அன்றாட வாழ்வை சிக்கலுக்கு உள்ளாக்கும் அபத்தங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் ஆவேசம், அவற்றிலிருந்து தப்ப முடியாமையின் பரிதவிப்பு, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்பு, பாசாங்குகளின் மீதான நகைப்பு, அன்பின் தழும்பல்கள், உவகையின் பிதற்றல்கள், நிறைவின் மௌனம் என யாவற்றையும் கொண்டவை இக்கவிதைகள். சுடரின் அசைவைப்போல நளினமும் ஒளியும் ஒருசேர நிகழும் அபூர்வ கணங்களையும் கொண்டவை. எளிய சொற்களைச் சோழிகளாக்கிச் சுழற்றி வீச அவை நவமணிகளாகும் ஜாலத்தை பொன்முகலியின் மொழியில் காணமுடிகிறது.
தீபு ஹரி (பொன்முகலி) (பிறப்பு: நவம்பர் 18, 1983) தமிழில் எழுதி வரும் கவிஞர், சிறுகதையாசிரியர்.
இலக்கிய வாழ்க்கை 2018-ல் தீபு ஹரியின் முதல் கவிதை வெளியானது. 2019-ல் முதல் கவிதைத் தொகுப்பு "தாழம்பூ" தமிழினி பதிப்பகம் மூலம் வெளியானது. இலக்கிய ஆதர்சங்களாக பாரதியார், புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, எமிலி டிக்கன்சன், தஸ்தோவெஸ்கி, எர்னஸ்ட் ஹெமிங்வே, பஷீர் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். பொன்முகலி, தீபு ஹரி என்ற இரு பெயரிலும் எழுதி வருகிறார். இணைய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்.
விருது 2020-ல் கவிஞர் தக்கை வே. பாபு நினைவு கவிதை விருது வழங்கப்பட்டது. 2022-ல் ஸ்பாரோ இலக்கிய விருது பொன்முகலிக்கு வழங்கப்பட்டது.
நூல்கள் பட்டியல் கவிதைத்தொகுப்பு தாழம்பூ (2019) ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது(2021