புத்தாயிரத்தில் தொடங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறை மீது, அதன் கருதுகோள்கள், சரிநிலைகள், பண்பாடு, பொருளாதாரம் எனப் பல்வேறு வகைகளில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற முடியும். எல்லாப் புதிய மாற்றங்களையும் போலவே இதுவும் கொண்டாட்டங்களுடன் சிக்கல்களையும் சிடுக்குகளையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது. அவற்றில் முதன்மையானதாக வேலை, குடும்பம், சமூகம் எனச் சகல இடங்களிலும் வியாபித்திருக்கும் நிச்சயமற்ற தன்மையையும், அதன் உபவிளைவாகக் கிளர்ந்தெழும் தனிமையையும் குறிப்பிடலாம். திடும்மென முளைத்த இக்கண்ணாடித் தீவுகளுக்குள் குடிபெயர்ந்த நம்மவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நம் நிலம் சார்ந்தவை. அவ்வகையில், மென்பொருள் நிறுவனங்களுக்கு வெளியே இருப்பவர்கள் தங்கள் ஜன்னல்கள் வழியே வேடிக்கைபார்த்து உலவவிட்ட கதைகளை இந்த ‘நட்சத்திரவாசிகள்’ மறுக்கிறார்கள். மனிதன் எத்தனை அதி நவீனமடைந்துவிட்டான் என இந்த நூற்றாண்டு வரைந்துகாட்டும்போதே அவன் உள்ளே எத்தனை பழைமையானவன் என்பதை நோக்கியும் ‘நட்சத்திரவாசிகளின்’ ஒளி சுழல்கிறது.
Natchathiravaasigal or the Residents of Stars is a new novel by Karthik Balasubramanian, that portrays the life of a generation working in Information Technology companies, whose lives are exoticised by those outside the bubble. Like any new change this boom has brought with itself many complexities and confusions, and the insecurity present in jobs, families, society is among the most obvious of them. The novel speaks of how men are still ancient creatures living among the modernities of today.
கார்த்திக் பாலசுப்ரமணியன் (பி. 1987) இவர் 1987ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பிறந்தார். கல்லூரிப் படிப்பை கோவையில் முடித்தவர், பணியின் நிமித்தம் நொய்டா, ஜோகன்ஸ்பர்க், சிட்னி போன்ற நகரங்களில் வசித்திருக்கிறார். தற்போது சென்னையில் மனைவி, மகனுடன் வசித்துவருகிறார். ஒரு மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிகின்றார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டொரினா’ 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. மின்னஞ்சல்: karthikgurumuruganb@gmail.com
ஐ.டி துறை பல கீழ் நடுத்தர மற்றும் நடுத்தர குடும்பங்களை சமூக மற்றும் வசதியில் மேலே கொண்டுவந்துள்ளது.. அந்த துறையிலுள்ள அலுவலக அரசியலை, உழைப்புச் சுரண்டலை, குடும்பஉறவு சிக்கல்களை மிக விரிவாக பதிவுசெய்துள்ளது இந்த நாவல்.. இதில் சொல்லப்பட்டுள்ள பல சம்பவங்கள் எனக்கும் என் சக பணியாளர்களுக்கும் நடந்துள்ளது. ரொம்ப நாள் அப்பறம், படிக்க படிக்க பல இடங்கள் என் அலுவலக அனுபவங்களை அசைபோட்டமாதிரி உள்ளது.
சென்னையின் வாழ்வியலில் பெரும் தாக்கதை ஏற்படுத்தியது ஐடி துறை… தமிழகதின் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிறந்து, வளர்ந்து, படித்த இளைஞர்களின் பெரும் இடப்பெயர்வை இந்த நூற்றாண்டில் ஐடி துறை நிகழ்த்திக் காட்டியது! பொருளாதாரத் தன்னிறைவை எட்டி இருந்தாலும் இந்த துறை சார்ந்த அழுத்தங்களும், ஏப்பொழுதும் மன நிம்மதியற்ற சூழலையும், அது சார்ந்த அகச்சிக்கல்களையும் தினமும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயதில் இருக்கிறோம்! இந்த வாழ்வியலை பதிவு செய்த சொற்ப்பமான படைப்புகளில் மிக முக்கியமான படைப்பு நட்சதிரவாசிகள்!
