கேசம் : நரன்
“தன் மேல் அன்பு செலுத்தவும் தான், அன்பு செலுத்த யாருமே இல்லாத வாழ்க்கை” – இதே வரியால் நரனின் புத்தகத்தைச் சொல்வது சரியாக இருக்கும்.
கேசம் கதையின் நாயகன். காதல், காமம், ஒரே நேரத்தில் தனிமை – இவையெல்லாம் அவனுக்குள் ஒருங்கே நிகழ்கின்றன. அவன் பேசுவதிலும், மெளனத்திலும் கூட ஒரு பரிதாபம், ஒரு அழகு இருக்கிறது.
நரன், அவர் உருவாக்கிய இன்னொரு உள் உலகம் போலவே. அவரது எழுத்துகள் சும்மா இல்லை – சிந்திக்க வைக்கும்.
குறிப்பாக, “காமத்துக்கு தான் எத்தனை ஆயிரம் கதவுகள்… எந்த கதவு எப்போது திறக்கும் தெரியாது” இது மாதிரியான வரிகள் வாசிக்கும்போது நிறைய யோசிக்க வைக்கிறது.
எனக்குப் பிடித்தது:
கதாபாத்திரங்கள் ரொம்ப உண்மையாக இருந்ததுவரிகள் கவிதையை போல இருந்தது மனம் கொள்ளை கொள்ளும் சில நேரங்கள்
முடிவில்:
கேசம் – நரன்
ஒரு உணர்வுப் பயணம். சில புத்தகங்கள் பேசாததை இதுபோல் மெளனமாக சொல்லும்.