தந்தையும் தமையனும் திடீர் விபத்தில் மரணிக்க அரசியலனுபவம் இல்லாத அருள்மொழியைத் தேர்தலில் வெற்றி பெற வைக்க தேர்தல் வியூகம் அமைக்கும் நிறுவனத்தால் கேம்பெய்ன் மேனேஜராக நியமிக்கப்படுகிறாள் அவன் ஒருதலையாக காதலித்த வானதி. கடந்தகாலத்தின் கசப்பை மறந்து அருள்மொழிக்காக வேலை செய்வாளா வானதி? தன்னை ஜெயிக்க வைப்பதை தவிர வானதிக்கு இருக்கும் இன்னொரு மறைமுக நோக்கத்தை அறிந்து சுதாரிப்பானா அருள்மொழி? கத்துக்குட்டி அரசியல்வாதிக்கும், தேர்தல் வியூகத்தில் கரை தேர்ந்த கேம்பெய்ன் மேனேஜருக்குமான யுத்தகாண்டம் – முற்றிலும் அரசியல் சார்ந்த உணர்வுப்பூர்வமான நாவல்.