ஒரு கதைக்கு கதையின் கரு எவ்வளவு முக்கியமோ அதைப் போன்றே அக்கதையில் வரும் மாந்தர்களின் பெயர்களும் முக்கியம். காலப்போக்கில் அவர்களின் பெயர்களே அக்கதைக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். இது கதைகளில் மட்டுமல்ல, வரலாற்று நிகழ்வுகளில் உள்ள ஒன்று. வரலாற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதைகளில் கதையின் கரு போன்றே கதைமாந்தர்களின் பெயர்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் அப்பெயர்களின் வழியாகவே நாம் அக்கதையை காண இயலும். ஆனால் அனைத்து வரலாற்றுப் பதிவுகளும் கதை மாந்தர்களின் பெயர்களை கொண்டிருக்கும் என்று கூறிட இயலாது. சில வரலாற்று நிகழ்வுகளானது அந்நிகழ்வை நிகழ்த்திய நபரின் பெயரை குறிப்பிடாமல் ஒரு சாதாரண நிகழ்வாகவே பதிவு செய்யப்பட்டிரு