முத்துப்பட்டன் கதை என்பது தமிழ் நாட்டுப்புற வழக்கில் இடம்பெறும் கதை ஆகும். இக் கதை 18 ஆம் நூற்றாண்டில் முத்துப்பட்டன் என்பவன் சாதி மீறித் திருமணம் செய்ததையும், அவன் மனைவியின் உறவினர்களுக்கு வரும் இடையூறுகளுக்கு எதிர்த்துப் போராடியதையும், அந்தப் போராட்டத்தில் உயிர் நீத்ததையும் பற்றியுக் கூறுகிறது.
நா. வானமாமலை (1917 - 1980) தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். இவரது 22 நூல்கள் 2008-09 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது மரபுரிமையாளர்களுக்கு பரிவுத்தொகையாக 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது
அந்தக் காலத்தில் சமுதாய கட்டமைப்பு சாதியுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை இப்புத்தகம் காட்டியுள்ளது இருப்பினும் சாதி மறுப்பு கலப்பு திருமணங்களும் நிகழ்ந்து இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நாட்டுப்புற கதையில் பல கிளை கதைகளையும் கூறியுள்ளார். மேலும் முத்துப்பட்டன் தனக்கு கீழ் சாதி சக்கிலி பெண்களாக பொம்மக்கா திம்மக்கா இருவரையும் திருமணம் செய்து அவர்களுடன் வாழ்ந்ததையும் பொறுத்துக் கொள்ள முடியாத சில மேல் சாதிக்காரர்கள் கதையை எவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஆசிரியர் விரிவான சான்றுகளுடன் விளக்கியுள்ளார்