரை எப்படி இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்று வியப்பளிக்கிறது. அருமையான புத்தகம் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. சோர்வுக்கு நல்ல புத்துணர்ச்சி தரும் வகையில் உள்ளது நூலக மனிதர்கள்.
Displaying 1 - 14 of 14 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.