Jump to ratings and reviews

காந்தியம் ஓர் உரையாடல்

காந்தி குறித்த தொல்.திருமாவளனுடைய கருத்துகள் அடங்கிய பேட்டியின் நூல்வடிவம்.

46 pages, Paperback

Published January 1, 2022

Loading...
Loading...

About the author

Thol. Thirumavalavan (தொல். திருமாவளவன்) or Dr. Thirumavalavan is an Indian politician, scholar and activist from the state of Tamil Nadu. He is a Member of Parliament from Chidambaram and current president of Viduthalai Chiruthaigal Katchi (VCK). He rose to prominence in the 1990s as a Dalit leader, and formally entered politics in 1999. His political platform centres on ending caste discrimination and consequently the caste system. He has also expressed support for Tamil nationalist movements in Sri Lanka.

He worked in the government's Forensic Department as a scientific assistant, from which he later resigned in 1999 to contest in elections. He completed his Ph.D. at Manonmanium Sundaranar University and was awarded his doctorate in 2018. He is an author, and has also acted in Tamil cinema.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (66%)
4 stars
2 (22%)
3 stars
1 (11%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
19 reviews1 follower
June 25, 2025
அண்ணல் காந்தியடிகளுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு பொதிகை தொலைக்காட்சி ஏற்பாட்டில் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடன் சித்ரா பாலசுப்பிரமணியம் அவர்கள் நடத்திய நேர்காணலின் தொகுப்பு தன்னறம் நூல்வெளியின் வெளியீடான "காந்தியம் ஓர் உரையாடல்".


காந்தியத்தின் கூறுகளாகத் தன்னைக் கவர்ந்ததில் முதன்மையானதாக வன்முறை எதிர்ப்பையும், மதுவிலக்கு கொள்கையையும் கூறினாலும் காந்தியம் காட்டும் சகிப்புத்தன்மையையும், உரையாடல் அம்சத்தையும் குறித்து அண்ணனின் விளக்கம் ஆழமானது, மிக முக்கியமானது. காந்தியத்தின் பார்வையில் உரையாடலின் தேவையைப் பற்றிச் சொல்லும் அண்ணன் உரையாடலுக்கான முன் தயாரிப்பாகப்  பின்வருபனவற்றைக் கூறுகிறார்.


"உரையாடல் என்பதே முதிர்ச்சியின் விளைவாக உருவாகக்கூடியதுதான். மேம்பட்ட வளர்ச்சி சார் நிலையில் இருப்பவர்களால்தான் மனம் திறந்து பேச முடியும். அறிவு சார் நிலை என்பது வேறு, வளர்ச்சி சார் நிலை என்பது வேறு. புத்திசாலித்தனமாக இருக்கும் எல்லோரும் பேச முடியாது. ஆனால் பண்பட்டவர்களால் தான் எல்லா இடங்களிலும் பேச முடியும். வளர்ச்சியுற்ற ஆளுமை என்பது அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதற்கு படித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இந்தத் தனித்தன்மை பெறுவதற்கு ஒரு டிகிரி படிக்க வேண்டும் அல்லது யுனிவர்சிட்டி சென்று பிஎச்டி முடிக்க வேண்டும் என்பதெல்லாம் தேவை கிடையாது. மனிதர்களைப் படிக்க வேண்டும். மனித உணர்வுகளை மதிக்க வேண்டும். மனிதர்களை நேசிக்க வேண்டும். மனிதர்களோடு இணைந்து வாழ்வதற்கான பரந்த உள்ளத்தைப் பெற்றிருக்க வேண்டும் அதுதான் மெச்சூரிட்டி" 


இட ஒதுக்கீடு, தீண்டாமை, கிராமிய பார்வை, உடை என காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த முரன்களைப் பற்றி அண்ணனின் பார்வை தீர்க்கமானது. மேற்சொன்ன முரண்களை அணுகுமுறை முரண்கள் என்ற பெயரிடும் அண்ணன் அந்த முரண்களில் அவ்வப்பொழுது ஒருவருக்கொருவர் சமரசம் செய்து கொண்டனர் என்று சொல்லி அந்த சமரசத்தையும் சகிப்புத்தன்மையையும் தன்னளவில் நியாயமானது என்கிறார் அதே நேரத்தில் கொள்கை முரண்களில் எந்த சமரசமும் ஏற்றுக்கொள்ள விரும்பாத காந்தியத்தை நேசிக்கிறார். சமீபத்திய அவரது அரசியல் நிலைப்பாடுகளின் மூலம் அந்த நேசத்தை உணர முடிகிறது. 



திருமாவளவன் அவர்களின் ஆரம்ப கால மேடைப்பேச்சுகளில் அவரைப் புறந்தள்ளுவதற்கான காரணங்களை என்னில் அடுக்கி வைத்ததுண்டு. ஆனால் அண்ணனின் சமீபத்திய  உரையாடல்கள் வியக்க வைக்கின்றன.. தொடர்ந்து கனிந்து கொண்டே இருக்கிறார். பிறரைக் கனியவும் வைக்கிறார். கனிந்த அந்தப் பழத்தின் வாசம் இந்தப் புத்தகத்தின் பக்கங்களிலெல்லாம் நிறைந்திருக்கிறது. என்ன அவர் கனிய வைத்தவை எல்லாம் அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளை அரண்மனையாக்குகின்றன. இவரோ பசித்த வயிற்றுடனும் தளர்ந்த பாதங்களுடனும் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்.
Profile Image for S.Sarathkumar.
2 reviews
December 30, 2023
காந்தியம் ஓர் உரையாடல்
( தொல்.திருமாவளவன் நேர்காணல் )

Zee தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் அம்பேத்கர் பற்றிய ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பற்றி அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆகச் சிறந்த உரையை வழங்கியிருப்பார். அதே போல் தான் இந்நூலில் இடம்பெற்றுள்ள நேர்காணலும். காந்தியம் பற்றிய ஒரு சிறப்பு நேர்காணல் என்று சொல்லலாம். அதை நூலாக வெளியிட்ட தன்னறம் நூல்வெளி(க்கு) நன்றிகள்.

