வந்தனா-ப்ரத்யும்னன், பாலு-சந்தனா என்ற 2 ஜோடி காதலர்கள்..ஒரு ஜோடி காதலை அறிவித்த ஒன்று. மற்றொன்றோ ஒருதலைக் காதல்..விதியின் பிடியில் கல்யாணம் வரை சென்ற காதல் பிரிகிறது..காதலே வேண்டாம் என்ற ஜோடி, தங்கள் நிலையை பரிசீலிக்கின்றனர்..முடிவில், இரண்டு ஜோடிகளும் சேர்ந்தாரா என்பதே கதை..இது குடும்ப பாசப்பிணைப்புகளை, காதலில் காதல் மட்டும் அல்ல போன்றவற்றை எடுத்துரைக்கும் கதை.
பிரபா லாட்ஜை வைத்து பின்னபட்ட கதை. தன் முதல் மனைவி நினைவாக நடத்தி வந்த ராமமூர்த்தி இரண்டாம் மனைவி, மைத்துனனால் கடனுக்கு தள்ளபடுகிறார். விளைவு லாட்ஜை விற்க முற்படும் போது வாங்க வருகிறார் சிவப்ரகாசம். அவரின் மகன்கள் ப்ரலாப், பிரதி. ப்ரலாப் சுயநலவாதி என்றால், பிரதி நேர்மை, நியாயம் என தொங்குபவன்.
ராமமூர்த்தி க்கு வந்தனா, சந்தனா எனும் இரட்டை மகள்கள், ஒரு பையனும். வந்தனா MBA படிச்சு லாட்ஜை பார்ட்னர்ஷிப் நடத்த ஆசை, திருமணத்தை வெறுப்பவள். அவளின் பிசினஸ் ஐடியாக்களை கேட்டு சிவா அவளை பிரதிக்கு திருமணத்திற்கு பேச, ராமமூர்த்தி வந்தனா பற்றி சொல்லி, சந்தனாவை செய்ய சம்மதிக்கிறார்.
சந்தனா விஷுவல் மாணவி , கதைகள் எழுதுபவள், பிரதி-சந்தனா குணங்கள் முற்றிலும் மாறுபட்டது. சின்னதிரைக்கு கதை சொல்ல சென்னை வருகிறாள், பால்ராஜ், கோலி சந்திகிறாள். பவானி இவர்களின் அம்மா, வடசென்னை தாதா, பலாப்பழம் போன்றவர். இவர்களின் நட்பு சந்தனாக்கு கிடைக்கிறது.
பிரதி - வந்தனா ஈர்க்கபடுகிறார்கள். திருமணத்திற்கு வந்தனா சம்மதிக்க 50-50 % லாட்ஜ் நடத்தபடுகிறது. நஷ்டம் வந்தா லாட்ஜ் சிவாக்கு கைமாறும். லாபம் வர வீணா-வினோத் பழிவாங்கும் நடவடிக்கையால் ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு அவமானத்தில் இறக்கிறார். வந்தனாக்கு சமயத்தில் உதவாமல்,நேர்மை, நியாயம் என பேச நிச்சயம் முறிகிறது.
சந்தனா- வந்தனா சென்னை வருகிறார்கள். பவானி அடைக்கலம் தருகிறார்.
இனி வருவது தான் பால்ராஜ் அட்டகாசம், சாண்டல் பேபி என விளித்து சந்தனாவை தொடர்வதும், பின் ஒதுங்குவதும், அப்பப்பா நவரச நாயகன் இவன் தான். பால்ராஜ் மூலம் பிரதி திரும்ப வந்தனாவை சந்திக்க.... மிச்சம் ஆன்லைனில்.
இதில் என்னை கவர்ந்தவர்கள் பால்ராஜ், பால்ராஜ், பால்ராஜ்
பவானி, வெளியே மிரட்டலா இருக்கும் சிவப்ரகாசம் உள்ளுக்குள் பாசமான மனிதன் கடைசி வரை வந்தனாவிற்கு ஆதரவாக பையனை எதிர்க்கும் பாங்கு, வந்துக்கு பிசினஸ் ரகசியங்களை சொல்லி தருவது, பவானி, பால் மரியாதையா நடத்துவது என வியக்க வைக்கிறார். கல்லுக்குள் ஈரம் மாதிரி சுயநலம் இருந்தாலும் கல்லுக்குள் மனிதன். Different shades of sivaprasad.