@DOBImort வாழ்க்கை எதிர்வு கூற முடியாதது. ஒரு பூனையை நண்பனாக்கிக்கொள்ள அதன் பின்னாலேயே ஓடினேன் ஓடினேன் ஓடிக்கொண்டே இருந்தேன். கடைசியில் இப்படி தோளில் இருந்து வரும்படி ஆகி விட்டது. காலை உடைத்துக்கொண்டதாய் ஆக்டிங் செய்து எல்லா சேவைகளையும் பெறுவதும் கூட ஜாலியாக தான் இருக்கிறது# நான்_நலமாய்_இருக்கிறேன்_டோன்ட் ஒர்ரி #புது_அண்ணா #மம்மி_ஐ_லவ் _யூPhotocredits : @haikudiaries <3@Suzee புது அண்ணா? இவன் அவன் தானே? @DV :@Sarithraofficial :o கெட் வெல் சூன் மருமகனே. மம்மியை எனக்கு கால் பண்ண சொல் :/
‘ப்ரித்வி’-யில் தொடங்கும் கதை ‘மைரா’-வில் நிறைவு பெறுகின்றது. ஒரு சந்தேகப் பார்வை ஈர்ப்பாக உருமாறியவனின் காதல் நேசம் எப்படி உறவுகளின்/நட்புகள் நேசமாக தொடர்கின்றது என ஒரு குதூகலமான எழுத்தில் உணரலாம்.
நீண்ட நாட்களுக்கு பின் சிரித்தபடி வாசித்த புத்தகம் இது. முக்கிய கதாபாத்திரங்களை காட்டிலும் ‘குவீன் பாட்டி, டோபி, துருவ்’ நம்மை மிக மிக ரசிக்க வைத்தவர்கள்.
குடும்பம்/காதல் கதைகளுக்கென சில மாதிரிகளை பின்பற்றும் பல எழுத்துக்களுக்கு மத்தியில் "Living trends" எதார்த்த கதைகளை உஷாந்தி அவர்களின் எழுத்தில் தான் அதிகம் உணர்ந்திருக்கிறேன். ஒரு vlogger-ன் செயல்கள், பயன்படுத்தும் கருவிகள், அவர்களின் பார்வை, அவர்களின் உழைப்பு என விவரித்ததிற்கு மத்தியில் நம்மைப்போன்றவர்களின் ஒரு ‘click’ என்ன செய்யும் என்றும் புரிந்து கொள்ள இலகுவாக இருந்தது. என்னதான் facebook-ன் அத்தனை ‘Visual content’ social media-வில் அனைவரும் சுற்றினாலும். ‘Twitter’-ல் உலாவும் ‘Text content’-ற்கான மதிப்பு அதிகம் என்ற உண்மையும் ஒளிந்திருக்கிறது.
'Blogs/Channels are not run for free' - சாமானியர்கள் இன்றளவும் புரிந்துக் கொள்ளாத ஒன்று.
பல இன்னல்கள் கதைகளில் சொல்லப்பட்டிருந்தாலும் அதற்கான தீர்வை சொல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் திடத்தை அதிகரித்து முடித்த விதம் அழகு.
'ஹைக்கூ' போன்று கதையும் சிறிதாக இருக்கும் என நினைத்தேன்.ஆனால், சிறிது நீண்ட கதைதான், வார்த்தைக் கோர்வையில் பல இடர்களை வாசிப்பில் உணர்ந்தாலும் சலிப்பை ஏற்படுத்தாமல் எழுத்துநடை நம்மை பிடித்து வைக்கின்றது.