Jump to ratings and reviews
Rate this book

Rashtrakuta kula kaalan Aaditha karikalan | ராஷ்டிரகூட குல காலன் ஆதித்த கரிகாலன்

Rate this book
சோழ பேரரசு அதன் உச்சத்தில் இருக்கும்போது அதை எதிர்த்தவர்கள் இரண்டு நபர்கள் ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் இராஷ்டிரகூட அரசர் கிருஷ்ணன். சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் பகை எப்படி தொடங்கியது? மன்னர் கிருஷ்ணர் உண்மையில் யார்! அவருக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் எப்படி பகை ஏற்பட்டது? காந்தளூர் சாலைக்கும் சோழ தேசத்திற்கும் என்ன சம்பந்தம்? உண்மையில் வீரபாண்டியன் உடன் போர் நடந்த பிறகு சோழ தேசத்தில் என்னவ்வெல்லாம் நடந்தது? இப்படி கல்கி எழுதாமல் விட்ட மறக்கப்பட்ட ஆதித்த கரிகாலனின் மற்றொரு அத்தியாயம் தான் நமது ராஷ்டிரகூட குல காலன் ஆதித்த கரிகாலன் எனும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற போகிறது.

374 pages, Paperback

Published May 9, 2022

7 people are currently reading
35 people want to read

About the author

Inba Prabhanjan

3 books8 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
21 (67%)
4 stars
7 (22%)
3 stars
1 (3%)
2 stars
1 (3%)
1 star
1 (3%)
Displaying 1 - 8 of 8 reviews
49 reviews3 followers
Read
December 26, 2023
சோழம் நோக்கி மீண்டும் ஒரு முறை. எத்தனை முறை சென்றாலும் சலிக்காத உலகம் சோழம். ஆம் எங்களுக்குச் சோழம் ஒரு சிறிய நிலப்பகுதியோ நாடோ அன்று; சோழம் ஓர் உலகமே. அவ்வுலகில் தன் எழுத்தால் படிப்போரை வாழச் செய்யும் மேலும் ஓர் நூல்

அன்புத்தம்பி இன்பபிரபஞ்சன் எழுதிய 2ஆவது நூல். முதல் பாகத்தின் தொடர்ச்சியான இந்நூல் நிகழ்வுகளின்படி முதல் நூலிற்கு இடையிலும் முடிவிலும் நடைபெற்ற நடைபெற்றிருக்கக்கூடிய போர்களை மையப்படுத்தியது

போரில் இடம்பெறும் சூழ்ச்சி இந்நூலில் வரும் இருபோரிலும் பெரும்பங்கு வகிக்கிறது. தக்கோலப் போரின் முடிவில் சோழர் தோற்றது நாம் அனைவரும் அறிந்ததே. அதைச் சூழ்ச்சியின் மூலமும் திட்டமிடல் மூலமும் கங்க மன்னன் பூதுகன் வென்ற விதம் அருமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தக்கோலப் போரில் இழந்த காஞ்சியை சோழர்கள் மீட்டிருக்க வேண்டுமென்ற நம்பிக்கையில் அது எவ்வாறு நடந்திருக்கும் என்ற கற்பனையில் எழுந்ததே இந்நூல்

வரலாற்று உண்மை தழுவிய பக்கங்களை விரைவாக முடித்தேன். புனைவுப் பகுதியைச் சற்றுத் தயக்கத்துடனே தொடங்கினேன். எனினும் விறுவிறுப்பாகவும் நகைச்சுவையுடனும் கொண்டுசென்றது ஆசிரியரின் திறமை. நூலை விட நூலின் பின்னுரை எனக்கு மிகவும் பிடித்தது. முதல் பாகத்தில் வீரபாண்டியனின் வீரத்திற்கு முறை செய்யும் விதமாகப் போரை அமைத்த ஆசிரியர் இந்நூலில் வரலாற்றுண்மைக்குப் புறம்பாக எதையும் எழுதக்கூடாது என்ற ஒழுக்கக் கோட்பாட்டைத் தனக்குத்தானே வகுத்துக் கொண்டு அதைக் கண்டிப்புடன் கடைபிடித்துள்ளமை பாராட்டுக்குரியது. உண்மையைத் திரிக்கக்கூடாது என்று கண்ணும் கருத்துமாய் எழுதுவதுென்பது என்னைப் பொருத்தமட்டில் ஆகச் சிறந்த எழுத்தொழுக்கம்

பல இலக்கியச் செய்யுளை நூலில் ஆங்காங்கே எடுத்தாண்டது சிறப்பு. அதிலும் பகைவனாக வரும் பூதுகனுக்கும் ஒரு குறளைத் தந்தது வெகுசிறப்பு. கரிகாலன் பெயருக்கு ஆசிரியரின் புதிய விளக்கம் வெகுவாக மனத்தை ஈர்த்தது. முதல் பாகத்திற்கும் இதற்கும் ஆங்காங்கே சில நுட்பமான தொடர்புகளை வைத்து முதல் பாகத்தை நினைவூட்டும்படி அமைத்தது அருமை

படித்துக் கொண்டிருந்த நாளில் அவ்வப்போதும் படித்து முடித்த இரவும் தம்பி தூங்காமல் எனக்காக விழித்திருந்து உரையாடியதும் நினைவின்நீங்காநிகழ்வு. ஆதித்தகரிகாலன் 3ஆம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் வாசகர்களுள் ஒருவனாய்க் காத்திருக்கிறேன். தம்பி என்ற முறையில் சற்று அதிக உரிமை எடுத்துக்கொண்டு ஒரு சிறிய பாராட்டு; முதல் பாகத்தை விட இந்நூலில் தம்பியின் தமிழும் எழுத்தும் மேம்பட்டுள்ளன. தமிழ் போல் வாழ்க! தமிழால் வளர்க!

தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா!
1 review1 follower
May 22, 2022
* Such a beautiful script with loadssss of real facts and events...
* Those who love Prince Aditha Karikalan for his valour will love him even more for his prudence and cautiousness in this
* It's literally a small encyclopedia of our tradition practices and people lived back then how they treated even their rivals.
* U won't just fall for human characters there are even more special stuffs inside
* Once u start the book, within first few chapters itself u will feel the effort taken taken by our author.
* U will for sure have the heart warming moment by the magananimity of the chola prince
* It's so evident that our author have worked really hard to collect vast amount of information provided in the book.
* Everything felt so real .
* Normally people write fiction novels with little proven history but our author have written a real history book with little fiction in it.
* The way he have put together the real events with his own fiction moments is class. The best part is it all have blended together soo well u won't feel the flaw or lag anywhere.
* This one is for all
- PS lovers
- AK lovers
- Elephant lovers
- Information seekers
- History lovers
- Mahabharata lovers
- Spiritual people
* For AK - 1 it got marketing as a prequel to one huge masterpiece (PS) . But in this part author have proved his own uniqueness and his way of handling characters. Thats the speciality here.

It was just a Pleasing Violent Wise trip to Chola period.
2 reviews
May 22, 2022
This book seriously gave me pleasure while reading. All the sequence right from the "veerapandiyan thalai konda koparakesari"(1st part ) brought amazing goosebumps moments sink me in complete imagination world. The author took a different track of history I would say and it is an amazing book. Though we celebrate Raja Raja chozhan very much, the author put forward his elder brother aadhita karikaalan like who is aadhita karikaalan, who is uthamaseeli, how they lived, what their power was, how karikaalan took revenge on veerapandiyan to pay his tribute to his gandfather uthamaseeli in first part and the 2nd part was more than my expectation brought me double dose of goosebumps, he wrote about who are Rashtrakutas and how aadhita karikaalan defeated them in one of the notable thakkolam war in history to pay his tribute to his grandfather the great Raajadhithar. He brought out all the history without spoiling the real incidents happened actually that shows his genuineness with so much inscriptions as proof. Everyone must read this book to fall in love with aadhita karikaalan.
I fell already💙
Profile Image for Khiya_view.
20 reviews2 followers
July 27, 2022
ஆதித்த கரிகாலன் முதல் பாகம் முடித்தவுடன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. பொன்னியின் செல்வன் நாவலுடன் இந்த நூல் எவ்வாறு இணைய போகிறது அதற்கு இடைப்பட்ட கால கதைகள் எவ்வாறாக இருக்க போகின்றது என பல கேள்விகள் இவை அனைத்தையும் பூர்த்திசெய்யும் விதமாக இப்புத்தகம் அமைந்துள்ளது.

நேர்த்தியான கதையமைப்பு தங்குதடையின்றி நதியென நம்மை அழைத்து சென்றது. ராஜாதித்தர் மையமாக நகரும் கதை அவரின் போர்த்திறன் இந்நாவலின் தனி சிறப்பாக அமைந்தது. அருகில் நின்று பார்ப்பது போன்ற யுத்தகள வர்ணனைகள். ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்துக்கு ஒரு புது பொலிவு கிடைத்தது போன்றதொரு எண்ணம். (most people think him as just a love failure dude after ponniyin selvan well he is not just that. im just mentioning the fictional side here) யானைகளை பற்றி விரிவான தகவல்களும் யானைகளுடனான இளவரசர்களின் பாசப்பிணைப்பும் என்னை வெகுவாக கவர்ந்தது.

கனத்த மனதுடன் 3ஆம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

எழுத்தாளர் இன்பாவின் எழுத்தில் நல்ல முதிர்ச்சியை காணமுடிந்தது. முதல் நாவலில் இருந்த சிறி சிறு குறைகளை கூட இதில் இல்லை. And special appreciation for showing all the kings with much dignity i loved how they were just the grey characters instead of pure evil.
1 review1 follower
May 22, 2022
Loved it to the core! Must read nd recommended book! You satisfied our expectations with your twists..💥Sure to get amazed in every chapter nd ended with nice move! Gave so much, valuable info's at the right time..The closer view of Karikalan's character..,makes us to look wow..!Yeah there are places to get goosebumps too! 🔥Luckily experienced A journey to ur world of Thoughts.  Definitely everyone comes to know at the end.. 💯Why it was so much interested till the last word!
HATSOFF👏 To Your Hardwork,! This book gives u more reach than Part 1..வாழ்த்துக்கள்.. 💙
1 review1 follower
May 25, 2022
IThe experience of reading AK2 was beyond the first first part.
There were many new characters in this part and their characterisations blended well with the story plot.

The war scenes, the strategies were really intriguing.There were some great plot twists that made this novel more interesting.
Every scene was engaging and there was no lag in the story.

If you want to witness the glory and the bravery of Aadhitha Karikalan and his untold story, then this book is for you. Happy Reading!
1 review1 follower
May 23, 2022
I loved reading this book.
This book has multiple knots and twists..And our author untie every knot in his own way which made this story more interesting..your cameo role is unexpected.🤩.This book not only gave information about Adithya karigaalan,but also about Rajaadhithar. You(author) screened our pride chola golden era infront of the readers eyes.This is the must read book for who want to know about cholas😍.
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.