ஒவ்வொரு புத்தகமும் நமக்கு ஒன்றை கற்றுக்கொடுக்கும். Sharing important key take ways from author அருள்நம்பி “வாழ்க்கைப் படிகள்” book
புலவரின் எளிமையான எழுத்து நடை அனைவரும் படிக்கும் வண்ணம் இருக்கிறது.
“எல்லாரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே”.
என்று சொல்லி நமக்கு அறிமுகம் ஆகிறார் நூலாசிரியர் அருள்நம்பி.
இந்த புத்தகத்தில் இரண்டு பாகங்கள். 1. வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகள். 2. ஞானநெறி விளக்கம்
இயற்கையை உவமையாய் காட்டுவதும், வள்ளுவரின் திருக்குறள்களை மேற்கோள் காட்டுவதும் ஆகச்சிறப்பு.
ஒவ்வோரு வரிகளும் என்னை சிந்திக்க வைத்தவை.. நான் எடுத்துக் கொள்ளும் வழிகள்.
சத்திய வழி.
1. அதிகமாகப் பேசாதிருத்தல் 2. மிகவும் அமைதியாக இருக்கப் பழகிக் கொள்ளுதல்
இப்படி தனற்கான வாழ்க்கை படியை தேற்ந்தெடுத்து அனைவரும் வாசிக்க வேண்டிய படைப்பு.
ஒருமுறை படியுங்கள்.! சிந்தனை ஓங்கட்டம்..!!
இப்படி யாருடைய அறிவுரையும் கேட்கப் பிடிக்க வில்லையா? கவலைப்பட வேண்டாம். உங்கள் மனசாட்சி கூறும் அறிவுரையைக் கேட்டு அவ்வழியில் நடந்து பாருங்கள். அதுவே, வாழ்வதற்குரிய ‘நிம்மதியான வழி’ என்பதனை விரைவில் உணர்ந்து கொள்வீர்கள். - புலவர் மா.அருள்நம்பி.