ஈழப் போராட்டம் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் 50 ஆண்களுக்கு மேலாக நடந்த விடுதலைப் போராட்டம் முற்றாக இன்று அழிக்கப்பட்டு விட்டது அதற்கான காரணங்களை இந்த நூல் நமக்கு எந்த வித சார்பும் இல்லாமல் நடுநிலையில் நின்று விளக்குகிறது. சி புஷ்ப ராஜா ஈழப் போராட்டத்தில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து செயல்பட்ட ஒரு நபர் ஆவார். சிங்களவர்களின் ஒடுக்கு முறைக்கு எதிராக போராட புறப்பட்டவர்கள் ஆரம்பத்தில் தந்தை செல்வாவின் வழியில் அறவழியில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராடினார்கள் பின்பு வந்த இளைஞர்கள் வன்முறையின் பக்கம் தங்கள் போராட்டத்தை திருப்பிக் கொண்டார்கள். இலங்கை அரசின் கணக்குப்படியே அப்படி போராட புறப்பட்டவர்களின் குழுக்கள் மொத்தம் 32 என்று கணக்கு காட்டப்படுகிறது இந்த மொத்த போராட்டக் குழுக்களும் தங்களுக்குள்ளாகவே நீ பெரியவனா நான் பெரியவனா என்ற சண்டையை போட்டுக்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் கொலை செய்து கொண்டும் வெட்டிக் கொண்டும் கொத்திக் கொண்டும் மடிந்தார்கள். போராடப் புறப்பட்ட அனைவரும் ஒரே நோக்கத்திற்காக தமிழர்களின் விடுதலைக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் போராட சென்றவர்கள் தங்களுக்குள்ளாகவே அதிகாரத்தாலும் கொலை வெறி பிடித்து மிருகத்தனத்தாலும் தங்களை தாங்களே சக போராளிகளையே கொலை செய்து வீதியில் வீசினார்கள். எதிரிகளால் கொல்லப்பட்ட போராளிகளை விட சக போராளிகளால் கொல்லப்பட்ட போராளிகளை மிக அதிகம் என்கிறார் புஷ்ப ராஜா. எழுச்சி மிகுந்த ஒரு விடுதலைப் போராட்டம் இதைப் போன்ற கொடியர்களால் எளிதாக இன்று அழிக்கப்பட்டது இந்த சக போராளிகளுக்குல் நடந்த கொலைகளுக்கும் இலங்கை புலனாய்வுத் துறைக்கும் இந்தியாவின் ரா அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. யாருக்காக இவர்கள் போராட புறப்பட்டார்களோ அவர்களையே துரோகிகளாகவும் எதிரிகளாகவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்த பிறகு தான் விடுதலைப் போராட்டத்தில் அழிவு ஆரம்பமானது என்று சொல்லலாம். ரெளவ் போன்ற அமைப்புக்கள் ஈபிஆர்எல்எப் அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பு போன்றவர்கள் சக போராளிகளையே சந்தேகத்தின் பெயராலும் இந்தியாவின் கைக்கூலி என்ற பெயராலும் கொன்று குவித்தார்கள். இந்தக் கொடூரமான சக குழுக்களின் அழிப்பு என்பதில் விடுதலைப்புலிகளின் அமைப்பு பெரும் பங்கு கொலைகளை புரிந்து இருக்கிறது குறிப்பாக ஈபிஆர்எல்சி பத்மநாபன் கொல்லப்பட்ட போது தமிழகத்திலும் பாரிய எதிர்ப்பு வெடித்தது மக்கள் விடுதலைப் புலிகளை கைவிட்டு தாங்கள் தங்கள் வேலைகளை கவனிக்க சென்று விட்டார்கள் . அதேபோல் ஈழப் போராட்டத்தையும் ஆரம்பத்தில் இருந்து செயல்பட்ட அமிர்தலிங்கம் போன்ற மூத்த அரசியல்வாதிகளை புலிகள் கொன்றதன் மூலம் அவர்கள் மக்களிடம் இருந்து தங்களை பிரித்துக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும். விடுதலைப்புலிகளால் சக போராளிகள் மீதும் சக போராட்டக் குழுக்கள் மீதும் நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை எந்த மனிதாபிமானம் உள்ள