Jump to ratings and reviews
Rate this book

தமிழுக்கு நிறம் உண்டு

Rate this book
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்

160 pages, Paperback

First published July 1, 1997

1 person is currently reading
8 people want to read

About the author

Vairamuthu

55 books673 followers
Vairamuthu was born to Ramaswamythevar and Angammal of Mettur in a middle-class family. When he was four, the village gave way to Vaigai Dam and the family moved to Vadugapatti village, a farming community in Theni near Periyakulam.

The ambience of the village is said to have inspired him to write poems. According to him, Tamil and Rationalist movements of the sixties stimulated his poetic zeal. The speeches of Periyar & Anna, the writings of Karunanidhi and the works of eminent poets like Bharathi, Bharathidasan and Kannadasan and the life in the countryside shaped the young poet's thinking. At the age of fourteen, he was inspired by Thiruvalluvar's Thirukkural to write a Venba compilation of poetry, strictly adhering to the Yappu grammar rules of Tamil poetry.

He joined Pachaiyappa's college in Chennai where he was acclaimed as the best speaker and poet. While in his second year of B. A. and barely nineteen years of age, Vairamuthu published his maiden anthology Vaigarai Megangal. It was prescribed for study in Women's Christian College. Thus, he achieved the distinction of a student poet whose work was taken into the curriculum while he was still a student.

His second work, Thiruththi Yezhudhiya Theerpugal, in pudhu kavidhai (free verse) form was published in 1979. He made his film debut in the succeeding year when he set lyrics for Bharathiraja's Nizhalgal.

source : http://en.wikipedia.org/wiki/Vairamuthu

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Anitha Ponraj.
280 reviews45 followers
December 1, 2022
புத்தகம் : தமிழுக்கு நிறம் உண்டு
ஆசிரியர் : வைரமுத்து
பக்கங்கள் :160
பதிப்பகம் :சூர்யா லிட்டரேச்சர் (பி) லிட்

"கவிஞர்களும் காலங்களும் மாறிமாறி வந்தாலும் தமிழ் மட்டும் தன் நிறம் மாறாதிருக்கிறது" என்று தமிழ் வாழ்ந்து, வீழ்ந்து மீண்டும் எழுந்து காலங்கள் பல கடந்து வந்த இன்று நம் கண்முன் நிலையாக நிற்கும் வரலாற்றை முகவுரையில் வாசிக்கும்போதே சிலிர்க்கிறது. இது நம் தமிழ் இது இனியும் நம்மூலமாக வாழ வேண்டும், நமக்கு பின்புக்கு பின்பும் வரப்போகும் சந்ததியினரும் அதன் அழகில் மயங்கி தீராக்காதல் கொண்டு வழிவழியாக வாழ வேண்டும் என்று மனமார்ந்த பிரார்த்தனையுடன் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன்.

வைரமுத்து அவர்களின் கவிதைக்கு பெரிதாக என்ன விமர்சனம் சொல்லிவிட முடியும்? அவர் கவிதைகள் என்ற ஒரு வார்த்தையில் அனைத்தும் அடங்கும்!!

நல்ல தமிழ், இதயம் வருடும் வார்த்தைகள்,காலம் கடந்து நிற்கும் அவர் கற்பனை, வாசித்து முடித்தபின் எப்படியேனும் அழகு தமிழில் எழுதி விட முடிகிறது.

சினிமாவில் கேட்ட சில பாடல்களின் முழு வடிவம் இத்தொகுப்பில் பல காண முடிகிறது. அவ்வப்போது கண்முன் நிகழ்ந்த நிகழ்வுகளை உணர்வுகளை மையாக்கி வார்த்தை கொண்டு கவிதை தீட்டி இருக்கிறார் கவிஞர்.

அவர் ஊரைப் பிரிந்து சென்று சென்னைக்கு குடிபெயர்ந்த காலக்கட்டத்தில் வெளிவந்த புத்தகம் போல் அதன் தாக்கம் அதிகமாக கவிதைகளில் காணப்படுகிறது.

