அங்கோர் வாட்டின் செங்குத்தான படிக்கட்டு கற்பனைக்கு எட்டாததாக இருக்கிறது, நிழற்படத்தின் காண. ‘என்னைப் பெற்ற அம்மா! என்று மனம் முனகியது. பொன்.மகாலிங்கத்தின் ‘அங்கோர் வாட்’ நூலை வாசித்தபின் எப்படியும் ஒருமுறை ஆயுளுக்குள் அங்கோர் வாட் போய்வர வேண்டும் என்ற ஆவல் பெருகுகிறது. வாய்க்குமோ, வாய்க்காதோ? ஆனால் இந்தப் புத்தகம் வாசித்த, நிழற்படங்கள் கண்ட, நினைவு தங்கி இருக்கும் நெஞ்சில்!