“இந்த உலகின் எல்லா முட்டாள்தனமான அறிவுக்கும் நீங்கள் பரிச்சயப்பட்ட பிறகுதான், மீண்டும் நீங்கள் மறுபக்கத்தின் விளையாட்டுக்கு வந்து மீண்டும் ஒரு குழந்தையாக ஆக முடியும்” என்று அகம்வியந்து, குழந்தைகளை ஞானத்தின் பிறப்பிடமாக கருதுகிற நித்ய சைதன்ய யதி நம் அனைவருக்காகவும் எழுதிய நூல் இது. நம்முடைய வாழ்வுக்குள் ஒளிந்திருக்கும் சின்னச் சின்ன ஞானங்களை இப்புத்தகம் நமக்கு ஒளியிட்டுக் காட்டுகிறது. இதில் சொல்லப்பட்டிருப்பது எதையும் குழந்தைகள் செய்யவில்லை என்றாலும், அவர்களுக்காக அப்பாவும் அம்மாவும் ஆசிரியரும் செய்துகொடுக்க வேண்டும் என்பதே யதியின் ஒற்றைப் பரிந்துரை.
Nitya Chaitanya Yati (2 November 1924 – 14 May 1999) was an Indian philosopher, psychologist, author and poet, best known for his commentaries on Advaita Vedanta as well as his literary criticisms. He was a disciple of Nataraja Guru, the successor to Narayana Guru. Yati published over 140 books in English and Malayalam including a commentary on Darsana Mala of Narayana Guru, titled, Psychology of Darsana Mala. Kerala Sahitya Akademi honoured him with their annual award for literary criticism in 1977.
குழந்தைகளோடு பேசும்போதும் சரி குழந்தைகளைப் பற்றிப் பேசும்போதும் சரி என் நினைவில் எப்போதும் தெறிக்கும் கவிதைகள் இரண்டு. “புத்தநிலை கூடுதல் தூரம் திரும்பிச் செல்லுங்கள் பக்கத்தில்தான் குழந்தை நிலை” கவிஞர் யாழிசை மணிவண்ணனின் கவிதை. அடுத்தது கவிஞர் யூமா வாசுகியின் ஒரு முயல் கவிதை..யாழிசை கவிதை கை நீட்டிக் காண்பிக்கும் தத்துவ உலகத்தை நம்மைக் கழுத்தில் ஏற்றி காண்பித்துக் கொண்டாடுபவர்கள் யூமாவின் அந்த முயலும் சிறுமி புவனாவும். கடவுளின் ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க விரும்புகிறவர்களெல்லாம் குழந்தைகளைப் போல ஆக வேண்டும் எனும் யேசு கிறிஸ்துவின் உபதேசத்தை, உச்சமானதொரு உண்மையாகவே நம்பிக்கொண்டிருப்பதாகச் சொல்லும் நித்ய சைதன்ய யதி அவர்களின் கட்டுரைத் தொகுப்பு “சின்னச் சின்ன ஞானங்கள்”. மலையாளத்திலிருந்து இந்தத் தொகுப்பைத் தமிழுக்கு மொழிப்பெயர்த்திருப்பவர் கவிஞர் யூமா வாசுகி எனும்போதே இந்நூலின் தேவையை உணரலாம். பதினேழு கட்டுரைகளாகக் குழந்தைகளை மையப்படுத்தித் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் பெரியவர்களுக்காக எழுதப்பட்டவையே. சுயமுன்னேற்ற நூல்களைப் போல அனுபவங்களையும் தரவுகளையும் நிறைத்து வந்திருக்கின்றன. யூமாவின் அக்கறை நூலில் தனித்தே தெரிகிறது. குழந்தைகளை நேசிப்பவர்கள், கையாள்பவர்கள் அதே பொறுமையோடு படிக்க வேண்டிய நூல்.
குழந்தைகளும் முக்கியமாக பெற்றோர்களும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். ஒரு தேர்ந்த ஆசானிடம் இருந்து மிக முக்கியமான நற்சொற்கள் தெளிவுடனும் ஆழத்துடனும் எளிமையுடனும்.