இப்போது உச்சரித்தாலும் உடலையும், உள்ளத்தையும் ஒருசேர நடுநடுங்க செய்யும் சொல், பஞ்சம். கடந்து போய்விட்ட பஞ்சங்களும் கூட நினைவுகளாக, கதைகளாக, உணர்வுகளாக உயிர்த்திருக்கின்றன. வரலாற்று பதிவுகள்தான் குறைவு. அபூர்வமாக எஞ்சி இருக்கும் நாவல்களில் ஒன்று வில்லியம் டிக்பி எனும் ஆங்கிலேயே எழுத்தாளரின் நேரடிப் பதிவு. 1877ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் வெடித்த மாபெரும் பஞ்சத்தின் அவல வரலாற்றை அருகிலிருந்து கண்டும், உணர்ந்தும் எழுதியிருக்கிறார் டிக்பி. மக்களின் துயர்மிகு வலிகளை பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆங்கிலேய அரசு பஞ்சத்தை எதிர்கொண்ட விதத்தை கூர்மையாகவும், நேர்மையாகவும் விமரிசனத்திற்கு உட்படுத்துகிறார் நூலாசிரியர். உயிரே போனாலும் சாதிப் பற்றை விட்டுக்கொடுக்காத வினோத மனிதர்களின் கதையும் இதில் உண்டு. இது பஞ்சத்தின் கதை. இந்தியாவின் கதை. நம் மனசாட்சியை குத்தி கிளறிவிடும் வரலாற்றின் கதையும் கூட.