கதை ஐடி அலுவலகத்தை சார்ந்து இருந்தாலும், அதில் செக்கியூரிடியாக பணி புரியும் ராமசுப்பு கதாபாத்திரதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. அலுவலக சூழலை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அது சார்ந்து இயங்கக் கூடிய மக்களின் வாழ்வையும் பதிவு செய்திருப்பது எனக்கு கதையுடன் இனக்கதை ஏற்ப்படுத்தியது!
பொதுமக்களிடம் ஐடி துறை சார்ந்த பல்வேறு கற்பிதங்கள் இருக்கிறது! உனக்கு என்னப்பா நீ ஐடியில வேலை செய்ற ஜாலி தான் லச்ச லச்சமா சம்பளம் சென்னையில சூப்பரான லைப் ஸ்டைல் என்கிற வாக்கியத்தை பெரும்பான்மையான நேரத்தில் எதிர்கொண்டு இருப்போம்! ஆனால், இங்கு நிலைமை வெறு மாதிரி இருக்கிறது என்பதை நித்திலன், சாஜூ என கதை மாந்தர்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது!
Onsite செல்வதற்கான சாஜூவின் எதிர்பார்ப்பும் ஆனால், அதற்கு பரிசாக கிடைக்கும் ஏமாற்றமும் அது சார்ந்து நடக்கும் அலுவலக அரசியலையும் பெரும்பான்மையான ஊழியர்கள் கடந்து வந்திருப்போம்! இரவில் பணி செய்து விட்டு காலையில் வீடு திரும்பும் ஊழியர்களின் உடல் நிலையையும், மன நிலையையும் சரியாக பதிவு செய்திருகிறார் ஆசிரியர்!
சினிமாவில் காட்சிப்படுத்தபடும் ஐடி அலுவலக காட்சிகளை போல இல்லாமல் அங்கு நடக்கும் எதார்தங்களை நாவல் வெளிக் கொண்டு வந்து இருக்கிறது! பொது சமூகத்திடம் இருக்கும் கற்ப்பிதங்களை உடைக்கும் எதார்த்தத்தை அந்தத் துறை சார்ந்த ஒருவரே கூரும் போது, அது பொது புத்தியில் நிச்சயம் மாற்றத்தை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐய்யமில்லை!
புத்தகம் – நட்சத்திரவாசிகள் ஆசிரியர் – Karthik Balasubramanian பதிப்பகம் – கிண்டில் பதிப்பு (காலச்சுவடு பதிப்பகம்) பக்கங்கள் - 309 விலை - ₹231
எப்போ ஆரம்பிச்சு எப்போ முடின்சுனு தெரியவே இல்லை!! நான் ஒவ்வொரு நாளும் இப்படி தான் இருப்பேனா என்ற கேள்வி எண்ணில் வாசித்த நொடிகள் எல்லாம் மனதில் ஓடியது!! இந்த ஆண்டுகள் எல்லாம் நானும் இதை தான் செய்தேன் ஆனால் கார்த்திக் போல் என்னால் இந்த ஐ.டி உலகை பார்க்க முடியவில்லை! பல நூறு நன்றிகள் சொன்னால் கூட தீராது இந்த எழுத்தாளனுக்கு. உங்கள் எழுத்துக்கு நான் இன்று முதல் பெரிய விசிறி!!!! இங்கே இருக்கும் மனித வழிகள், உழைப்பு சுரண்டல், உல சிக்கல்களை மிக உயிர்ப்பு உடன் சொல்லி இருக்கிறார்!! என்னை மறந்து நான் வாசித்தேன்!!!