அதே இயற்கை, அதே சமூகக்கோபங்கள், அதே காதல்,அதே காமம், அதே பிரிவு, அதே ஏக்கம். ஆனாலும் அவையில்லாமல் கவிதைகள் இல்லை. மனிதர்களும் இல்லை. தமிழும் இல்லை.
Profile Image for Siva Prasath T R.
79 reviews4 followers
January 3, 2022
தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்பது நாம் யாவும் அறிந்ததே. தமிழுக்கு நிறமுண்டோ?? தமிழுக்கு நிறம் உண்டு என்றே பறைசாற்றியுள்ளார் தனது கவிதைகளின் நடைவழியே கவிப்பேரரசர்..

இந்நூலின் முகவுரையே எண்ணற்ற புதையல்களால் நம்மை திக்குமுக்காட வைக்கிறது.

நம் வாழ்வில் அன்றாடம் நடப்பது என்ன என்பதை நன்றாக கவனித்து, அறிந்து தெரிந்துக் தொண்டு, கவித்துவம் எளிமையான நடை, பாமரனும் புரிந்துகொள்ளும், அதே வேளையில் தமிழின் இனிமை சொட்டும் புலமையுடன் படைத்துள்ளார் வைரமுத்து அவர்கள்.

எந்தமாதிரியான தருணங்களில் கவிதையைப் படைத்தேன் என சிறு குறிப்பாக, சில கவிதைகள் தொடக்கத்தில் அளித்துள்ளமை மிகச் சிறப்பு. இதுபோன்ற குறிப்புகள், நாமும் இதுபோன்ற கவிதைகளை எழுத இயலும் என்ற உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.

என்னே ஒரு கற்பனைத் திறன்!! கவிதை வேறு எங்கும் இல்லை, நம்மைச் சுற்றியே பொதிந்துக் கிடக்கின்றது. அதை நாம் தான் பொறுக்கி எடுத்து செதுக்கி சேமிக்க வேண்டும் போல..

"
இயற்கையை மெருகேற்றி கவிதையாய் இயற்றக் கண்டநாம்
காதல் நனிசொட்ட கடைந்தெடுத்த அமிழ்தினை உண்ட நாம்..

ஓர் உதிரப்போகும் இலையைக் கூடக் கவிதையாய் வடிக்க இயலுமோ ??

ஓர் உரையாடலுக்குக்கூட உளிகொண்டு கவித்துவத்தை அளிக்க இயலுமோ ??

அவலங்களைக் கண்டு அஞ்சாமல், அழாமல் அமுது தமிழில் கவிதையாய்க் கோர்த்து அளிக்க இயலுமோ ??

வலிகளை, வடுகளை வைரமாக்கி புலமைபெற்று வெற்றி வாகைச்சூட இயலுமோ ??

கண்ணீரைக் காட்சியாக்கி கவிதைகளால் கற்றவர்களைக் கவர இயலுமோ?

இயலுமோ என்ற கேள்வியே வேண்டாம். இயலும்! அழகு தமிழால் தன்னிகரற்ற கவிதைகளைப் படைக்க முடியும்! அதற்கு
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே சாட்சி.. "

அவர் கவிதைகளை வாசித்தால் நாமும் கவிதை எழுத இயலுமோ??

இந்நூலிலிருந்து கவிதைவரிகள் சில..

'கணவனுக்கு மனைவி செவ்வாயிலிருந்து செலவுக்கனுப்புவாள்'

'எனக்குப் பிடித்தது பிடிக்கும் என்ற
இதயங்க ளெல்லாம் எனக்குப் பிடிக்கும்'

'எத்தி ஒதைச்சாலே
இத்துவிடும் சுவருக்கு
கடப்பாரை எதுக்கையா கவர்மெண்டு ஆளுகளே '
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.