முகநூல் மட்டும் அறிமுகமாகாது போயிருந்தால் எனக்கு எழுதத் தெரியும் என்பது எனக்குத் தெரிந்திருக்காமலே போயிருக்கும். அப்படி இந்த இணைய யுகம் உருவாக்கிய பல எழுத்தாளர்களில் நானும் ஒருவன். முகநூலில் சிறு சிறு துணுக்குகள் எழுதி பிறகு அதைக் கொஞ்சம் மேம்படுத்தி சிறுகதைகளாக எழுதத் தொடங்கி, பின்பு நாவல், வரலாற்றுப் புதினம், வரலாறு, புத்தக விமர்சனங்கள் எனக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன். எழுத்தில் உள்ள அத்தனை சாத்தியக்கூறுகளையும் பரிட்சித்துப் பார்த்துவிடும் பேராசை ஒன்று உண்டு. ஆனாலும் கவிதை வடிவம் இன்னும் சாத்தியப்படவே இல்லை. கதைகள் வெறும் கற்பனைகளால் மாத்திரம் உருவாகி விடுவதில்லை. அனுபவம், கேட்டது, பார்த்தது, படித்தது என நம் சூழல் சார்ந்து, இவை நமக்