A rare Tamil novel based in the Information Technology sector. The non-linear narrative and the multitude of characters provide a kaleidoscopic view of the emotions, the loneliness, the hard work,the office politics in the IT sector without resorting to the convenient devices of booze,sex and frolic. A work of fiction based in a contemporary setting becomes great when it does not judge or arrive at generic conclusions. Rather, it tells a story, allows us to soak in the ambience/characters and makes us silently contemplate the world we lived in while reading the story. This debut novel by Karthik does just that.
நட்சத்திரவாசிகள் மிக முக்கியமான சமகால பிரச்சினைகளை அழகாகவும் எளிமையாகவும் பதிவு செய்துள்ளது.
The way in which this novel is framed is quite interesting. All the chapters are very small so it's very esay to read but at the same time I felt like it created a some sort of disturbance in following up the characters. Characterisation is brilliant but I felt like women characters are purposely shown bold.
But for me If a story left me insilence for few minutes after reading it I'm sold, natchathiravasigal did that for me.
This is the stories of people who we daily come across we thought that we know thier story but truth is we don't. Kudos to the writer. Definitely worth a read❤️.
புத்தகங்கள் மூலம் என் முன் விரிந்த உலகங்கள் பல. எழுத்தாளனின் உதவியோடு அந்த உலகம் நமக்கு பரிச்சயமாகிறது. நித்தமும் நான் உழலும் அந்த உலகமும் பிறிதொருவருக்கு அனுபவமாக கூடும் என்று நட்சத்திரவாசிகள் வாசித்த பொழுது உணர முடிந்தது. ITல் வேலைக்கு சேர்ந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு divorceeயை பார்த்ததில்லை. ஒரே நாளில் வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டவரை சந்தித்ததில்லை. அலுவலக depressionனால் வன்முறையில் ஈடுபட்டவர்களை பற்றி கேள்வி கூட பட்டதில்லை. அதற்காக இப்புதினத்தை குற்றச்சாட்டவில்லை. பூமி சுற்றுவதையா கதை ஆக்க முடியும். ஆர்த்திக்கு பரதவாஜ்க்கும் கிடைப்பது எனக்கு ஏன் கிடைக்க வில்லை என்று நித்திலன் யோசிப்பதாக வைத்து விட்டது எழுதியவரின் சாமர்த்தியம் தான். காலச்சுவடு கண்ணன் புரிந்து தானே அனுமதித்திருப்பார். Daisy, Sanjayன் பகுதியின் சாத்தியங்கள் முகத்தில் அறைகிறது. Y2K காலத்தில் வந்தவர்களை நட்சத்திரவாசிகள் எனலாம். நாங்கள் பூமிக்கு இறங்கி வந்து பல நாட்கள் ஆகிறது.
ஆசிரியர் : கார்த்திக் பாலசுப்ரமணியன் நாவல் காலச்சுவடு பதிப்பகம் 264 பக்கங்கள்
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இரண்டு வெவ்வேறு வாழ்க்கைகளை ஒரே தருணத்தில் மாறி மாறி வாழ்கிறான். ஒன்று வெளி உலகத்திற்காக வேஷம் போட்டு வாழும் புற வாழ்க்கை, மற்றொன்று தன் முழு சுயத்தையும் நிலை நாட்ட தன் ஒட்டு மொத்த ஆதிக்கத்தை செலுத்த முயலும் அகவாழ்கை. மனிதன் இவ்விரண்டு வாழ்க்கைகளையும் தெளிவாக பிரித்து வாழ்ந்து தன்னை தானே ஒரு பெரும் அறிவாளியாக நினைத்து கொண்டுள்ளான். ஆனால் நிதர்சனம் வேறு. இப்படி இரண்டு வாழ்க்கையை ஒரு சிலந்தி வலை போல பின்னி, தொடங்கிய இடத்தையும், முடியும் இடத்தையும் மறந்து, தான் பின்னிய வலையில் தானே சிக்கிக்கொண்டு இறுதியில் இரைக்காக பின்னப்பட்ட வலையில் தானே ஒரு இரையாக மாறி, வாழ்க்கை எனும் சிலந்தி வலைக்கு இரையாகிறான். அவன் மட்டும் இரையாவதோடு மட்டுமல்லாமல் தன் வாழ்க்கை துணைக்கும் அந்த துன்பத்தை சரி பாதி பகிர்ந்து விட்டு செல்கிறான். இப்படி பட்ட ஒரு கதைதான் இந்த நட்சத்திரவாசிகள் நாவல்.
