காலை ஆறு மணிக்கே ஜோதி எழுந்து குளித்து சாமி கும்பிட்ட பிறகு, சமையல் கட்டுக்குள் நுழைந்து விட்டாள்! முதலில் காபி தயாரித்தாள்! கதிர் பின்னாலேயே வந்து விட, காபியைத் தந்தாள்! “உன் காபிக்கு ஈடு இணை எதுவும் இல்லை ஜோதி!” “காலைல புகழ்ச்சியா?” “இந்த கதிர் பேசற எதுவுமே பாசாங்கு இல்லை! நிஜம்னு உனக்கே தெரியும்?” “பொங்கல், வடை, பூரி, கிச்சடி போதுமா?” “எதுக்கு இத்தனை அயிட்டங்கள்?” “அண்ணன், அண்ணியும் வர்றாங்க இல்லையா?” “அவங்க நம்ம வீட்டு மனுஷங்க இல்லையா? எதுக்கு தடபுடல?” “அண்ணன் எதிர்பார்ப்பார்” “எங்கக்கா எதிர்பாக்கமாட்டா!” “சரி! அண்ணிக்கு உள்ள மனப் பக்குவம் மத்தவங்களுக்கு வருமா? நான் டிபனை ரெடி பண்றேன்!” “நீ சமையல்காரியை வச்சுக்கோணு சொன்னா கேக