தமிழ் இலக்கியங்கள் காட்டும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்கள் எப்படித் தமிர்களுடையவை? ராக்கெட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் என்ன சம்பந்தம்? – என்பவை உள்ளிட்ட தமிழ் மக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 20 வரலாற்று ஆய்வுகள் இந்நூலில் உள்ளன. வரலாறு என்றுநாம் எதையெல்லாம் நம்புகிறோமோ அதையெல்லாம் மீள் ஆய்வுக்கு செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது.
விறுவிறுப்பான நடையில் சில முக்கியமான, சுவாரஸ்யிமான தகவல்களை மன்னர் மன்னன் பகிர்ந்துள்ளார்
டி.என்.ஏ வடிவத்தை உண்மையின் கண்டுபிடித்தது ரோசலிண்ட் பிராங்கிளின் என்பவரை உலகம் அறியாததை பற்றி ; டெஸ்லாவின் வாழ்நாள் சாதனை கண்டுபிடிப்புகள் பற்றி ; குமரிக்கண்டத்திற்கும், லெமுரியா கண்டத்திற்கும் உன்ன வேறுபாடு பற்றி ;
என்று வரலாற்றின் முக்க்கியமான நிகழ்வுகளை பற்றியும், மனிதர்களை பற்றியும் எழுதியுள்ளார். அவசியம் படிக்கவும்
என்னதொரு சுவையான சிறந்த நூலிது! இந்த நூல் என்னை அப்படி வியக்க வைத்துவிட்டது.
இரா. மன்னர் மன்னனை பற்றி உங்கள் அனைவருக்கும் இப்பொது நன்றாக தெரிந்திருக்கும். அடிக்கடி நான் இவரின் புகழ் பாடுவேன். இவரின் சமீபத்திய நூல், இராஜராஜ சோழன் இதுவரை காணாத புகழிற்கும் வெற்றிக்கும் அவரை எடுத்துச் சென்றுள்ளது.
ஆனால் வரலாற்றில் சில திருத்தங்கள் ஆசிரியரின் மூன்றாவது படைப்பு. நான்காவது பதிப்பாக போன வருடம் வெளியாகியது இந்நூல்.
தலைப்பிற்கேற்றாற் போல வரலாற்று விடயங்களை அத்தியாயம் அத்தியாயமாக ஆராய்கிறது இந்நூல். நாம் அறிந்திராத அல்லது நாம் பிழையாக அறிந்திருந்த விடயங்களை அலசி உண்மை வரலாற்றை சிறப்பாக நமக்குத் தருகிறார் ஆசிரியர்.
முதல் அத்தியாயமே என்னை வியக்க வைத்து விட்டது. உலகை தலைகீழாக மாற்றிய கண்டுபிடிப்பு என்ற அந்த அத்தியாயம் பெண்கள் மீதே நான் வைத்திருந்த மதிப்பை இன்னும் அதிகரிக்க வைத்தது. அந்த அத்தியாயம் போதும் இந்நூலின் சிறப்பைக் கூற! தாய் வழியாக இருந்த நாகரிகங்கள் எவ்வாறு தந்தை வழி சமூகமாக மாறியது என்ற அந்த விளக்கமும் அதற்கான காரணமும் அபாரமான ஆய்வு. உண்மையில் தலைப்பைப் போலவே உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு அது தான்!
பெண்ணின் பண்புகள், கற்பு, உடன்கட்டை ஏறுதல், சிகப்பழகு பற்றிய கலாச்சாரப் பார்வை போன்றவற்றின் வரலாறு அதி சிறப்பாக இருக்கும். உலகப் புகழ் பெற்ற சிலரின் வரலாறையும் நாம் ஆராய்கிறோம். கிளியோபட்ரா, டெஸ்லா, திப்பு சுல்தான், ஹைதர் அலி, கஜினி முகமது போன்றோர் பற்றி எழுதியமை சிறப்பு.
உலக விடயங்களையும் உலக நபர்களையும் கலந்துரையாடிய நூல் இறுதிப் பகுதிகளில் இந்தியாவை நோக்கி வரலாற்று ரீதியாக திரும்புகிறது. ராக்கெட் தொழில்நுட்பம், 'அரபு எண்கள்', குமரிக்கண்டம், குற்றப் பரம்பரை பற்றிய ஆய்வுகள் சுவாரசியமானவை. உணவுப் பதார்த்தங்கள் பற்றிய ஆய்வும் நம் கண்களைத் திறப்பவை.
கடைசி அத்தியாயமாக இந்தியாவின் தேசியக் கவி யாரென்று விவாதிக்கப்படுகிறது. உண்மையில் யாரென்று உங்களுக்குத் தெரியும் தானே!
இது தொடக்கம் முதல் முடிவு வரை பக்கங்களை புரட்ட வைக்கும் சுவாரசியமான ஆய்வு நூல். இதில் நீங்கள் கற்றுக் கொள்ளப் போகும் விடயங்கள் உங்கள் மனதை விரிவுபடுத்தவும் சீரமைக்கவும் கட்டாயம் உதவும்.
நான் எல்லோர்க்கும் கட்டாயம் பரிந்துரைக்கும் நூலாக இது அமைகிறது.
உமது எழுத்தின் திறமைக்கும் ஆய்விற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் அவர்களே!
இத்தனை நாள் நினைத்திருந்த வரலாற்று தகவல் மீது கல் விசுவையாக இத்தகவல் உள்ளன. சமுதாயம் பெண்ணாதிக்கம் வழியிலிருந்து ஆணாதிக்கமாக மாறிய வரலாற்று, திப்பு சுல்தானின் ராக்கெட் கண்டுபிடிப்பு, பெண்ணின் பண்புகளும் அதன் பின்ன உள்ள ஆணாதிக்கம் ஊடுறுவலும்,
இந்த புத்தகம் எல்லோரின் பார்வையிலும் கட்டாயம் மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்தும்
Most controversial thoughts and need to have a clear understanding of history to fully grab the content. Short and crisp historical information with scientific facts. Worth giving time to read to get amazed.