முழுக்க முழுக்க நிகழ் காலத்தில், சென்னை எனும் பெருநகரத்தில் மென்பொருள் நிறுவனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நிகழும் கதைகளின் உலகம் தான் இந்த நட்சத்திரவாசிகள். அந்நிறுவனத்தின் செக்யூரிட்டி -யுடைய வாழ்க்கையுடன் கதை தொடங்குகிறது. இரண்டு அணிகள், அந்த அணிகளின் தலைவர்கள் மற்றும் அவருக்கு கீழ் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கைகுள்ளும் கதை நகர்கிறது. ஒரே இடத்தில் தங்கள் பணியை தொடங்கிய வேணுகோபால், சத்தியமூர்த்தி - நிறுவனத்தின் சூட்சமத்தால் ஒருவர் மேலே ஒருவர் கீழே செல்ல, இருவருக்கும் இடையே நீடிக்கும் பணிபோர். அணிக்கு தலைவராக இருந்தாலும் இல்லத்தில் தன் மகளுடன் தனியே வாழும் / வாடும் அர்ச்சனா குடும்பத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமையை சுமந்து அமெரிக்கா வரை சென்று திரும்பும் விவேக் இழந்ததோ ஈடுசெய்ய முடியாதவை. நிகழ்கால மென்பொருள் துறையின் புதுமண தம்பதியரின் வாழ்க்கையை எதார்த்தமாக நம் கண்முன் விரியும் நித்திலன் - மீரா வாழ்க்கை. நவீன யுகம் காட்டும் கானல் நீரில் மூழ்கி கரையேற முடியாமல் இருந்த வேலையும் கைவிட்டு போகும் தருணத்தில் தத்தளிக்கும் சாஜு - பல நடுத்தர வயது குடும்பஸ்த்தர்களின் பிரதிநிதி.
இக்கதையில் என் உள்ளம் வரை சென்று பல நாட்களாக உழன்று கொண்டே இருக்கும் ஒரு கதாபாத்திரம் - பார்கவி. பார்கவி இந்த நவீன அதிவேகமாக சுழலும் உலகில் சிக்கி சிதைந்த ஒரு அப்பாவி. அவள் இறக்கவில்லை. ஆனால் அவள் உயிர் மட்டும்தான் உள்ளது. சிலரின் சுயநலமும், போட்டியும், பொறாமையும், முதலாளித்தனமும் அவளின் மென்மையான மனதை பிணந்திண்ணி கழுகுகள் போல் கொத்தி தின்று செறித்து விட்டு ஒரு குப்பையை போல் அவளை வீசியெறிந்த காட்சி என் உள்ளத்தில் இருந்து அகல மறுக்கின்றது.
இப்படி இவர்கள் எல்லோருக்கும் தனி தனியே சிக்கல்கள் இருந்தாலும், இவர்களை இணைப்பது இவர்களின் வேலையும், வேலைகளுக்கு நடுவே சிறு சிறு உரையாடல்கள், சந்திப்புகள், வீட்டு விசேஷங்கள், போன்றவை மட்டுமே.
இந்த கதையை இரண்டு பார்வை கொண்டு பார்க்கலாம். தொழில் வழி இவர்கள் எப்படி பெரும் முதலாளிகளால் ஈவு இறக்கிமின்றி சுரண்டப்படுகிறார்கள். இன்னொரு பார்வை இவர்களின் மனம் வரை சென்று பார்ப்பது. நான் அப்படித்தான் இந்த கதையை பார்க்க முயல்கிறேன்.
