சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. மாறுபட்ட 360 டிகிரி கோணத்தில் இந்தச் சம காலத்தைச் சுழற்றிப் பார்க்கும் இந்தத் தொகுப்பு, முன்முடிவுகளோடு விஷயங்களை அணுகாமல் புரிந்துகொள்ள விழைகிறது.
கட்டுரைகள் என்றாலே இப்படித்தான் அமையவேண்டும் என்கிற விதிகளை உடைத்து மனிதர்களது வாழ்க்கைகளின் வழியாகப் பெரும் அரசியல் திரட்சிகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
அனுபவங்களை முன்னிறுத்தும் இக்கட்டுரைகள் வாசிப்பு இன்பத்தை மட்டுமல்லாமல், புதிய தெறிப்புகளையும் வாசிப்பவர்களுக்கு வழங்கும் விதத்தில் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன.
Touches various aspects on socioeconomic happenings on Tamil nadu. Interesting flow. Somehow i felt the flow of fiction in his articles too. Thought provoking. Must read.
பலதளங்களில் ஆழமான சலிப்பூட்டாத கட்டுரைகள். நம் அன்றாட வாழ்வில் ஆழமாய் காணத்தவறும் விஷயங்கள் காணும் பொழுது ஆச்சர்யமாய் இருக்கிறது. நாம் இத்தனை விஷயங்களை காணவில்லையா என்று தோன்றுகிறது.
இந்த தலைமுறையைச் சேர்ந்த நாம் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். நடுநிலையான பார்வையில் எழுதி இருக்கிறார். படித்தவுடன் அதைப்பற்றி சிந்திப்பதற்கான வாய்ப்பை தருகிறார்.
மனிதன் எப்பேர்ப்பட்ட மிருகம் என்பதை இவ்வளவு எளிய நடையில் சொல்லி இருக்கிறார். உள்ளூர் அகதிகளின் மீதான பார்வையை விசாலமாக்கி விட்டார் உயர்திரு சரவணன் சந்திரன் ஐயா அவர்கள்.
உலகம் புதிதாய் முயல்பவர்களை எப்படி எளிதாய் தூக்கி எறிகிறது அதை அவர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை சாண்டியாகு மூலம் நம்மிடம் பகிர்ந்துவிட்டு சென்றுவிடுகிறார் ஆசிரியர் ...
ஏன் 'தமிழக' விவசாயிகள் டெல்லி சென்று போராடுகிறார்கள் ? மணல் கொள்ளைக்கு தீர்வு இன்னும் ஏன் எட்டவில்லை ?
இன்னும் மேலே இருக்கிறது ....
This entire review has been hidden because of spoilers.