பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா
2022-ம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக கிடைத்தக் கடைசி புத்தகம். அவர்களுக்கு நன்றி.
ஆனந்த தாண்டவம் திரைப்படம் பார்த்த நான் அதான் title card யில் சுஜாதாவின் புகைப்படம் பார்த்தப்போதே இப்புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ரகுபதி வேலை தேடும் இளைஞன்,அவனிடம் இருந்து கதை ஆரம்பம். பாபநாசத்தில் வேலை செய்யும் அப்பா, அவரின் உயர் அதிகாரியின் மகள் மதுமிதா. சுஜாதாவின் வருணனையில் அவள் அழகோ அழகு. அவளின் குறும்பும், வெகுளி பேச்சு ரகுவை காதல் வயப்பட வைக்கும். அவளின் பெற்றோர்களும் நிச்சயம் என்ற ஒரு நிகழ்ச்சி போல் சிறியதாக ஏற்பாடு செய்து, அதையும் நடத்தி முடித்து அவனை சென்னை அனுப்புவர். காதலில் ஒரு பிரிவு மென்மேலும் காதலை வளர்க்கும் உண்மையான காதல் உள்ளவர்களுக்கு. அதே போல் ரகுவும் அதீதக் காதல் அடைந்தான். அவளின் கடிதத்தை கூட அவன் வரி மாறாமல் ஒப்பிக்கும் வண்ணம் இருந்தது. மதுவின் அப்பாவின் தகவலின் பேரில் அவன் மீண்டும் பாபநாசம் வரும் போது அனைத்தும் நாசமாகத்தான் போனது. ரகுவின் அப்பா அடிக்கடி கூறுவார். இது வில்லன் இல்லா காதல் கதை. அத்தனை சுவரஷ்யம் இல்லை என்று. ஆனால் சுஜாதா அவர்கள் ஆரம்பித்தார். வந்தான் ஒரு அமெரிக்க மாப்பிள்ளை. அமெரிக்க மோகம் என்றாலே சொல்லவா வேண்டும். மதுவின் பெற்றோர் வாக்கு தவறி ராதாவிற்கு (அமெரிக்கன்) மதுவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்தது. ரகு கதிக் கலங்கிப் போனான். மதுவின் அப்பா அம்மா ராதா என அனைவரிடமும் வாக்குவாதம். சொன்ன சொல் தவறிய மதுவின் அப்பா நியாமான பேசுவதாக நினைத்து அநியாயமாக ரகுவை ஏமாற்றி விட்டார். ரகு காதல் போனால் சாதல் என்று ஆனான். அவனின் அப்பா அவனை மீட்டெடுத்து அவனின் வளர்ச்சிகாக அமெரிக்கா அனுப்பினார். மதுவும் ராதாவை மணம் செய்துக் கொண்டு அமெரிக்கா சென்றாள். ரகு படிப்பில் இன்னல்களை சந்தித்தான்.
மேரி என்ற ஒரு கதப்பாத்திரம் வரும் போது நான் பயந்தே விட்டேன். இவள் தான் கதாநாயகியா என்று.
பிறகு அவன் மதுவை மீண்டும் பார்த்தான்.நண்பர்கள் போல் பழினான். மீண்டும் ex உடன் நட்பாக பழகினாலும் அது mental peace யை பாதிக்கும். மது ரகுவிற்கு அவனின் வருங்கால பொன்வசந்தத்தை அறிமுகம் செய்தாள். இது தான் அவள் செய்த உருப்படியான விஷயம். சுஜாதா கூறியது, ரத்னா மது விட அழகு இல்லை என்றாலும் அவள் அறிவாளி. அடிக்கடி சில சில இடங்களில் வரும் பெண் வருணனை எனக்கு பிடிக்கவில்லை. ராதாவின் குணங்கள் செயல்கள்மதுவை சின்னாபின்னம் ஆக்கியது. ரத்னா ரகுவை புரிந்துகொள்ளுதல் மிகவும் நன்றாக இருந்தது. Understanding first, love next என்பது போல இருந்தது.
இந்த பிரபஞ்ச ஏற்கனவே நடந்த காட்சிகளை மீண்டும் நடத்தி பார்க்க ஆசைபடும் போல. இறுதியில் ரகு, ரத்னா,மது, ராதா,இவர்களுக்கு என்ன ஆகும் என்பது கதை.
திரைப்படத்தில் நாவலில் இருப்பது போன்று
இல்லாமல் சிறு சிறு மாற்றங்கள் இருக்கும்.
Minor character கள் ஜெயந்தியின் திருமணம் எனக்கு திரைப்படத்தில் பிடித்து இருந்தது. மேரி என்ற பெண் படத்தில் முக்கியமானவள் இல்லை. அதற்கு பதில் ஒரு நண்பன் வருவான், நாவலில் முதல் பாகத்தில் கலை என்ற ஒரு நண்பன் இருப்பான். அவனும் சில சம்பவத்திற்கு பிறகு கதையில் இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சியே. மது செய்த காதல் கத்தரிகாய் எல்லாம் பெற்றோரின் வசனம் என்று ரகுவிற்கு இறுதி வரை புரிந்தாத இல்லையா என்று தெரியவில்லை.Rom com fictional பிரியை ஆனா நான் நீண்ட நாட்கள் காதல் men's pov என்பதை பற்றி படிக்க வேண்டும் எழுத வேண்டும் நினைத்தேன். ரகு சரியான காதலன். ரத்னாவின் mature பேச்சில் நான் அவளின் ரசிகை. ஒரு இடத்தில் ரத்னா ரகுவை பார்த்து, உங்க காதலை நான் காதலிக்கிறேன் என்பாள். அதே தான் ரகு நானும் சொல்லுகிறேன்.நான் படித்த காதல் கதையில் பிடித்துப் போன காதல் கதையில் இதுவும் ஒன்று.
நன்றி.
சுஜாதா. 💜