5 எண்களில் ஊதியம், மிடுக்கான உடை, நவீன உபகரணங்கள், அடுக்குமாடி குடியிருப்பு, நாவில் புரளும் ஆங்கிலம், வார இறுதி கொண்டாட்டங்கள், வெளி நாட்டு வேலை வாய்ப்பு, சொந்த வீடு, நவீன வாகனகங்கள் என வெளி உலகம் காட்டும் பிம்பம் இதுவாக இருக்க, அவர்களின் மனம் காட்டும் உண்மையோ வேறு, சோர்வு, சுரண்டல், சுமை, வெறுமை, பகைமை, தனிமை, அடிமைத்தனம், துரோகம், தோல்வி, என இந்த வெளி உலகம் காணாத ஒரு மனச்சிறைக்குள் தினம் தினம் தள்ளப்பட்டு வதைக்கப்படுகின்றனர்.ஆசிரியர் கூறுவது போல " இங்கு நாங்கள் கூட்டமாக தெரிந்தாலும், இங்கு நாங்கள் அனைவரும் தனி தனியே தான் உணர்வோம் "
மனிதன் இந்த உலகில் இத்தனை காலம் இந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் என்றால் அதற்கு காரணம் நம்பிக்கை தான். ஒரு மனிதனின் துயரத்திற்கு தோள்கொடுக்க இன்னொரு மனிதன் தான் வருவான் என்பதை இக்கதை நெடுக உணர்த்தப்படுகிறது. நம் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை துடைப்பதற்கும், தாங்கி பிடிக்கவும் இந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் இரு கரங்கள் இருக்கத்தான் செய்கின்றன.உங்கள் வலிகளை கண்ணீராய் சிந்தி விடுங்கள், துடைக்கும் கரங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
கார்த்திக் பாலசுப்ரமணியம் தற்போதைய இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத, தவிர்க்க கூடாத ஒரு படைப்பாளி.A contemporary writer. தகவல் தொழில்நுட்பத்துறை தான் அவரின் பெரும்பாலான கதைகள் நடக்கும் களம். புதிய நூற்றாண்டில், மக்களின் வாழ்வியல் முறை, பண்பாடு, பொருளாதாரம் என இந்த துறை ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம். மென்பொருள் நிறுவனங்கள் தரும் வேலைகளில் இருக்கும் நிலையற்ற தன்மையும், சுயம் சார்ந்த பிரச்சினைகளும், அடையாளச் சிக்கல்களும் இவர் கதைகளின் பேசு பொருள். கண்ணாடித்தீவுகளுக்குள் குடிபெயர்ந்த இவர்களின் வேலை நேரங்கள் ஒரு நெறிமுறையின்றி இந்தியா இரவினை தின்னும் அமெரிக்க பகல்களாக நீளுகின்றன. நேரம் பொருத்தவரையில் பொதுமுடக்கத்தில் WFHஆக இவர்கள் கொடுத்த விலை அதிகம். அதிலும் பெண்கள் நவீன உழைப்பு சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.கணவனுக்கு சமைத்தும் கொடுத்து, குழந்தையையும் பார்த்துக்கொண்டு, வேலையில் கொடுக்கப்படும் அழுத்தங்களயும் சமாளித்துக்கொண்டு என.
பேருந்துகளில்சில்லறைகள் இல்லையென்றால் கூட அவர்கள் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக நுண்மையாக ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதும் அவர்கள் சுயம் மீதும் லேபிள்கள் ஒட்டப்படுகின்றன. கார்த்திக்கின் கதைகள் அதைத்தான் கேள்விக்குட்படுத்துகின்றன அந்த லேபிள்களை, ஒடுக்குமுறைகளை, சுரண்டல்களை ,இந்த துறை சார்ந்த, சாராதாவர்களின் பொது புத்தியை!
