திருமணம் என்பது இரு மனங்களின் பந்தம்.. அவை ஒன்றோடு ஒன்று இணைந்திருந்தால் மட்டுமே அவ்வாழ்க்கையும் திகட்டாமல் என்றென்றும் தித்திக்கும்.தேவ் ஆனந்த்– மது இவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றம் எதனால்? யாரால்? மாற்றம் தந்த வாழ்க்கையை மாற்றிட முடியாது.. மாற்றிடமுயலுவார்களா?இரண்டு ஜோடிகளின் மனங்கள் இணைந்த நிலையில் அவர்களை பிரிக்க சதி செய்யும் ஒருவர்.உறவுகளின் மனம் நோகாமல் அதை கையாண்டு வெற்றி கொள்கிறான் ஒருவன். அவனோடு கை கோர்க்கிறான் மற்றொருவன்.இருவரும் இணைந்து வெற்றி கொண்டார்களா? இவர்கள் கொண்ட வெற்றி தான் அன்பின் அடையாளம் என்றால் இப்படியும் உறவுகளைவசப்படுத்தலாம் தானே?உறவுகளின் பிணைப்பினை காணலாமா?