காந்தி அவர்களின் கொள்கைப் பிடிப்பு பற்றியும், அவர் எவ்வளவு ஆளுமைத்திறனோடு இருந்தார் என்பதைப் பற்றியும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும், காந்திக்கும் இடையிலிருந்த முரண்கள் பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளார். அதில் எழுச்சித்தமிழர் அவர்கள் குறிப்பிட்ட இந்த வாசகம் போதும் காந்திக்கும், அம்பேத்கர்க்கும் இருந்த முரணை விவரிப்பதற்கு. அது " புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சாதி ஒழிப்புக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர், காந்தியடிகள் தீண்டாமை ஒழிய வேண்டும் என்கிற கருத்தை முன்னிறுத்தியவர். இந்த முரண் தான் அவர்கள் இருவருக்கும் சமத்துவம் சார்ந்து இருந்து மிகப் பெரும் முரண். காந்தி உயர் தட்டு மக்களின் சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்துப் போராடினார், அண்ணல் அம்பேத்கர் சக மனிதர்களின் சுதந்திரத்திற்காக, சமத்துவத்திற்காக வெள்ளையனை எதிர்த்தும், உயர் சாதி மக்களை எதிர்த்தும் போராடினார்.

இந்த இரண்டு சுதந்திரப் போராட்டமும் ஒன்று போல் தெரியலாம் ஆனால் இரண்டும் ஒன்று அல்ல. இந்திய நாட்டின் சுதந்திரம் முந்நூறு ஆண்டுகள் அடிமை வாழ்க்கையின் போராட்டத்தால் கிடைத்த வெற்றி. ஆனால் சாதி ஒழிப்பு போராட்டம் மகான் புத்தரில் தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் கடந்து அண்ணல் அம்பேத்கர், அயோத்தி தாசர் பண்டிதர், தத்தா இரட்டைமலை சீனிவாசன், தந்தை பெரியார் அவர்கள் எனத் தொடர்ந்து நடைபெற்ற தற்போது எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வரை சாதி ஒழிப்பு போராட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சமத்துவ சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.
Profile Image for Yadhu Nandhan.
269 reviews
September 24, 2023
விமர்சனங்களுக்கு எப்போதுமே திறந்த கதவுடன் காந்தியடிகள் எப்படி இருந்திருக்கிறார் என்றும் அது ஒரு தலைவர்க்கு எவ்வளவு இன்றியமையாதது என்றும்
காந்தியின் எளிமை எப்படி ஆயுதமாகிறது
அவ்வளவு மிடுக்கான தோற்றம் இல்லாத அன்பு தவழும் முகம் கொண்ட ஒல்லியான ஒரு மனிதர் வெள்ளையரின் அரசாங்கத்தையே எப்படி நடுங்க வைத்தார் என்றும்
அவருடைய தலைமைப் பண்பு எத்தகையதாய் இருந்திருந்தால் மதுவொழிப்புக்காகப் பெரியார் தன் தோட்டத்தில உள்ள அத்தனை தென்னை மரங்களையும் வெட்டியிருப்பார் என்றும்
காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பிலிருந்து அம்பேத்கரின் சாதியொழிப்பு எப்படி மாறுபடுகிறது என்றும்
அணுகுமுறையில் சமரசம் செய்துகொள்ளுதற்கும் கொள்கையில் சமரசம் செய்து கொளற்கும் உள்ள வேறுபாட்டையும் தெளிவாய்க் கூறுகிறார் தோழர் தொல் திருமாவளவன்.
இக்கருத்துகளை ஒரு அம்பேத்கரிய கருத்துகளைப் பின்பற்றுபவரிடம் இருந்து கேட்பது தெளிவளிக்கிறது.

எனக்கு ஒரு தனிப்பட்ட பார்வையை இந்நூல் தருகிறது
காந்தியடிகள் சொல்லளவில் சனாதனத்தை ஆதரிக்கவே செய்தார் ஆனால் செயலளவில் அறம் சார்ந்து செயல்பட்டேயிருக்கிறார். அரிஜன ஆலயநுழைவு வழியும் சாதிப் பாகுபாட்டைக் களைய தனது தண்டி யாத்திரையில் சிற்றூர்களில் அவர் செய்த செயல்களின் வழியும் ஒரு முடிவுக்கு வர முடிகிறது அஃது யாதென்றால் சொல்லளவில் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் அவர் சனாதனத்தை எதிர்த்தேயுள்ளார் என்பதே.
Profile Image for Thamiziniyan Supa.
Author 1 book27 followers
January 31, 2022
காந்தியின் மீதான விமர்சனங்களைக் கடந்து அவரை அரவணைத்துச் செல்வது எப்படி?

காந்தியுடன் எங்கெல்லாம் முரண், எங்கெல்லாம் சமரசம்?

தெளிவான ஓர் உரையாடல்

#Gandhi #Ambedkar
Displaying 1 - 4 of 4 reviews