Jump to ratings and reviews
Rate this book

ஜானகி அம்மாள்: இந்தியாவின் கரும்புப் பெண்மணி

Rate this book
பக்கத்துவீட்டிலிருக்கும் விஞ்ஞானியைப் பற்றிப் பேசும் படைப்பு உங்களுக்குத் தெரிந்த விஞ்ஞானியின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், ஐன்ஸ்டீன், எடிசன் என்பார்கள். ‘இந்திய’ விஞ்ஞானி என்று கேட்டால் சர் சி வி ராமன், அப்துல் கலாம் பெயரைக் குறிப்பிடுவார்கள். சரி, பெண் விஞ்ஞானி யாராவது தெரியுமா என்றால், மேரி கியூரி என்று சொன்னபின்... ரொம்பவும் யோசித்து விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவைச் சொல்வார்கள்.

இப்படி யாரோ ஓரிருவரை மட்டுமே மக்கள் அறிந்துவைத்திருப்பதில் சிக்கல் இருக்கிறது. “விஞ்ஞானி என்றால் கோடியில் ஒருவர் - அறிவு ஜீவி – அதிசயப் பிறவியாக இந்த உலகுக்கு வந்திருக்கிறார் –நமக்குத் தேவையானவற்றைக் கண்டுபிடித்துத் தர பிறப்பெடுத்Ī

40 pages, Kindle Edition

Published February 4, 2022

3 people are currently reading
2 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (69%)
4 stars
2 (15%)
3 stars
1 (7%)
2 stars
1 (7%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Balaji M.
221 reviews14 followers
February 2, 2024
"ஜானகி அம்மாள்: இந்தியாவின் கரும்புப் பெண்மணி" - இ.பா. சிந்தன்


1897இல் கேரளத்தில் பிறந்த மேன்மைமிகு "ஜானகி அம்மாள்" நிகழ்த்திய ஒரு பெரும் புரட்சி வரலாற்றை சொல்கிறது, 40 பக்கங்களை கொண்ட இப்புத்தகம். ஜானகி அம்மாள் பற்றி, தாவரவியல் தொடர்பான பல அறிய தகவல்கள் என இப்புத்தகத்தில் பொதிந்துள்ளது.

125 ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்ட குளத்தில் பிறந்த பெண்ணான ஜானகி அம்மாள், தனது பதின்ம வயதில் கல்வி மேல் தீரா வேட்கை கொண்டுள்ளார். அதற்காக திருமணத்தையும் ஒதுக்கி, ஏதோ ஒரு பட்டப்படிப்பு படித்தால் போதும் என ஆர்வத்துடன் வந்து சென்னை இராணி மேரி கல்லூரியில் படிக்கிறார். Home Science படித்துக்கொண்டிருந்தவருக்கு தாவரவியல் மீது ஆர்வம் ஏற்பட்டு மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, தாவரவியலை கற்று முதல் தாவரவியல் பெண் பட்டதாரியாகிறார்.

பின்பு சென்னை கிறுத்துவ கல்லூரியில் ஆசிரியைப் பணி, அமெரிக்காவில் உதவித்தொகை மூலம் 'தாவர உயிரணுவியல்' (cytology) முதுகலை படிப்பு, தாவரவியலில் ஆராய்ச்சி, இவர் கண்டுபிடித்த கத்திரிக்காய் ரகத்திற்கு அவரின் பெயரே சூட்டப்பட்டது, பனை வெல்லத்துக்கு மாற்றாக அதிக இனிப்பு கொண்ட கரும்பை
உருவாக்கி அந்நிய நாட்டு இறக்குமதி கரும்புகளை குறைத்தது, தாவரவியல் தொடர்பான புத்தகங்களை எழுதியது, நேருவே அவரை இந்தியாவிற்கு அழைத்து தாவரவியல் துறை ஆராய்ச்சிகளை மேற்கொள்ள செய்தது, கேரளாவில் காட்டை அழித்து அணை கட்ட முற்பட்டதை போராடி தடுத்தது என பல சாதனைகளை புரிந்துள்ளார்.
இவ்வளவுக்கும் முதலில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கும், பெண் என்ற முறையில் பல அவமானங்களுக்கும் அவர் ஆளானதாக கூறப்படுகிறது.

