உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை;
பிரபஞ்சத்தின் அந்தரங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை;
சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை;
எல்லாவற்றையும்விட அதன் எளிமை இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்.
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக 2022ல் நடத்தப்பட்ட போட்டியில்.,இயக்குநர் லிங்குசாமி மற்றும் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 50 ஹைக்கூ புதுக்கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம். மேலும் முதல் மூன்று பரிசுகள் பெற்ற கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கவிதையும் நறுக்கு தெறித்தார்போல் மிகச் சிறியதாக இருப்பினும், மலையளவு சிந்தனையை தூண்டவல்லது . சில கவிதைகள் 'மிளகு' போல உரைக்கும்; சில 'தேன்' போல இனிக்கும். அதாவது 6 அல்லது 7 சொற்களின் மூலம் ஒரு முழு நிமிடத்திற்கும் கூடுதலாக சிந்தினையில் ஆழ்த்தக்கூடிய கனம் பொருந்திய கவிதைகள். எந்த ஒரு நிகழ்வையும் அழகாய் ரசிப்பவர்களாலும், எந்த ஒரு சமூக பிரச்சனையின் வலியையும் ஆழ்ந்துணர்ந்தவர்களால்தான் இப்படி நறுக் நறுக் எனக் கவிதைகளை வெளிக்கொணரமுடியும். மேலும் இந்த கவிதைகளை எழுதியவர்கள் 'கவிக்கோ' அவர்களின் வாசிப்பாளர்கள் என்பதாலோ என்னவோ அவரே எழுதியது போல் உள்ளது. ஒவ்வொரு கவிதையையும் ஒரு புத்தகம் போடலாம் எனும் அளவுக்கானது.
மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் இக்கவிதைகளை, எழுதியவர்களுக்கும் அதை தேர்ந்தெடுத்தவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
வாடியது கொக்கு ❤️ • கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி 2022 இல் பரிசுபெற்ற 50 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. அழகான மொழிநடையில் ஆழமான அர்த்தம் கொண்டு வடிக்கப்பட்ட இந்த ஐம்பது முக்கோட்டு ஓவியங்களும் தத்தம் நிலையில் தனித்துவம் வாய்ந்தவை. • [“வாடியது கொக்கு ஓடியவையெல்லாம் ஜோடி மீன்கள்.” —புத்தகத்திலிருந்து]
It will take not more than 1 hour to complete this Haiku Book. It has 50 Haikus. Some make you smile,some to think and some make you feel wow. Will make you read repeatedly.