இறையுதிர் காடு ❤️ • இந்திரா சௌந்தர்ராஜனின் படைப்புக்கள் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு தொகை புத்தகங்களையும் சில பல தொலைக்காட்சி நாடகங்களையும் படைத்திருப்பினும், இறையுதிர் காடு நான் ருசித்த முதல் படைப்பு. • நான் இப்புதினத்தை படிப்பதற்கு முதற்காரணமே அப்பன் முருகன்தான். பழநி முருகன் தொடர்பான கதைக்களம் என்பது தெரிந்ததுமே படித்தாக வேண்டும் என்ற ஆவல். அதற்கேற்ப கதையும் போகர் சித்தர் பழநிமலை முருகன் சிலையை எவ்வாறு செய்தார் என்பதை மையமாக கொண்டு அன்று, இன்று என இரு காலகாட்டத்தில் கதையை நகர்த்தி, விறுவிறுப்பாக, அத்தியாயத்திற்கு அத்தியாயம் பல மர்மங்களை அவிழ்த்தும், அங்கும் இங்குமாக பல சித்த இரகசியங்களை விரித்தும் அழகாக கானகமாக்கப்பட்டுள்ளது இந்த இறையுதிர்காடு.
போகர் சித்தர், நவபாஷாணம், பொதிகை–பழனி… எல்லாம் சேர்ந்து ஒரு ரொம்ப strong ஆன ஆன்மீக–thriller vibe. கதையின் tension முதல் பாகத்தில எப்படி இருந்ததோ அதே levelல இதிலும் தொடர்கிறது. ஆன்மிகம் + மர்மம் + history mix பண்ணி visual-a feel ஆகும் மாதிரி எழுதப்பட்டிருக்கும்.
சில இடங்களில் description கொஞ்சம் நீளமா இருக்கும், ஆனா அந்தத் துளியும் கதையிலிருந்து disconnect ஆகல; அந்த உலகுக்குள்ளே நம்மையும் இழுத்துக்கிட்டு போயிடும். Overall-aa, சித்தர் மர்மங்கள், faith vs logic clash, past–present parallel narrationன்னு எல்லாத்தையும் நன்றா balance பண்ணிய solid second part.
இதைப் படிக்கறது ஒரு கதையைப் படிக்கறதுக்கு மட்டுமில்ல, ஒரு அனுபவம் மாதிரி இருந்தது.