நம்பகமான, நேர்மையான வரலாற்றாசிரியர்கள் எத்தனைபேர் இருந்திருக்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும் - தமக்குத் தென்பட்ட விதமாகத்தான் அடுக்கித் தந்திருக்கிறார்கள்; மனச்சாய்வில்லாத ஒரு வரலாற்றாசிரியன் என்பது அமாவாசையில் முழுநிலா என்கிற மாதிரி அசாத்தியம்; அல்லது நிசப்தம் போட்ட சப்தம் என்பதுபோன்ற கவிக்கிறுக்கு என்பதெல்லாம் சரிதான். என்றாலும், எத்தனை நூற்றாண்டுப் பழைய வரலாற்று நிகழ்வுகளைத் தங்கள் மானசீகத்தில் எவ்வளவு தீர்க்கமாக மீட்டுருவாக்க முடிந்திருந்திருக்கிறது அவர்களால். அவற்றில் ஒரு தர்க்கத் தொடர்ச்சியை நிறுவிக்காட்டவும் முடிந்திருக்கிறது... வரலாற்றுத் தொடர்ச்சியைக் கட்டமைக்கும்போது, அவர்களுக்குப் புராதன நாட்களிலும், சமகாலத்திலும் ஒரே சமயத்தில் காலூன்றி நிற்க வாய்த்திருக்கும்தானே.... - நாவலிலிருந்து
Yuvan Chandrasekar (b. 14 December 1961) is a Tamil writer, poet, translator, whose works bring out a postmodern aesthetic. He wrote poetry under the name of M. Yuvan. Yuvan Chandrasekar's works express a kind of magical realism which he classifies as 'alternate reality'.
கொரோனா ஊரடங்கு காலத்தில் Notion Press (Bynge) செயலியில் தொடராக வந்த நாவல் எண்கோண மனிதன்... எழுத்தாளரின் மாமா திரு.சம்பந்தமூர்த்தி அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது...
இரண்டு ஆண் குழந்தைகள். இருபதாம் நூற்றாண்டின் தமிழ் நாடகத்திலும், சினிமாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்திய பாய்ஸ் கம்பெனி காலகட்டத்தில் மிகப் பெரிய பாடகனாகவும், நடிகனாகவும் மாறுகிறான் ஒருவன். இன்னொருவான் காவல்துறை அதிகாரியாகிறான். பெரும் புகழுக்கான வாய்ப்பு இருந்த சூழ்நிலையில், தடயமேயின்றிக் காணாமல்போன அந்த நடிகனைத் தேடி அலையும் காவல்துறை அதிகாரியின் பயணம் தான் எண்கோண மனிதன்.
காவல் அதிகாரியன சம்பந்தமூர்த்தி இளம்வயதில் தொலைந்து போன தன் உருவத்தை உடைய நாடக நடிகர் சோமன் என்கிற சௌமியநாராயணனை தேடி அவர் தொடர்புடைய எட்டு நபர்களை சந்தித்து தகவல் திரட்டுகிறார்... இறுதியில் அவரைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் கதை...
ஒரு படைப்பு எப்போது வாசகனை முழுதாக உள்ளிழுத்துக் கொள்ளும் என்றால் அவன் வாழ்வில் சந்தித்த மனிதர்களையும், அனுபவங்களையும் அது பிரதிபலிக்கும் போது நெருக்கம் கொள்ளும்... அதைப் போல இந்த படைப்பில் வரும் சம்பந்தமூர்த்தி மாமாவைப் போல எனக்கு ஒரு தாத்தா இருந்தார்... சம்பந்தமூர்த்தி மாமாவும் யுவனின் படைப்புலக கதாப்பாத்திரமான எழுத்தாளர் கிருஷணனும் மேற்க்கொள்ளும் மணிக்கணக்கான உரையாடல்கள் எனக்கு எங்கள் சின்ன தாத்தாவை நினைவுப்படுத்தியது...
ஒரு விறுவிறுப்பான விசாரணைக் கதையின் அமைப்பில் செல்லுகிறது கதை ஓட்டம்... மிகவும் தத்துவார்த்தமான எல்லைகளுக்குச் செல்லாமல் வாசகனை சுவாரஸ்யம் குறையாத புனைவுலத்திற்குள் புகுத்தி விடும் புத்தகம் இந்த எண்கோண மனிதன்!
புத்தகம் – எண்கோண மனிதன் ஆசிரியர் – யுவன் சந்திரசேகர் பதிப்பகம் – Notion Press (Bynge) பக்கங்கள் – 252 விலை – ₹_
யுவன் சந்திரசேகரின் கதைகளில் தேடலோடு அலையும் ஒரு ஜீவன் இருக்கும். எப்போதும் அது தான் என்னை இழுத்துக் கொண்டு போகும் விஷயமாக இருக்கும். எண்கோண மனிதன் நிறைய ஞாபகங்களை கிளறிச் சென்றது. இளம் வயதில் வீட்டை விட்டுப் போன நடராஜ் மாமாவின் ஏதோ ஒரு ஜீன் எனக்குள்ளேயும் இருக்கிறது அதுதான் என்னை இப்படி ஒரு wanderlust soul ஆக என்னை வைத்திருக்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த ஒரு வாரமாக அதே தேடலும் ஞாபகங்களும். மாமாவைப் பற்றியும். இல்லை என்று உறுதியாகத் தெரியாத வரைக்கும் எங்கேயோ இருக்கிறார் என்றைக்காவது திரும்பி வந்து இந்த அலைதல்களையும் அதற்கான காரணங்களையும் சொல்லுவார் என்ற நம்பிக்கையும் இருக்கும்.