பொன் அந்தி புலருமுன்...தமிழக வரலாற்றில் குறிப்பிட்ட ஐம்பதாண்டு காலம் மிகக் கொடுமையான இருண்ட காலம் என்று சொல்லலாம். இக்கால கட்டத்தில் தமிழக மக்கள் அடைந்த இன்னல்கள் ஏராளம். சட்டம் ஒழுங்கு, நீதி நிர்வாகம், முறையான ஆட்சி எங்கணும் நடைபெறவில்ல.பாளையக்காரர்களின் அராஜகம் ஒரு பக்கம், நவாபு களின் வாரிசுப் போராட்டத்தால் ஏற்பட்ட கொடுமைகள் ஒரு பக்கம், சந்தடி சாக்கில் நாடு பிடிக்க ஆசைப்பட்டு நாக்கைத் தொங்க விட்டுக்கொண்டு அலைந்த பிரிட்டிஷ், பிரஞ்ச், டேனிஷ், டச்சுக்காரர்களால் விளைந்த இன்னல்கள் ஒரு பக்கம் என்று தமிழகம் முப்பரிமாணங்களிலும் சிக்கிச் சிதறி, சின்னா பின்னமாகி, சித்திரவதைப் பட்டுக் கொண்டிருந்த காலம் அது.நான் இக்கால கட்டத்தைப் பற்றிப் ப