எனது எழுத்துப் பயணத்தில் மீண்டும் ஒரு மைல்கல் தான் இந்த 'பழி வாங்கவா? உனை வாங்கவா?' நாவல்.
இது ஒரு 'non-linear' கதை. அதென்ன 'non-linear' கதை என்றால் இந்நாவலில் அத்தியாயத்திற்கு அத்தியாயம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை இடம், காலம், இணை என்று மூன்றும் மாறிக்கொண்டே இருக்கும். மேலோட்டமாக அல்லாமல் கதாபாத்திரங்களுடன் ஒன்றி பயணித்தால் ஒழிய இக்கதையை புரிந்துகொள்வது கடினம்.
இன்னொரு முக்கியமான விஷயம், இந்நாவல் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு நாவல் மட்டுமே.
திரைப்படங்களில் ஈ, பாம்பு, பேய் என்று பழி வாங்கிப் பார்த்திருப்போம். ஒருவேளை வேற்று கிரகத்திலிருந்து ஒரு குடும்பம் பூமிக்கு பழிவாங்க வந்தால் எப்படியிருக்கும் என்னும் யோசனையிலேயே இந்நாவல் எனக்குள் உதயமானது