Thi . Janakiraman (also known as Thi Jaa, or T. Janakiraman ) is one of the major figures of 20th century Tamil fiction. He worked as a civil servant. His writing included accounts of his travels in Japan and the Crimea.
His best-known novel is Mogamul (Thorn of Desire), in which feminine emotions are explored with a story spun around delicate feelings. His short stories such as "Langdadevi" (a lame horse) and "Mulmudi" (Crown of Thorns) follow the same style. Thi Jaa wrote about one hundred short stories and a dozen novels. Two of his novels, Amma Vandhaal and Marappasu, were translated into English as "Sins of Appu's Mother" and "Wooden Cow" respectively. In 1979, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his short story collection Sakthi Vaidhiyam. Some of his other notable works are Malar Manjam, Uyirthen and Sembaruthi.
எழுத்தாளர் தி. ஜானகிராமன் அவர்களின் படைப்புகளை வாசிக்கும் ஆசை ஒருபுறம் வீற்றிருந்த சமயத்தில், இவ்வருட என் வாசிப்பு இலக்கில் ஒரு பயண இலக்கிய நூலும் இருந்ததால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல அமைந்தது தி.ஜா அவர்களின் ஜப்பான் பயண அனுபவங்கள் நிறைந்த இந்த உதயசூரியன் புத்தகம். மேலும் எனக்கு இப்புத்தகத்தைத் தேர்வு செய்ய ஜப்பான் என்ற ஒரு வார்த்தையே போதுமானதாக இருந்தது.
ஜப்பான் 1970 ஆம் ஆண்டு வரை ஒரு வளரும் நாடாகவே இருந்தது. 1960களில் தி. ஜா. தன் முதல் ஜப்பான் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். உதயமாகும் சூரியனானது தங்கமாக ஜொலித்துக் கொண்டிருந்தாலும் அதன் அதன் இளங்கதிர்கள் ஒரு விதப் பணிவுடன் பரவுவது மனதிற்குக் குளிர்ச்சியளிக்கும். தி.ஜா. பயணம் கொண்ட அக்கால கட்டத்தில் ஜப்பான் தொழில்நுட்பத்திலும் வணிகத்திலும் வளர்ச்சியை எட்டிக் கொண்டிருந்தாலும் தன் வேர்களை மறக்காத ஜப்பான் மக்களின் விருந்தோம்பலின் குளிர்ச்சியை உணர்ந்த காரணத்தினால் இப்பயண நூலின் தலைப்பை உதயசூரியன் என்று வைத்திருக்கிறாரோ என்ற எண்ணம் தோன்றியது எனக்குள்.
நான் வைத்திருக்கும் உலக சுற்றுப் பயணப் பட்டியலில் இப்போதும் முதல் இடத்தில் இருக்கிறது ஜப்பான். அதற்கு
முதல் காரணம் இன்றும் மேற்கத்திய எண்ணங்களினால் அதிகம் பாதிப்படையாமல், அர்த்தமுள்ள பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் தன் வாழ்க்கை முறையாக ஜப்பானியர்கள் கொண்டிருப்பது. தி.ஜா. சில ஜப்பானிய வீடுகளை அவர் பிரவேசித்த சில அனுபவங்களைச் சுவையுடன் பகிர்ந்திருப்பார். அந்த அனுபவங்கள் எனக்குக் கிடைத்த ஜப்பான் சம்பந்தப்பட்ட முதல் அனுபவங்கள் நினைவுகள் என் மனதில் நிழலாடியது. 2016 ஆம் ஆண்டு ஜெர்மனி வந்தவுடன் முதலில் சுற்றிப் பார்க்கப் போன இடம் ஒரு ஜப்பானியப் பூங்கா. ஜப்பானில் இருப்பது போல், சுற்றிலும் பசுமையான போன்சாய் மரங்களால் அலங்கரிக்கப்பட்டுக் கூம்பு கிரீடம் கொண்டு காட்சியளித்தது அங்கிருந்த குடில்கள். ஒரு குடிலிலிருந்து இருந்து அடுத்த குடிலுக்குச் செல்லும் வழியில் ஒரு சிறு ஓடை அந்த ஓடையினுள் நீந்திக் கொண்டிருந்த கோய் மீன்கள்( Koi fishes) ஓடையின் இரு பக்கங்களிலும் அமைந்திருந்த கற்படுக்கைகள், அவற்றைக் கவனமாகக் கடந்த கால்கள் என அந்த நினைவுகளானது என் கண் முன்னே விரிந்தது!
ஜப்பானிய மக்கள் பிற மக்களிடம் கண்ணியமாகப் பழகும் முறை, அவர்களின் உழைக்கும் பண்பு, அறிவின் தேடல், அவர்களின் என்றும் குன்றாத அழகுணர்ச்சி பற்றி தி.ஜா. பகிர்ந்த செய்திகள் ஜப்பானியரான எனது முதுகலை ஆய்வறிக்கை மேற்பார்வையாளரை எனக்கு நினைவூட்டியது. என் வாழ்வில் நான் பெரிதும் மதிக்கும் பெண்களில் ஒருவர். தி.ஜா. பல ஜப்பானிய மக்களிடம் கண்ட நற்பண்புகளை, நான் அந்த மேற்பார்வையாளரிடம் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
தி. ஜா அவர்கள் மேற்கொண்ட இந்த ஜப்பான் பயணம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன். ஆனாலும் அவர் பகிர்ந்து இருக்கும் ஜப்பானின் அழகு அதன் கலாச்சாரம் ஜப்பானிய மக்களின் பண்புகள் இன்றும் மாறாமல் இருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பெரிய மாற்றம் ஏற்படவும் வாய்ப்பில்லை என்று நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. அதனால் தாமதமாகவே ஜப்பானுக்குச் செல்லலாம் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன் ( Insert காசு இல்ல ப்பா template)
அனுபவமிக்க எழுத்தாளராக இருந்தாலும் அந்தக் கர்வம் சிறிதும் இல்லாமல், தான் முதன் முதலாகக் கொண்ட வியப்புகள் நிறைந்த ஜப்பான் பயண அனுபவங்களை வெகுளியாகப் பகிர்ந்திருப்பது அழகு!
