எந்தவொரு நூலாசிரியனும் தன் படைப்புகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டான். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. 'காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு' அல்லவா?
இந்நூலில் நான்கு கட்டுரைகளும், நான்கு சிறுகதைகளும் உள்ளன.
இவற்றின் தரம் குறித்து நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. இவை அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் வாசிப்பாளருக்குப் பயன்படுபவை என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
வாசியுங்கள். விரும்பினால் இவை குறித்த விமர்சனங்களையும் பதிவு செய்யுங்கள்.