முழு நீள காமெடி அண்ட் ரொமான்டிக் நாவல்..
அதில் இருந்து ஒரு டீசர்
தந்தையையும் அண்ணனையும் தவிர ஆண்களுடன் அவள் பழகியது குறைவு தான்.. அதுவும் முதல் இரவன்று இப்படி குட்டியாக ஷார்ட்ஸை மட்டும் அணிந்தபடி அவன் இருந்தது அவளுக்கு மிகவும் சங்கடமாகி தான் போனது.
தலையை குனிந்தபடி அமர்ந்தவளிடம், "அப்புறம் சொல்லு" என்று சொல்ல, அவளோ, "என்ன சொல்ல?" என்று கேட்டாள்.
அவனோ, "சொல்ல ஒண்ணும் இல்லன்னா கேளு… என்னை பத்தி தான் உனக்கு எதுவும் தெரிஞ்சு இருக்காதுல்ல" என்று உரைக்க, அவளை அப்போது தான் மெதுவாக ஏறிட்டுப் பார்த்தவள், "நிறைய தெரியும்" என்றாள்.
அவனோ புருவம் சுருக்கி அவளைப் பார்த்தவன், "என்ன தெரியும்?" என்று கேட்க, குரலை செருமியவள் அடர்ந்து வளர்ந்து இருந்த தாடியையும