இசை அல்லது இளையராஜா: திரையிசையின் போக்குகளை மாற்றியமைத்த இளையராஜாவின் தனித்துவமும், வாழ்வியல் சவால்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழக ஆளுமைகள் வரிசையில் இரண்டாவது நூலாக இந்நூல் வெளிவருகிறது.
Yugabharathi is a Tamil poet, music director, and lyricist. His birth name was "Santhanam Desan" and he was known as "Santhanam" by his family and friends. During the early 1990s when he began writing poems for magazines he started using the pen name "Yugabharathi" in honour of the great Tamil poet Subramanya Bharathi, commonly known as Mahakavi Bharithiyar.
Debuting in the film Aanandham with lyrics for the song "Pallankuzhiyin vattam parthaen", he has become a successful lyricist penning more than 1000 songs.
புத்தகம் : இசை அல்லது இளையராஜா ஆசிரியர் :யுகபாரதி பக்கங்கள் :32 பதிப்பு :நேர்நிரை, கிண்டில் பதிப்பு
"இசையைப் பிரித்துவிட்டு இளையராஜாவயோ இளையராஜாவைப் பிரித்துவிட்டு இசையையோ பேசமுடியாத அல்லது பேச விரும்பாத தலைமுறையைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன்." என யுகபாரதி தொடங்க, மனம் ஏனோ சிறுவயதில் கோவில் திருவிழாக்களிலும், திருமண வீடுகளிலும் கேட்டு, மெல்ல தாளமிட வைத்த கிராமத்து இசைப்பாடல்கள் நோக்கி பயணிக்கிறது.
இசை, இசையமைப்பாளர், கவிதை என எதைப்பற்றியும் அறியாத காலத்திலும் நினைவில் படிந்து ரீங்காரமிசைத்த அந்த பாடல்கள் பல இளையராஜா இசையமைத்தவை என்று தேடி அறிந்த வயதில், ஏற்கனவே ஏ. ஆர். ரஹ்மானின் தீவிர விசிறி ஆகி இருந்தேன்.
நல்ல இசை, இசையை விரும்பு அனைவருக்கும் வரமே. எனில் இளையராஜா ஒரு மிகச்சிறந்த வரப்பிரசாதம். மனம் இலகுவாக "தென்றல் வந்து தீண்டும் போது", உற்சாகம் கொள்ள, "அடியே மனம் நில்லுனா நிக்காதடி" இரவின் தனிமையில், "மௌனமான நேரம்" கிராமிய மனம் கமழும் "மாங்குயிலே பூங்குயிலே" பயணிக்கையில் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் " இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படி இளையராஜாவின் இசைக்கு, ஒரு சக ரசிகனின் வர்ணனை போல அமைந்துள்ளது இந்த புத்தகம். திரையிசையில் ராஜாவின் வருகை, அவரின் தமிழ் ஆர்வம், இசையார்வம், பாமரனுக்கும் அவன் புரிந்து கொள்ள, ரசித்து தலையசைத்து தாளமிடவைக்கும் விதத்தில் இசையை எளிமையாக்கிய ராஜாவின் பரந்து விரிந்த இசை சாம்ராஜ்யத்தை பற்றிய சிறிய கட்டுரைத் தொகுப்பு இந்த புத்தகம்.
இளையராஜாவின் இசைப்பயணத்தைப்பற்றி இன்னும் விரிவாக, எழுதி இருக்கக்கூடாதா என்ற சிறு ஏக்கத்துடன் புத்தகத்தின் கடைசி பக்கத்தை எட்டினேன்.
கவிஞர் யுகபாரதியின் "இசை அல்லது இளையராஜா" எனும் நூல் இளையராஜா அவர்களின் இசையை புதியதோர் கண்ணோட்டத்தில் அணுகுகிறது. இளையராஜாவின் இசைப் புலமையையும், திரையிசைப் பாடல்களிலும், பிண்ணணி இசையிலும் அவர் நிகழ்த்தும் அற்புதங்களையும் பல இயக்குனர்களின் மேடைப் பேச்சுகளின் மூலம் அறிந்திருப்போம்.
