சத்யஜித், தேவிரதன்-அம்புஜாக்ஷி தம்பதியினரின் தவப்புதல்வன்! தந்தை-தாய் போல் அவனும் மருத்துவன்! இதயங்களைச் சீர் செய்யும் அறுவைச் சிகிச்சை மருத்துவனான அவனது மனதில் சொல்லா முடியா வேதனைகளும் வெறுப்புகள் நிரம்பி இருக்க, தன் தந்தையிடம் சரிவர உரையாடாது, அவரிடம் இருந்து தள்ளி இருப்பதற்கு, அவன் பல ஆயிரம் மைல்கள் தாண்டி வசிக்கிறான். ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று இருக்கும் அவனை, அவன் குடும்பத்தின் நலன் கருதி இந்தியா திரும்புகிறான்.
அண்டார்டிக் ஐஸ் கட்டியாக தேவ்-சஹாரா பாலைவனமாக சத்யஜித்தும் அன்பு இல்லத்தில்! ஆனால் சமூகத்தைப் பொறுத்தவரை இதுவல்லோ குடும்பம் என்று நினைக்கும் படி தந்தையும் தனயனும் தங்கள் மன வருத்தங்களை மறைத்துக்கொண்டு வலம் வ