இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று. எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இந்நாள் வரை தமிழில் எழுதப்பட்டதில்லை. இதுவே முதன்முறை . அந்த வகையில் இதைத் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்பேன். இந்த நாவலை எழுதுவதற்காக மூன்று ஆண்டுகள் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு, ரஷ்ய வரலாறு, டால்ஸ்டாயின் டயரிக்குறிப்புகள். சோபியாவின் டயரிக்குறிப்புகள். டால்ஸ்டாய் குடும்பத்தினரின் நினைவலைகள், டால்ஸ்டாய் பற்றி எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், அவரது சமகால எழுத்தாளரின் படைப்புகள். பண்ணை அடிமைகள் பற்றிய அறிக்கைகள். எனத்தேடித்தேடி படித்தேன்.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
டால்ஸ்டாய் எனும் பெருங்கலைஞனின் வாழ்வில் ஒரு பகுதியைச் சிறப்பான புனைவாக்கியிருக்கிறார் எஸ்.ரா. ரஷ்ய நிலத்தின் கதையை நேரடியாக தமிழில் எழுத முயற்சி செய்ததற்காகவே அவரை நாம் பாராட்டலாம்.
நான் டால்ஸ்டாயின் எந்த ஒரு படைப்பையும் இதுவரை வாசித்ததில்லை. என்னைப் போன்ற ஒரு வாசகனுக்கு டால்ஸ்டாயின் ஆளுமையை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்த நாவல். ஒரு கட்டுரையின் வழியோ, அல்லது உரைகள் மூலமாகவோ ஒரு படைப்பாளி நமக்கு அறிமுகமாவதற்கும், இப்படி ஒரு நாவலின் வழியே அவரது ஆளுமையை நாம் கண்டடைவதற்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது.
இந்த நாவலில், டால்ஸ்டாயின் மனதில் வெளிப்படுத்த முடியாத அன்பே துயரமாக நிரம்பி இருக்கிறது. டால்ஸ்டாய், தனது படைப்புகளின் வழியே மனித வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்கிக் கொள்ளவே முயன்றார் என்கிறார்கள். உண்மையில் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடம் அன்பு செலுத்துவதன் மூலம் தான் இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் எனத் தோன்றுகிறது.
இன்றைய காலகட்டத்தில் தமிழில் எஸ்.ரா ஒரு generic எழுத்தாளராக இருந்தாலும் கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஆளுமை . டால்ஸ்டாய் பற்றிய இந்த கதை ஆரம்பிக்கும் போதே இப்படி பயணித்து இப்படி தான் முடியப்போகிறது என்கிற நம்முடைய அவதானிப்பிலிருந்து பாதை மாறாமல் எழுதப்பட்டிருக்கும் நாவல் இது . நம் கணிப்பு மாறாமல் கதை பயணித்தாலும் படிப்பவர்களுக்கு ஒரு இடத்தில கூட சலிப்பு தட்டாதவாறு கதையோட்டம் அமைந்திருக்கிறது . கையில் எடுக்கும் புத்தகத்தை முழுமூச்சில் வாசகர்களை படிக்கவைக்கும் வசியம் அறிந்த எழுத்தாளர்களில் தனக்கு என்றுமே ஒரு இடம் இருக்கிறது என்று மீண்டும் எஸ்.ரா நிரூபித்திருக்கிறார் . டால்ஸ்டாய் பற்றிய இந்த படைப்பு தேவையா என்றால் தேவையில்ல (அவரது வாழக்கை பற்றியோ அல்லது அவரது படைப்பை பற்றியோ பெரிய விவாதங்களோ விரிவான விளக்கங்களோ , வரலாற்று சம்பவங்களோ இதில் இல்லை . புனைவில் இவற்றை எல்லாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் பேராசை என்றே சொல்ல வேண்டும் ) , ஆனால் உலகம் போற்றும் டால்ஸ்டாய்க்கு சம்பர்ப்பணமாக தமிழ் மொழியில் ஒரு நாவல் அதுவும் புனைவு வடிவில் இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலாக இந்த நாவல் இருக்கிறது . நல்ல புனைவு நூல் படிக்க வேண்டும் , நேரம் போக வேண்டும் என்று நினைப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது .
மிக மேலோட்டமாக எழுதப்பட்ட நாவல். கதாபாத்திரங்களிடத்தில் ஆழ்ந்த மனவெளிப்பாடோ, தீவிர விவாதங்களோ எங்கும் வெளிப்படவில்லை. டால்ஸ்டாய்க்கு அக்ஸினியா என்ற பெண்ணோடு திருமணத்திறக்கு முன்பே உறவிருந்தது. அதனால் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் டால்ஸ்டாய் பண்ணையிலேயே வளர்ந்தான் என்பதை வைத்துக்கொண்டு ஜவ்வாய் 250 பக்கத்துக்கு நாவல் என்ற பெயரில் எஸ்ரா இழுத்திருக்கிறார்.