“மீரா, உனக்குப் புத்தி சொல்ல எனக்கு உரிமையோ யோக்கியதையோ இல்லை... இருந்தாலும்...” “ஏன் உத்ரா இழுக்கறே? உரிமையும் யோக்கியதையும் இல்லைன்னு தெரிஞ்சும் ஏன் உன் மனசு எனக்குப் புத்திமதி சொல்ல ஆசைப்படறது?” “என்ன செய்கிறது? உன்னோடு பழகிட்டேன். சின்ன வயசிலேந்து உன்னை நன்னாத் தெரிஞ்சிண்டவன், புரிஞ்சிண்டவன் நான் தான். என் அம்மா, அப்பாகூடச் சொல்றா. நீ எடுத்திருக்கிற முடிவு சரில்லைன்னு.” “உன் அம்மாவுக்கு நான் மருமகளா வரணும்னு ஆசை! ஏன்? நான் ஒரு பணக்காரி... உன் அப்பாவுக்கு என் பணத்தை மூலதனமா வெச்சு பிஸினஸ் ஆரம்பிச்சு அதில உன்னை உட்கார்த்தணும்னு ஒரு திட்டம். அதனாலே தான் என் முடிவு எல்லாருக்கும் ஒரு கசப்பா, ஒரு வெறுப்பா இருக்கு.” “உன் கற்பனை நன்னாவே ஓடறது, மீரா.