சிறுபத்திரிகையை இயக்கமாக முன்னெடுத்த மிக முக்கியமான இலக்கிய நிகழ்வு. இதில் எழுதி உருவான இளைஞர்களில் பலரும் தமிழின் இலக்கியம் ஓவியம் நாடகம் பதிப்பு என பல்வேறு துறைகளில் தவிர்க்கமுடியாத ஆளுமையாகினர் என்பது வரலாறு.
வெகுஜன கலாச்சாரத்திற்கு எதிரான கலைக் குரல் கலகக் குரல் இது என்பதற்கு இதன் பக்கங்களே சாட்சி.
கசடதபற இதழ்கள் உதவி 1 முதல் 12 வரை – எழுத்தாளர் சா. கந்தசாமியின் பெளண்ட் வால்யூம் (சந்தியா நடராஜன் கொடுத்தது) 13, 20 முதல் (31 தவிர) 32 வரை - 80களில் நண்பன் ஷங்கர் ராமன் எனக்குக் கொடுத்தவற்றை பைண்ட் செய்து வைத்திருந்ததை நான் ஜகன்னாதனுக்குக் கொடுத்து, 29 வருடங்கள் கழித்து திரும்பக் கிடைத்ததிலிருந்து 14, 17-18, 31, (33) – மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவகுமார் அளித்த தொகுப்பிலிருந்து (17, 18 முகப்பும் அதன் பின்புறமும் இல்லாத இதழ்) 15 ஒளிப்பதிவாளர் – இயக்குநர் (சா) கந்தசாமி சரவணன் ஸ்கேன் செய்து அனுப்பிவைத்தது 16 உமா மகேஸ்வரி - தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை அறிவியல் கல்லூரி, கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு மாவட்டம், கேரளம் 17 கவிஞர் கலாப்ரியா ஸ்கேன் செய்து அனுப்பியது 34 முதல் 41 வரை – கவிஞர் சத்யன் தபாலில் அனுப்பிவைத்தவை 42, (எண் இல்லாத (43) மற்றும் 17, 18 இரண்டும் சேர்ந்த இதழின் ஆர். சிவகுமாரிடம் இல்லாத சில பக்கங்கள்) மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் ஜி மணிகண்டன், பொள்ளாச்சி நசனின் தமிழம்.காமிலிருந்து எப்போதோ டவுன்லோட் செய்து வைத்திருந்தவை 19 ஆவது இதழ் வெளியிடப்படவே இல்லை (18, 19 என இருந்திருக்கவேண்டியதைத் தவறாக 17, 18 என அச்சிட்டிருக்கிறார்கள்) அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி விமலாதித்த மாமல்லன்