அப்படியிருந்தும், ஒரு பெரும் புரட்சி செய்த இப்படி ஒரு ஆளுமையை நம் பள்ளி கல்வி புத்தகங்களில் சேர்க்காமல் விடுபட்டது நமது துரதிர்ஷ்டம்.

இப்புத்தகம் குழந்தைகளுக்கானது என அறிமுகம் செய்யப்பட்டாலும், முற்றிலும் நாம் இதுவரை அறியாத ஒரு சாதனை தாவரவியலாளரை பற்றிய அறிமுகம் கிடைக்கப்பெறுவதற்கு, அனைவரும் வாசிக்கலாம்.


புத்தகத்திலிருந்து ...

\
அவருக்கு அதிகப் பொறுமை இருந்தது. ஒரு நல்ல ஆய்வாளருக்குப் பொறுமை அவசியம்.
/

\
ஜானகி அம்மாள் என்ன செய்தார் தெரியுமா? அந்தக் காலத்தில் இருந்த செடிகளின் குரோமோசோம் தகவல்களை எல்லாம் கண்டுபிடித்து ஒரு நூலாக எழுதினார். ‘குரோமோசோம் அட்லஸ் ஆஃப் கல்டிவேட்டட் பிளான்ட்ஸ்’ என்கிற நூல் இன்றைக்கும் தாவரவியல் படிப்பவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது.
/

\
மஞ்சளும் வெள்ளையும் கலந்தது போன்ற ஒரு ரோஜாப்பூ விதையை ஜானகி அம்மாள் கண்டுபிடித்தார். அதற்குப் பெயரே என்ன தெரியுமா? ‘மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்’. உலகம் முழுவதும் இந்த செடி வளர்ந்து அழகான பூக்களை இன்றும் தருகிறது. அதற்கு ஜானகி அம்மாளின் பெயரையே வைத்திருக்கிறார்கள்.
/

\
இந்தியாவுக்கு ஒரு செடி வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பிரிட்டன் அரசாங்கத்தைத்தான் கேட்க வேண்டும். உலகில் உள்ள எல்லா செடிகளின் விதைகளையும் அவர்கள்தாம் இலண்டனில் வைத்திருந்தார்கள். ஜானகி அம்மாள் இதை மாற்ற விரும்பினார்.
/

\
அவர் பார்க்கிற செடிகளை எல்லாம் சேகரித்தார். அதை எல்லாம் சேர்த்து பொட்டானிக்கல் சர்வேயில் வைத்தார். இனிமேல் இந்தியாவில் இருக்கிற எந்தச் செடியும் அழியக்கூடாது என்றார். அப்படியே அழியும் நிலை வந்தால், பொட்டானிக்கல் சர்வேயில் சேகரித்து வைத்திருக்கிற விதையை வைத்து மீண்டும் அந்தச் செடியை வளர்த்துவிடலாம் அல்லவா?
/

\
அவர் சேகரித்துத் தந்த செடிகளும் விதைகளும் மாதிரிகளும் இன்றைக்கும் ஜம்மு காஷ்மீரில் ஓர் இடத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த இடத்தின் பெயர் என்ன தெரியுமா? ஜானகி அம்மாள் தாவரகம்.
/

\
பத்தொன்பது குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். பெண்கள் படிக்கமுடியாத காலத்தில் படித்தார். அதுவும் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்தார். அமெரிக்காவிற்கே சென்று படித்தார். இந்தியாவின் முதல் பெண் தாவரவியலாளர் ஆனார். பல அவமானங்களைத் தாண்டி, ஏழைகளுக்கும் சர்க்கரை கிடைப்பதற்கு உழைத்தார். இந்தியச் செடிகொடிகளைக் காப்பாற்றினார். இறுதிவரை இயற்கையைப் பாதுகாக்கப் போராடினார்.
/
2 reviews
August 14, 2022
கரும்புப் பெண்மணி

ஒரு வாழ்க்கை வரலாற்றை எளிதாகவும், விரைவாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடியும் என்பதற்கு இப்புத்தகம் சாட்சி..

ஆசிரியர்களும் படித்து, குழந்தைகள் மற்றும் மாணவர்களிடத்தில் சேர்க்க வேண்டிய அருமையான புத்தகம்.....
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.