டொரினோ, நட்சத்திரவாசிகள் இரண்டையும் ஒரு சேர படிக்கும் போது தன்னுடைய கதைக்கான கருப்பொருளை எதிலிருந்து தேர்ந்தெடுக்கிறார் என்பது அதை எப்படி உருமாற்றி தருகிறார் என்பது நன்றாகவே தெரியும்.ஒரு கதையில் நிஜங்களும் கற்பனைகளும் எத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும் என்பது ஒரு எழுத்தாளன் மட்டுமே அறியவேண்டிய ஒன்று என்று சுஜாதா ஒரு கட்டூரையில் சொன்னது ஞாபகத்திற்கு வந்து போனது.
அவர் கதைக்கான நீளத்தை அந்த கதைகளே தகவமைத்து கொள்கின்றன. கூறல் முறையும் ஒன்று போல் இருப்பதில்லை. ஒரு கதை நிகழும் காலத்தில் ஒரு செயலினால் ஏற்படும் விளைவுகள் முதலில் கூறிவிட்டு, அதை ஏற்படுத்திய கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திவிட்டு, அந்த கதாபாத்திரத்தின் நினைவுகளாக அந்த செயலை கூறுவது. கதை அந்த செயலோடு முடிந்து போகிறது. மீண்டும் கதை நிகழ்காலத்திற்கு வரவேண்டிய அவசியமே இல்லை.
டொரினோ சிறுகதை தொகுப்பில் “ஒரு காதல்,மூன்று கடிதங்கள்” நம் பொது புத்தியை கேள்விக்குட்படுத்துபவை. ஒரு புரிதலோடு மீண்டும் வாசிக்க செய்பவை.
நட்சத்திரவாசிகள் நாவலில் அதுவரை கேள்விகூடபட்டிராத பழக்க வழக்கங்கள், அதீத ஆடம்பரங்கள், பாரபட்சம் பார்க்காத ஆண்-பெண் தோழமைகள்,நையாண்டி பார்வைகள் என ஒரு IT நிறுவனத்திலேயே வாழ்ந்து விட்டு வந்தது போன்ற ஒரு உணர்வு… இதை தான் ஒரு ஆசிரியன் கடத்த வேண்டும்… அசோகமித்திரன் பெரிய கதைகளாக எழுத விருப்பப்பட்ட கதைகளின் சுரு��்கம் தான் அவர் சிறுகதைகள் என சொல்லி இருப்பார். அவர் வழி வந்த கார்த்திக்கும் அதையே கையாண்டிருக்கிறார். மீரா நிதிலனுக்கு எழுதிய ஈமெயிலை படிக்கும் போது நான் என் மனைவிக்கு எப்படிப்பட்ட கணவனாக இருக்கிறேன் என்பதை சுயவிமர்சனம் செய்து கொண்டே இருந்தேன் நாவலை படிக்கும் போது பெண் கதாபாத்திரங்கள் சுயமரியாதையோடு இருப்பதாகவும், நிதிலன் வேண்டுமென்றே பெண்களை பற்றின புரிதல் இல்லாதவனாக படைக்கப்பட்டிருப்பதாக ஒரு சிறு நெருடல் இருந்து கொண்டே இருப்பதை தவிர்க்க முடியவில்லை!. நட்சத்திர வாசிகள் நாவலில் விரிவாக எழுதப்பட்ட IT துறை சார்ந்த விசயங்கள் “தருக்” நாவலில் கவனமாக தவிர்க்கப்பட்டிருந்தாலும் சிறுகதைகளில் வேறு தளங்களில் சொல்ல பட்ட கதைகளை மீண்டும் அவர் நாவலிலேயே எடுத்தாள வேண்டிய காரணம் என்ன என்ற கேள்வியும் வராமலில்லை. ஆனாலும் ஒரு சின்ன புரிதல், அடைத்த குளிரூட்டப்பட்ட கியூபிக்கல்களுக்குள் அதனுல் விரும்பி சிறை பட்டிருக்கும் மனிதர்களுக்கும் அவர்தம் மனங்களுக்கும் கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் தேவையாகவே இருக்கின்றன என்பது.
