Jump to ratings and reviews
Rate this book

நலமறிதல் [Nalamaridhal]

Rate this book
நோய் என்பதும் உடலின் ஓர் இயல்பான நிலை என்பதனால் பொறுமையுடன் நோயை அனுபவித்து அதைக் குணப்படுத்திக்கொள்ள உடலுக்கு அவகாசம் அளிப்பதே சிறந்தது என்பது இயற்கை உணவுக் கோட்பாடு. மருந்து உண்ணலாம். ஆனால் அம்மருந்தும் உணவாகவே இருக்க வேண்டும். உணவல்லாத எதையுமே உண்ணலாகாது. உணவே பெரும்பாலும் மனநிலைகளை உருவாக்குகிறது என்பது இயற்கை உணவுக் கோட்பாட்டின் கொள்கை. நல்ல உணவு அமைதியை அளிக்கும். நல்ல சிந்தனைகளை அளிக்கும். மிதமிஞ்சிய புலன் நாட்டத்தை அளிக்காது. ஆகவே பதற்றமும் வேகமும் உற்சாகமும் சோர்வும் மாறிமாறி வரும் நிலை இருக்காது. இதனால் நரம்பு நோய்கள் ஏற்படுவதில்லை. நல்ல தூக்கமும் நல்ல பசியும் கழிவகற்றமும் நல்ல சிந்தனைகளும் இருந்தால் இயல்பாகவே நல்வாழ்வு அமையும். - புத்தகத்திலிருந்து…

167 pages, Kindle Edition

Published September 26, 2021

25 people are currently reading
24 people want to read

About the author

Jeyamohan

211 books851 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
30 (54%)
4 stars
16 (29%)
3 stars
8 (14%)
2 stars
0 (0%)
1 star
1 (1%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Keerthi Raja.
21 reviews
December 28, 2023
Can the body mind complex be maintained and regulated by alternate view of treating the body? (Like Siddha, Aayurveda, Homeo).
It also explores some limitations of modern medicine.
Profile Image for Subalakshmi Mohanrarj.
106 reviews3 followers
July 29, 2024
தனக்கு வந்த உடல் பிரச்சினைகளிலிருந்தும், தன்னுடைய நண்பர்களுக்கு ஏற்பட்ட நோய்களிலிருந்தும் மற்றும் வாசகர்களிடமிருந்து வந்த கடிதத்திலிருந்தும் உணர்ந்த, சரியென்று தோன்றிய மருத்துவம் சார்ந்த கருத்துகள் அடங்கிய தொகுப்பு இது. Allopathy அல்லாத மாற்று வழிமுறைகளின் செயல்பாடுகள் குறித்த விளக்கங்கள் எளிமையாக இருந்தன. 

மன உளைச்சல்கள்களால் உண்டாகும் எலும்பு மூட்டு வலிக்கு வாசகர் கண்ட தீர்வைப் பற்றிய விவரிப்பு பலருக்கு நன்மை தரும். உடல் - மனம் எப்படி ஒன்றாக இணைந்திருக்கிறது என்பதை உளவியல் ரீதியாகவும், தத்துவார்த்தமாகவும் விளக்கி இருப்பது அருமை.

இயற்கை உணவு முறை, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், மற்றும் வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் வைத்து நோயை குணமாக்கும் சாத்தியக்கூறுகளை ஒட்டியே பேசும் புத்தகம் இது. ஆனால் இது எல்லா நோய்களுக்கும் பொருந்தாது. ஆசிரியரின் கருத்துகளை தெரிந்துகொள்ள இந்த புத்தகம் படிக்கலாம்.
4 reviews
December 1, 2022
எளிமை,அருமை.

நல்ல கருத்துக்கள்.ஆலோபதி அவசரத்திற்கானது என்பதை பதிவதே பெரிய விடயம்.நன்றி.
ஆசிரியருக்கு ஆயுர்வேதம் பிடித்த அளவிற்கு சித்த மருத்துவம் பிடிக்கவில்லை என்று தெரிகிறது.
இதிலும் நல்ல மருத்துவரும் ,பயன்களும் உள்ளது ஐயா.
3 reviews
June 16, 2023
படிக்கலாம்

நலமறிதல் நம்மை நலமாக வாழவைக்க பயன்படும் ,அனைவரும் தன் உடலையும் மனதையும் அறிந்து கொள்ள , இந்தியாவில் உள்ள மருத்துவத்தை மேலோட்டமாக புரிந்து கொள்ள இந்த மிகவும் நூல் உதவும்.
Profile Image for Ganesh Kuduva.
Author 1 book3 followers
August 4, 2022
நலமறிதல் என்ற இந்த சிறு புத்தகத்தை வாங்கும் எண்ணம் ஏற்பட உதவியாய் இருந்த எனது நண்பன் ஜெகனுக்கு நன்றிகள். ஒரு உடல் மன பயிற்சியாளராக முடிந்த வரை எனது வட்டத்தில் வருகின்ற தென்படுகின்ற புத்தகங்களை வாசிக்கிறேன். இது என்னையும் எனது சிந்தனைகளையும் விரிவாக்கிக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் உதவும் என்ற எண்ணத்தில்.
இந்த புத்தகம் 165 பக்கங்களே கொண்ட புத்தகம் ஆயினும் இதை படிக்க இதில் ஜெயமோகன் மற்றும் அவரின் வாசகர்கள் பகிர்ந்துள்ள தகவல்களை புரிந்து கொள்ளவும் சற்றே நேரம் எடுத்துக்கொண்டது.
நவீன மருத்துவம் முதல் ஆயுர்வேதம் ஹோமியோபதி இயற்கை மருத்துவம் உள்ளிட்ட அணைத்து மருத்துவ துறைகளையும் இந்த புத்தகம் நன்று விவாதிக்கிறது.
இந்த உலகத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் மிக வித்தியாசமான நுணுக்கமான வியாதிகளை பற்றியும் அதை எப்படி அணுகலாம் என்பதை பற்றியும் அலாசிக்கிறது.
கடைசியாக உடல் மற்றும் மனம், அந்த இரண்டின் இருக்கும் ஒரு பிணைப்பை பற்றி ஜெமோ நன்றாக எழுதியுள்ளார்.

Thanks to my friend Jegan, for bringing this book to my attention.

As a health and wellness coach and a practitioner, I am trying to read the books that comes to my attention and boundaries. I am hoping that my thinking will broaden and develop about health and wellness aspects through these reading.

Though this book is just 165 pages, it took a whie for me to finish this book because it took time to understand the discussion threads and take aways between Jeyamogan and his fans.

This book discusses all medicinal and medical fields including modern medicine, Ayurveda, Homeopathy, natural medical care.

You will learn some of the very peculiar medical issues that people go through and how they approach addressing them, in this book.

Finally, the deep dive into the discussion of how our body and mind works and how they are connected are very well described by JMo.

It is a good read for anyone who is looking to get perspectives about various illnesses and how different medicinal fields can be used and approached.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.