This is a travelogue written by the famous Tamil writer Thi Janakirajan about his visit to Japan. And it was written originally in the year 1965.
So there is nothing new if you read it as a reader of this generation. Almost everything is known or outdated. And yet, Thi. Ja. is enjoyable especially when he delves into the comparative analysis. Anything evokes a comparison in his mind - be it the work culture of Japan, Bushido, Japanese Architecture/Gardening, Japanese Theatre, Technological Advancement, Religious Practices and even the ordinary happenings surrounding a bus conductor or a shop keeper. He compares the experience with the Indian counterparts. It is here Thi. Jaa. seems to be shining. Sadly, the comparisons and specially the drawbacks that he found in the Indian situation remain almost the same even today after 7o years.
I have a strange fascination for Japan. And so I was curious to know the observations of the Tamil Writer Thi. Ja. on Japan. I can say I was not disappointed.
🇯🇵 பயண கட்டுரை என்ற பெயரில் ஒரு நாவலை படைத்துள்ளார் என்றால் மிகையாகாது. ஜப்பானில் தி.ஜா அனுபவித்து வாழ்ந்த வாழ்க்கையை எழுதி அதை படித்த என்னையும் அனுபவிக்க வைத்துள்ளார்.
🚅 பல இடங்கள் இன்றைய சூழ்நிலைக்கு கூட பொருத்தமாக இருக்கிறது. 1965 இல் உள்ள ஜப்பானை படிக்க படிக்க வியக்கிறேன். பத்து வருடம் முற்போக்கான நாடு இல்லை 50 வருடம் வளர்ச்சியில் முற்போக்கான நாடு. இன்னும் எத்தனை வருடம் கழித்து படித்தாலும் இதே எண்ணம் வராமல் இருப்பதே இந்திய வளர்ச்சிக்கு ஆதாரம் நல்லதும் கூட.
⛩️ 1965 லே புல்லட் டிரெயின், போன்சாய் மரம், டிஷ்யூ பேப்பர், போதிதர்மர், பச்சிங்கோ, கேபிள் கார் என்ற வார்த்தைகளை கேட்கவே ஆச்சரியம். " 1965 லேயே ஜப்பான் அப்படி இருக்கா" என்ற எண்ணம் புத்தகம் படிக்கும் போது ஓடிக்கொண்டே இருந்தது.
🎋 புத்தகமே படிக்க இதமாக இருந்தது அங்கு பார்த்ததை அனுபவித்ததை மட்டும் தான் எழுத்தில் கொண்டு வர முடியுமோ என்று தோன்றியது. எழுத்தில் எந்த பரபரப்பும் இல்லை. படிக்கும் நம் எண்ணங்களிலும் எந்த பரபரப்பும் இல்லாத நிலையான ஓட்டம்.
👘 ஜப்பானிய படங்களில் வரும் ஜப்பானை விட ஜப்பானிய புத்தகங்களில் வரும் ஜப்பானை விட தி.ஜாவின் ஜப்பான் அழகாக இருந்தது. (எத்தனை பார்த்தாய், படித்தாய் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை)
🍜 இந்தப் புத்தகம் எழுதி வெளியான சமயத்தில் புத்தகத்தில் கூறியது போல் ஜப்பான் இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வதற்கோ நம்புவதற்கோ மக்கள் தயாராக இல்லை .
🇦🇺 ஜெயமோகனின் "புல்வெளி தேசம் - ஆஸ்திரேலியா பயண கட்டுரை". அதைப் படித்த எனக்கு ஆஸ்திரேலியா மனதிற்கு மிகவும் நெருக்கமானது. சுற்றுலா தலங்கள் மற்றும் அவரின் அனுபவங்கள் பற்றியது.
🇦🇸 எஸ். ராவின் "நிலம் கேட்டது கடல் சொன்னது ஜப்பான் மற்றும் அமெரிக்கா பயணம் கட்டுரை". ஒரு இடத்தின் வரலாறு மற்றும் அந்த இடத்திற்குச் சென்ற அனுபவம் பற்றி எஸ்.ரா எழுதி இருப்பார். இந்த புத்தகத்தின் மூலமாகவே எனக்கு உதயசூரியன் அறிமுகமானது.
ஏ கே செட்டியாரின் படைப்புகள் நான் படித்ததில்லை.
🎌 தி.ஜாவின் உதயசூரியன் ஜப்பானில் மிக முக்கிய சுற்றுலா இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல். வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல். அன்றாட மக்களுடைய அன்றாட வாழ்க்கைக்குள் நுழைந்த அனுபவத்தை எழுதியுள்ளார். இதுவே நான் படித்தவரையில் உள்ள பயண கட்டுரையில் இவர் எழுத்தில் உள்ள ஒரு தனித்துவம்.
This is a travelogue by the author based on his travel to Japan in the early 1960s. Mostly the book cover about how the Japanese were very cultured, quiet, dedicated and hard working people and also provide in brief about the various wonders (natural & man made) in the country. It may seem inappropriate now to read a travelogue since we have internet, but this is a good read to take you back in time and read the experiences of the author.