IT துறையின் வளர்ச்சி இந்த நூற்றாண்டில் பல குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளது.
அதே நேரத்தில், ஒரு சிறு கூட்டினில் அடைந்து பறக்க சொல்லுகிறது. ஒரு கட்டத்தின் மேலே, இந்த வளர்ச்சியும், அதிகார தேடலும், ego ஐ உருவாக்கி, சக பணியாளர்களை சீண்டு பார்க்கின்றது என்பது என் எண்ணம்.
அனைத்தையும் தாண்டி, capitalist economy லாப நோக்கத்துக்கே மட்டும் தண்டவாளத்தில் ஓடும் ஒழிய மனித நலத்திற்காக அல்ல.
சில கசப்பான உண்மைகளை ஏற்று கொள்ள வேண்டும்.
" எனது வேலை, எனது நிலையாக இல்லை. அதே வேலையில், எனது வேலை, எனது அடையாளமும் இல்லை."
ஒவ்வொரு பணி உயர்வும், ஒரு musical chair . ஒருவர் அமர்ந்தால், இன்னொருவர் நீங்க வேண்டும்.
ஒரு அலுவலக வாழ்கை குடும்ப உறவுகள் வரை சிக்கல் ஆக்குகிறது. எனது வேலையின் நடக்கும் ups and downs வைத்து, குடும்ப உறவுகளை காயப்படுத்தி சுகம் காணும் எண்ணம் மிக குரூரம்.
----
The author has written a well-rounded story about the happenings and politics in the IT industry.
Especially, he sensibly highlighted how the industry brought enormous growth and, at the same time, the cut-throat competition between employees.
The author took a stand which I would describe with the below analogy:
"We are just a nut or bolt in a very big machine. You are not the core thing, but you are needed. However, you are not irreplaceable."
பொருளாதர முன்னேற்றமும், ஊர் மற்றும் உறவுகளின் கவன ஈர்ப்பும் இந்த ஐ.டி பணியாலேயே கிடைத்ததுதான் என இந்த துறையிலிருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்த ஐ.டி துறையில பணி நிரந்தரமானு கேட்டா இல்ல எப்பேர்பட்ட பதவில நீ இருந்தாலும் ஒரு எதிர்பாராத நாள்ல உங்களுக்கு வேலையிலப்பு நடக்கும். இந்த கம்பெனி முன்னேற எப்படி நீ உழைத்திருந்தாலும் ஒரு நாள் கம்பெனிக்கு புதுசா புராஜக்ட் எதுவும் இல்ல இப்ப நீங்க இருக்க புராஜ்க்ட்லிருந்து நம்ம கம்பெனிக்கு வர லாபம் குறைந்துட்டே வருது, இன்னம் பல கதெ சொல்லி உங்கள வேலையில இருந்து தூக்கிடுவாங்க.
ஐ.டி துறையில வெளிநாட்டுக்கு போற வாய்ப்பு பிரகாசமா இருக்கும் அதனால இங்க இருக்க பலர் ஒரு ரெண்டு/மூனு வருசம் அங்க போயிட்டு வந்தா போதும் வீடு, கார், பர்சனல் லோன் என எல்லா இ.எம்.ஐ யும் குளோஸ் பண்ணிட்டு நிம்மதியா இருப்பன் என்பார்கள், இதே வெளிநாடு சென்றவர்கள் சிறைகைதி போன்ற வாழ்வு எப்படா ஊர் திரும்புவம் என்ற ஏக்கத்துடன் நாட்களை நகர்துகிறார்கள்.
பதவி உயர்வு, ஊதிய உயர்வு & வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்மையா உழைப்பவனுக்கு மறுக்கப்படும் சிங் சாங் போட்டவனுக்கு வழங்கப்படும் இது எல்லா துறையிலும் நடப்பதுதானே என்றால் இங்க(ஐ.டி) கொஞ்சம் அதிகமாவே நடக்கும். காதல் கண்ணாலம் பண்ணவங்க அதிகம் இந்த ஐ.டி துறையில இருக்கவங்கதான். டைவர்ஸ் வாங்கினவங்களும் அதிகம் இந்த ஐ.டி துறையில இருக்காங்க.
