ஏற்கனவே எனது விண்மீன்களின் சதிராட்டம் நாவலை படித்தவர்களுக்கு, இது ராகவன்-மாலினியின் ஆரம்பகால கதை என்ற அறிமுகமே போதும். மற்றவர்களுக்கு,
காதலித்து, வீட்டில் போராடி திருமணம் செய்து கொள்வது மட்டுமில்லை வெற்றி. அதன் பிறகு வரும் போராட்டம்தான் அந்த தம்பதிகளின் காதலை பரிசோதிக்கும். அதையெல்லாம் எப்படி சமாளித்து வெல்வது, அவரவர் வீட்டில் மருமகள், மாப்பிள்ளை என்ற மதிப்பினை, அன்பினை, அங்கீகாரத்தைப் பெற கடக்க வேண்டிய கசப்புகள், உறவுகளால் வரும் பலப்பல தடைகளில் தடுக்கி விழுந்துவிடாமல் ஒருவருக்கொருவர் ஆதரவாக, துணையாக இருந்து வெல்வதுதான் உண்மையான வெற்றி.
அனுபவித்தவர்கள் சொல்வது, இந்த நிலை அடைய ஆறு-ஏழு வருடங்கள் பிடிக்கும் என்பது.