ஈஸ்வரியின் கட்டிப் போட்டு காதல் செய்கிறான்...பாகம் - 1
இது இரு குடும்பங்களின் பகை தீர்க்கும் காதல் காவியம்.
இந்தக் கதையில் மீனாட்சி என்பவர் நாயகியான சிற்பியின் அத்தை. மீனு ஓடிப்போய் விட்டார் என்று ஒரு குடும்பம் சொல்ல, கொலை பண்ணி புதைத்து விட்டார்கள் என்று மற்ரொரு குடும்பம் சொல்ல, எது நிஜம் என்று ஆராய வருகிறாள் இவள்.
முன்னுரை: கட்டிப் போட்ட காதல் முட்டுப் போடும் என்றால் கட்டிப் போட்ட மோதல் விட்டுப் போகும் அன்றோ…! கட்டிப் போட்ட காதல் மெட்டுப் பாடும் என்றால் கட்டிப் போட்ட கூதல் தொட்டுத் தேடும் அன்றோ…!
ஆயிரம் காலத்துப் பயிர் வளர்க்க ஆத்மார்த்த பந்தங்கள் நினைத்தாலும், போகிற காலத்துப் பகை முடிக்க போக்கற்ற சொந்தங்கள் வதைத்