மனிதனும் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன புலிகள் செய்த மிக முக்கியமான தவறுகளில் இதுவும் ஒன்று. புலிகள் அமைப்பு செய்த மிக முக்கியமான இரண்டாவது தவறு இந்தியாவை பகைத்துக் கொண்டது புலிகளை ஆயுதம் கொடுத்தும் பணம் கொடுத்தும் வளர்த்துவிட்ட இந்தியாவையே ஒரு கட்டத்தில் புலிகள் எதிராக்க ஆரம்பித்தார்கள் ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின்பு இந்திய மக்கள் அனைவரும் புலிகளை கிட்டத்தட்ட வெறுத்து ஒதுக்க தொடங்கி இருந்தார்கள். தனது காலடிக்கு கீழே ஒரு நாடு உருவாவதை இந்தியாவின் அனுமதியில்லாமல் எக்காலத்திலும் நடைமுறைப்படுத்த முடியாது என்ற எளிய உண்மை கூட புரியாத இந்த கொலை வெறி பிடித்த புலிகளின் அமைப்பு பல்வேறு தவறுகளை இந்தியாவின் உறவில் செய்து வந்தது . இதன் காரணமாக அது பாரிய விளைவுகளை சந்திக்க நேரிட்டது. அதேபோல் அரசியல் மூலமாகவும் பல நல்ல விளைவுகளும் தமிழ் மக்களுக்கான ஒரு விடிவு காலம் பிறக்கின்ற தருணத்தையும் புலிகள் அவர்களின் கொலை பாதக செயல்களால் பல்வேறு காலகட்டங்களில் தடுத்து இருக்கிறார்கள். எப்படி பல்வேறு போராட்டக் குழுக்கள் தங்களுக்குள்ளவே கொலைகளை செய்து கொண்டு மடிந்தார்களோ அதே போல் விடுத லைப் புலிகளின் அமைப்புக்குள்ளும் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது கருணாவின் பிரிவுதான். பிரதேசவாத கருத்துக்களுடன் கருணா விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்த போது உண்மையிலேயே புலிகள் மிகப்பெரிய சரிவை நோக்கி நகர தொடங்கியிருந்தார்கள் . ஒரு அமைப்புக்குள் இருந்து போராடி கொண்டிருக்கும் ஒருவர் தனக்கு உட்பட்ட பகுதிகளை தன்னிடம் வழங்குமாறு அந்த அமைப்பிடம் கேட்பது என்பது பிரிவினைவாதம் அல்லாமல் வேறல்ல . இதனால் புலிகள் அமைப்பிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அதன் அரசியல் பிரிவு பொறுப்பாளரான தமிழ்ச் செல்வன் சொன்னபோதிலும் உண்மை அவ்வாறாக இருக்கவில்லை புலிகள் உண்மையிலேயே மிகப் பாரியை பின்னடைவிற்கும் அழிவிற்கும் வழி வகுத்ததாக கருணாவின் செயல்பாடு அமைந்தது என்றால் அது மிகையல்ல .இங்கே சி புஷ்ப ராஜா இபிஆர்எல்எஸ் இயங்கினாலும் அவர் அந்த இயக்கத்துக்குள்ளே இருந்த முரண்பாடுகளையும் அவர்கள் செய்த கொலைகளையும் இந்த நூலில் விரிவாக பதிவு செய்து இருக்கிறார் அதேபோல் எந்த ஒரு இயக்கமும் மக்களுக்கு எதிரான செயல்களை செய்யும் போது இவர் கடுமையாக கண்டித்தும் எழுதியிருக்கிறார். இதை வாசிக்கும் ஒரு வாசலை வாசகருக்கு இயற்கையாகவே புஷ்ப ராஜா தன்னை ஒரு கதாநாயகனாக காட்ட விரும்புகிறாரா என்று கேள்வியும் இயல்பாக ஏழத்தான் செய்கிறது ஏனென்றால் புஷ்ப ராஜா இந்த மொத்த நூலிலுமே எங்கேயும் தவறு அல்ல குற்றங்கள் இழைக்கப்பட்டதாக ஒரு இடத்தில் கூட பதிவு செய்யப்படவில்லை ஆனால் உண்மையின் பக்கம் நின்று என்ன நடந்தது என்பதை அரசியல் சார்பும் இயக்கச் சார்பும் இல்லாமல் கிட்டத்தட்ட நேர்மையான வழியிலேயே பதிவு செய்திருக்கிறார் என்பதே இந்த நூலின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது . 2009 முன்பு புஷ்ப ராஜா இறந்துவிட்டார் என்பது பெரிய வருத்தம் தக்க விஷயமாகத்தான் உள்ளது.