இவை அனைத்தையும் உள்ளடக்கிய புனைவே நட்சத்திரவாசிகள். ஏதோ ஒரு கதாப்பாத்திரம் நமக்கு நடந்த நிகழ்வுகளை பிரதிபலிப்பாதக இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் படிங்க. —கலைச்செல்வன் செல்வராஜ்.
Forgive my English review for this wonderful new-gen Tamil book. It’s very rare to find a book or a movie which has well sketched characters. To have many characters with such depth shows honesty and sincerity of the author towards his craft. Karthik Balasubramanian’s natchathira vasigal is one such rare gem. His narrative style and command in language takes me back to golden times of anantha vikatan and yet his story is truly refreshing surrounding millennials mid life real struggles. This story touches every aspect of corporate life, it’s good bad and ugly.
Karthik’s observation of people, a non-judgemental stand on life, his empathy towards fellow human beings, his effortlessly feminist attitude (to the true sense of the word) is reverberated through out the book. The book subtly uncovers workplace narcissism, millennial relationship struggles, hierarchical politics and real mental health issues of this globalized capitalist world.
This is good Tamil book from a promising author. If you are a fan of A. Muthulingam, S. Ramakrishnan, this book will not disappoint you. However the narration is very unique and original. I would love to see this book made into a movie!
For give me for review in English 1) I have heard this book from All India Radio 6:45 am news like Sahitya Akademi Award conferred for this book and I purchased this book. 2) I have read this book in 10 days and interest of characters covered in this book made me to read this book in short period of time. Initial 2 days I am not more interested but later I got interest. 3) Even though this books is fiction but covers reality of humans working in IT field , expressed their different experience and day to day life. 4) Author also Abbreviated terminologies which are specific to IT industry in this book is a key. 5) Appreciating Author Mr.Karthik Balasubramanian for this initiative and to develop similar creations.
ஐ.டி துறை சார்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் வேறு பல அலுவல் செல்பவர்கள் பலரும் தொடர்பு படுத்திக்கொள்ளும் வகையிலே உள்ளது. அலுவலகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல் அவர்களின் குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை, உணர்வுகள் இவ்வாறு பல நிகழ்வுகளையும் கொண்ட ஒரு கதைக் களமாக உள்ளது. சில நிகழ்வுகள் என்னுடன் தொடர்புப் படுத்திக் கொள்ளவும் முடிந்தது .
வாழ்வின் நிலையற்ற தன்மையின் காட்சிப் பொருளாகி நிற்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் அத்தனை மனிதர்களும், இறுதியில் கனத்த அழுத்தத்தை மனிதில் இருத்துகிறார்கள்.
Karthik Balasubramanian smoothly breaks all preconceived notions regarding the IT sector through his award winning novel – ‘Natchattira Vasigal’. Aptly titled, the book explores the lives of a generation that is known to have changed the employment landscape of India, especially the south. The narrative is non-linear as seen through the eyes of each character and the struggles they face in navigating the industry that either makes or breaks them. It looks intentional on the author’s part for not attempting to invent any fancy character names, with the exception of Nithilan. Shakti, Venu, Archana, Vivek, RK (a widely used initialism), these are names that we have all known, proper nouns that have somehow become common nouns in life’s existential influences. The sensible portrayal of office dynamics, keen insight into character psyche and impartial narrative makes it different from the usual done to death formulas adopted by movies to show life in IT. The auxiliary workers are not forgotten too – cab drivers, delivery boys, security agents and the teashop owners whose lives are inevitably tied to the industry.
To any Non-IT person reading this book, it would be a revelation - it tells you that the ‘grass is not always greener on the other side’.
To any IT person reading this book, no character, nor their predicament will feel out of place – certainly makes you wonder if we all somehow fit into a standard ‘Statement Of Work’.