கூகுள், ஃபேஸ்புக் & ட்விட்டர் : இணையத்தை ஆளும் மூன்று நிறுவனங்களின் வெற்றிக்கதைகள்: Google, Facebook & Twitter: Success Stories of Three Internet Giants (Bundle Edition)
இணையத்தை ஆளும் மூன்று நிறுவனங்களின் விறுவிறுப்பான வெற்றிக்கதைகள்
இன்றைக்கு நாம் எதைத் தேடுவதென்றாலும் முதலில் கூகுளுக்குதான் ஓடுகிறோம். எங்கேனும் செல்வதென்றால் கூகுள் மேப்ஸிடம் வழி கேட்கிறோம். நம்முடைய புகைப்படங்கள் அனைத்தும் கூகுள் ஃபோட்டோஸில் அமர்ந்திருக்கின்றன. திரைப்படம், தொலைக்காட்சி, கல்வி என அனைத்துக்கும் யூட்யூபைச் சார்ந்திருக்கிறோம். ஈமெயில் என்றாலே ஜிமெயில்தான் என்றாகிவிட்டது... வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் ஒட்டுமொத்த உலகத்தையும் இப்படி வளைத்துப்போட்டதில்லை.
இன்றைக்கு நம்முடைய நிஜ நண்பர்களைவிட ஃபேஸ்புக் நண்பர்கள்மீதுதான் அதிக அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறோம். எதைச் சாப்பிட்டாலும், எதைச் சாதித்தாலĬ