இளையராஜா அவர்கள் பாடல் வரிகளுக்கு தரும் முக்கியத்துவத்தையும், அவரது இசையில் கேட்கும் வார்த்தைகளின் தெளிவையும் பல பாடல்களில் உணர்ந்திருப்போம். அதன் காரணம் இளையராஜாவுக்கு இருந்த மொழிப் புலமை. அந்த மொழிப் புலமையையே இந்நூல் எடுத்துக்காட்டுக்களுடன் கையாள்கிறது.
தமிழ் வார்த்தைகளின் சந்தத்தை வைத்துக்கொண்டு அவர் கட்டமைத்த இசை வடிவத்தையும், அதை சிரமமில்லாமல் கிராமத்தின் கடைக்கோடி ரசிகனுக்கும் சென்றடையும் வகையில் கடத்தியதையும் நமக்கு பரிச்சயமான பாடல்களைக் கொண்டு விவரிக்கிறார் கவிஞர்.
பாடலாசிரியராக இளையராஜாவின் வார்த்தை பிரயோகம், மற்ற பாடலாசிரியர்களின் வரிகளில் அர்த்தம் பிரழாமல் செய்யும் மாற்றங்கள், அதில் அவர் புகுத்தும் எளிமை ஆகியவற்றை கவிஞர் அவர் ரசித்த பாடல்களிலிருந்தும், அவருடன் பணியாற்றிய அனுபவத்திலிருந்தும் பகிர்கிறார்.
எளிய மக்களிடம் தனது இசைப் புலமையைக் காட்டி மிரள வைக்காது, அவர்கள் தேவைக்கேற்றவாறு, கதை நடக்கும் நிலப்பரப்பின் வட்டார மொழியின் வாயிலாக உணர்வுகளை கடத்துவதே இளையராஜாவின் அசாத்திய திறமை.
ஒரு பாடலாசிரியர் ஒரு இசையமைப்பாளரின் மொழிப் புலமையை பற்றி எழுதுவது இளையராஜா திரையிசையில் நிகழ்த்திய புரட்சிக்கும், யுகபாரதியின் திறந்த மனதிற்கும் - தெளிவான சிந்தனைக்கும் சான்று.
இசை வேறு இளையராஜா வேறு என்று சொல்ல முடியாது அளவில் ஒன்றிணைந்து இருக்கிறார் என்று சொன்னால் மிகையல்ல. யுக பாரதி எழுதியுள்ள நூலில் இளையராஜவே பற்றிய முக்கிய குறிப்புகளை எழுதியுள்ளார். இசைக்கு நிகராக தமிழ் என்றே முக்கியத்துவம் தந்துள்ளார் இசை ஞானி. இருந்தாலும் தேவைக்கேற்ப தமிழை வேறு விதமாக எளிய மக்கள் புரியும் வகையில் எழுதியுள்ளார் அல்லது திருத்தியுள்ளார்/இசையும் அமைத்துள்ளார்...
பாடல் வரிகளும் இசையும் எப்படி இணைந்து இருக்கவேண்டும் என்று புதிய பரிணாமத்தில் தமிழ் சொறகளின் பயன்பாடு பற்றி அருமையான புத்தகத்தை இயற்றியுள்ளார் யுகபாரதி!! சிறந்த புத்தகம்!!
மொழியையும் இசையையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கும் இளையராஜா பாமரத் தமிழனின் தோழன்! இந்த கட்டுரை இன்னும் உள்ள கொஞ்சம் நீண்டிருக்கலாம்.... சுருக்கமாக இருந்தாலும் மனதிற்கு நெருக்கமாக எழுதியுள்ளார் யுகபாரதி...
இளையராஜாவின் இசையை விரும்புபவர்களுக்கு அவர் வார்த்தைகளுக்கு கொடுத்த முக்கியத்துவமும் கடத்தப்பட்டு, காலத்தால் அழியாதவையாக இருப்பதன் காரணம் சொல்லும். அருமையான புத்தகம் - இசை அல்லது இளையராஜா - யுகபாரதி