"எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள் உசாவுகிறர்கள். இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் இயல்புகள் குறித்தும் எழுத்தாளனாக வாழ்வதைப்பற்றியும் குழப்பம் கொண்டிருக்கிறார்கள். எழுத்து ஓர் இலட்சியவாதம், எந்த இலட்சியவாதமும் அதற்குரிய ஐயங்களும் தயக்கங்களும் கொண்டது.
எனக்கு அவ்வண்ணம் எழுதப்பட்ட கடிதங்களுக்கு நான் அளித்த பதில்கள், அவற்றினூடாக நிகழ்ந்த விவாதங்களின் தொகுதியே இக்கட்டுரைகள். இவற்றில் எழுத்திலும் வாசிப்பிலும் நுழைபவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பேசப்பட்டுள்ளன."
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
எழுத்து மற்றும் வாசிப்பு சார்ந்த என் தேடலும், தாகமும் நீண்டவை. கடந்த ஒரு வருடமாகவே வாசிப்பதையும், எழுதுவதையும் குறைத்துவிட்டு - நிகராக நிறுத்துவிட்டு முறையாக வாசிப்பது எப்படி, முறையாக எழுதுவது எப்படி என்பதையே தேடி திருந்து கொண்டிருக்கிறேன். அத்தேடலின் ஒரு பகுதியகாவே எழுதுக வாங்கினேன்.
எழுத்தாளர் ஜெயமோகன், அவரது இணையப் பக்கத்திற்கு அவரது வாசகர்களிடமிருந்து வந்த எழுத்து மற்றும் வாசிப்பு சார்ந்த கேள்விகளுக்கு அளித்த கட்டுரை பதில்களின் தொகுப்பு தான் இப்புத்தகம்.
இப்புத்தகம் எனது முந்தைய தேடல்களைப் போலவே முடிவொன்றைக் கொடுத்து, தேடல் ஒன்றையும் தந்திருக்கிறது. என் தேடல்கள் நீண்டது என்பதைக் காட்டிலும் எல்லையற்றது என்பதே சரியாகும் போல.
பாலைவனத்தில் நீர் தேடி அலைவதாகவே என் தேடல் கொண்டு திரிந்து கொண்டிருந்தேன். இந்தப் புத்தகம், நான் அலைவது பாலைவனத்தில் அல்ல கடற்கரையில் என்பதைக் கொஞ்சம் காட்டிக் கொடுத்திருக்கிறது. நன்றி ஜெமோ!
இந்த வருடத்தின் முதல் வாசிப்பு. இளம் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுடன் ஜெமோ கடிதங்கள் மூலம் நிகழ்த்திய ஆத்மார்த்தமான உரையாடல்களின் தொகுப்பு. வாசிப்பதில் தொடங்கி வழிபாடு வரை ஒவ்வொரு பதிலிலும் அவ்வளவு தீர்க்கம் அவ்வளவு ஞானச்செருக்கு.14 கடிதங்களின் வழி தன் அக்கறையால் அக்கறையின்மையை சுண்டிக் கொண்டே வரும் ஜெமோ ஒரு கட்டுரையில் வாழைப்பழத்துக்குள்ளே பலாக்காயை சொருகுகிறார் வழக்கம் போல. எழுதுவதின் சோம்பலை உளவியல் ரீதியாக அணுகும் இடம் சோம்பலின் தண்டவாளத்தில் ரயிலாக ஓடுகிறது. பதில்களில் உள்ள ஆழ்ந்த புலமையையும் உண்மையான அக்கறையையும் கருத்தில் கொண்டு சில கேள்விகளில் உள்ள அடிமைத்தனத்தை பொறுத்துக் கொள்ளலாம். நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல் "எழுதுக".
The veteran writer distills decades of wisdom into this short book that serves as a guide for aspiring writers. The format of this book is that of a conversation between Jeyamohan and youngsters who seek his advice on how to write. Some of the striking portions are where the author ridicules unquestioned allegiance to an ideology/movement, illuminates as to how unlearning is as important as learning and clearly explains as to how writing is , first and foremost, an expression of one's own personality. As Sundara Ramasamy has written elsewhere, "Ezhudhu, adhuve adhan ragasiyam" (Can be poorly translated as "Write and you shall unlock the mysteries about it").
ஒரு மனிதன் தான் அவதானித்ததை இந்த உலகுக்கு எழுத்து மூலம் கடத்திக்கொண்டிருக்கும் பணியை செய்யும் பொழுது, இந்த எழுத்துக்களின் ஊடே உள்ள ரகசியங்களை தன்னுள் அடக்கி வைப்பதுண்டு. காரணம் நிலைகொள்ளாமை என்னும் அந்த அச்சம், எழுதுவதில் இருக்கும் அந்த வித்தையை மற்றவர்களும் அறிந்தால் மற்றவர்களும் அவர்களுக்கு ஈடாக வரும் பொருட்டு தான் இத்தனை நாள் மற்றவர்களை விட ஒரு படி மேல் என்ற அந்த மிதப்பு நிலைக்காது. ஆனால் அடுத்த தலைமுறையினர் அவர்களில் உள்ள வாசகர்களையும் எழுத்தாளர்களையும் கண்டடைவது தமிழ் இலக்கிய சூழலுக்கு இன்றியமையாதது என்ற ஒரு அறிதல் ஜெயமோகன் அவர்களை வாசகரிடம் உரையாடல் ஊடாக வாசித்தல் மற்றும் எழுதுதல் குறித்த தெளிவான தீர்க்கமான கருத்துக்களை பகிரச் செய்திருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அளித்த பதில்கள் ஒரு வாசகரையும் எழுத்தாளரையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
எனக்கு சற்றும் ஒவ்வாத கதை உலகத்தில், நான் கேட்டிராத மொழிநடையில் உள்ள செவ்வியல் இலக்கிய படைப்புகளான ஒரு புளிய மரத்தின் கதை, கொற்றவை, புயலிலே ஒரு தோணி என்ற புத்தகங்கள் பாதியிலியே கிடப்பதை நினைவு கூர்கிறேன். என்னை போன்ற வாசகர்களுக்கும் இந்த எழுதுக என்ற புத்தகத்தில் ஒரு செய்தியை கொடுத்திருக்கிறார். விடுபட்ட இந்த புத்தகங்களின் வாசிப்பை தொடரலாம் என்ற எண்ணம் மலர்கிறது.
எது இலக்கியம்?, உலகியல் வாழ்வில் காலூன்றி நிற்பதன் அவசியம், தொடர்புத்திறனின் இன்றைய போக்கு என அனைத்து பதில்களும் அசாத்தியமான முறையில் பகுப்பாய்வுத் தன்மையோடு ஆழச் சென்று உதாரணங்களோடு விளக்கியிருப்பதனால் இந்த புத்தகத்திலுள்ள உள்ளடக்கத்தின் அறிவுக்கனம் புத்தகத்தின் ஸ்தூல கனத்தை விட அதிகமாக உள்ளது. இதைச் சுமையாக இல்லாமல் மிக இலகுவாக நம்மில் செலுத்திருப்பதே இந்த படைப்பின் வெற்றி
லோகி - சில நினைவுகளும் சில மதிப்பீடுகளும் என்ற இவரின் புத்தகத்திலும் இந்த பகுப்பாய்வுத் தன்மையை நான் உணர்ந்தித்திருக்கிறேன் . உதாரணத்திற்கு மலையாள திரைக்கதைகளில் இரண்டு விதமான கதைகள் இருப்பதை நிறுவியிருப்பார் , எம் டி வாசுதேவன் நாயர் அவர்களின் கதைகளில் சிக்கல்களை தன் புத்திசாலித்தனத்தால் அவிழ்த்து மீண்டு வரும் கதாநாயகன் மற்றும் லோகி போன்ற எழுத்தாளர்களின் கதைகளில் உள்ள மீள முடியாத சிக்கல்களில் அகப்பட்டு வாழவைத் தொலைக்கும் கதாநாயகன் . இப்படி பல தருணங்களில் என்னை அசர வைத்த படைப்பு லோகி என்ற அந்த புத்தகம் . அந்த படைப்புக்கு சற்றும் குறையாத படைப்பாக இந்த எழுதுக என்னும் இந்த கடித இலக்கியத்தை பார்க்கிறேன். கடைசியில் வரும் தீவிரவாதம் பற்றியான கட்டுரை இளைஞர்களை நல்வழிப்படுத்தவதற்காகவே தன் முனைப்போடு தர்க்க அடிப்படையில் உளமாற சொல்லிருப்பது கச்சிதம்.
ஓர் இலக்கிய படைப்பில் ஒரு uncommon wisdom, அரிய மெய்மை வெளிப்பட்டாகவேண்டும் என்ற ஜெயமோகனின் கூற்றிற்கேற்ப இந்த படைப்பிலும் இதை காணமுடிகிறது.
இதில் வியப்பு என்ன என்றால் இந்த அறிய மெய்மையை சுழல்நிலையில் நிலை கொள்ளச் செய்து அந்த அரிய மெய்மையையின் தேவையை வலியுறுத்தி அதன் ஊடாக அரிய மெய்ம்மையே இன்னொரு அடுக்காக மருவுருவம் பெறச் செய்திருப்பது தான்.
இவை அனைத்தையும் எளிமையாக எல்லோரும் வாசிக்கும் வண்ணம் நிகழ்த்தி இருக்கிறார். இந்த குறைவான பக்கங்கள் கொண்ட ஒரு அறிவு களஞ்சியத்தை எல்லோரும் பருக வேண்டும். எழுதுக என்னும் நூலை ஜெயமோகன் அவர்களின் 60ஆம் அகவையை முன்னிட்டு விலையில்லா பிரசுரமாக பெற்ற 500 இளைஞர்களில் நானும் ஒருவன் என்பதனால் இதனை எனது பாக்கியமாகவே கருதுகிறேன். தன்னலம் இல்லாமல் இந்த அறிய செயல்பாட்டை செய்த தன்னறம் நூல்வெளிக்கு எனது நன்றி கலந்த பாராட்டுகள்.
Though this book is very small and can be read in just a few days (like I have done), it is a book that you can go back to as many times as possible because JMo answers some of the questions from readers in a very insightful way as an experienced writer and a human, with a lot of depth. The questions are touching many aspects - literary writing, challenges that the early writers face, writer's speaking aspects, Art and rational mind, celebrating writers, major literatures, ambitious argument and more. The way JMo answers, every word, sentences in the answers provide great clarity for both writers and readers. It is a must-read for those who want to derive more inspiration towards both reading and writing.